தேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி!

டந்த  2011ஆம் வருடம் செப்டெம்பர் 20 அன்று பெரியார் திராவிட கழகத்தின், மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது, காமராஜருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு போடப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். எந்தவித நேரடியான அடிப்படை  ஆதாரமே இல்லாமல் பல மாதகாலங்கள் சிறையில் அடைத்து, பசும்பொன் தேவர் அவர்களை துன்புறுத்திய அந்த வழக்கின் உண்மைத்தன்மையை மீண்டுமொருமுறை தலித் / பெரியாரிய / தமிழ் இயக்கங்களில் தலைவர்கள் மத்தியிலேயே வெளிப்படுத்தி அந்த மேடையில் மற்ற யாருமே அதை மறுப்பு கூறாமல் மௌனம் காக்கவைத்த அந்த நிகழ்வை ஏற்படுத்திய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்களுக்கு அனைத்து தேவரின மக்களின் சார்பாக நன்றியை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), உள்ளிட்ட பலர் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:
“ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”
இதுதான் அவர் பேசியதின் சாராம்சம்.
இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ‘வினவு’ என்கிற இணையத்தின் கட்டப்பஞ்சாயத்து கும்பல், தனது தலித் பாசத்தையும், தலித் அல்லாதோர் மீதான தனது வெறுப்பையும் பதிவேற்றி தங்களது முகமூடியை அடிக்கடி கிழித்து கொள்கின்றனர். உண்மையிலேயே இந்த ‘வினவு’ இணையத்தளமானது, இந்திய – தமிழக மக்களை சீர்குலைக்கும் நோக்கிலேயே செயல்படுகிறது. மக்களாட்சியை விரும்பாத இந்த வினவு கும்பல், இதுமாதிரியான சில்லறைத்தனமான அரசியலையே ‘ஊடகம்’ என்ற பெயரில் கையில் எடுத்து பிழைப்பு நடதுக்கின்றனர். ஏது எப்படியோ பெ.தி.க. வழக்கறிஞர் துரைசாமி போன்றோர் இன்னமும் இங்கே மேடைகளில் தன்னிலை மறந்து உண்மையை உரக்க சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவரினம் யென்றும் தங்களது ஆதரவை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும்.
தேவர்தளத்திற்காக,
இரா.ச.இமலாதித்தன்
This entry was posted in வினவு and tagged , , . Bookmark the permalink.

One Response to தேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *