ஜமின் பற்றிய குறிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஜமின் ஊர்களில் குருக்கள்பட்டியும் ஜமினாக இருந்துள்ளது,
சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் இன்று வரை குருக்கள்பட்டி க்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது,
ஜமின் ஆக இருந்த குருக்கள்பட்டி சில காரணங்களால் ஜமின் ஐ இழந்தது,
நீலியம்மாள் என்ற பெண்ணின் கணவரை விசாரணை என்ற பெய
ரில் அழைத்து வந்த ஜமின் அவரை கொன்று விட்டனர்,தன் கணவரை காணவில்லை என தேடி வந்த நீலியம்மாளிடம் குருக்கள்பட்டி யை சேர்ந்த சிலர் உன் கணவரை ஜமின் கொன்று விட்டனர் இவர்களை உன்னால் எதிர்க்க முடியாது ,கட்டபொம்மனால் மட்டுமே இவர்களை எதிர்க்க முடியும் எனவே நீ திருசெந்துர் முருகன் கோவில்க்கு வெளளி கிழமை தோறும் கட்டபொம்பன் வருவார் அவரிடம் சென்று முறையிட்டால் அவர் உனக்கு உதவி செய்வார் என அனுப்பி வைத்தனர்,
நீலியம்மாள் முருகன் கோவில் சென்று கட்டபொம்மனிடம் உதவி கேட்டாள் உடனே கட்டபொம்மன் உனக்கு உதவி செய்கிறேன் என உறுதியளித்தான் கட்டபொம்மன்.
ஆடிதபசு அன்று குருக்கள்பட்டி ஜமின் மற்றும் குருக்கள்பட்டி மக்க்ள் அதிகம் பேர் தபசு க்கு சென்றுவிட்ட நேரத்தில் கட்டபொம்மன் படைகளுடன் குருக்கள்பட்டி க்கு வந்து பல பெண்களை கொன்று ஜமின் சொத்துகளை கொள்ளையடித்து சென்று விட்டடார்..
தபசு மடிந்து ஊர் திரும்பிய ஜமின் அதிர்ந்து போயினர், நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதால் ஜமின் அதலிருந்து மீள முடியவில்லை, மேலும் ஜமின் க்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தாலும் ஊத்துமலை ஜமினுடன் இணைக்கபட்டது..
நீலியம்மாள் எனற அந்த பெணெணின் நினைவாக தான் நீலிதநல்லுர் எனற பெயர் வைக்கபட்டுள்ளது.
One Response to குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு