Comments on: அச்சுத களப்பாளன் https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d/ தேவர்தளம் Sat, 29 Sep 2018 15:00:30 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: Cheran https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d/#comment-12351 Sat, 29 Sep 2018 15:00:30 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1212#comment-12351 களப்பிரரும், களப்பாளரும்
களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.

களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்).
களப்பாளர் என்போர் வேளாளருக்குத் தலைவராகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய பெருமக்கள். நெற்குன்றவாணருக்குக் களப்பாளராயர் என்னும் பெயரும் உண்டு. [2]
பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள கூற்றுவ நாயனார், சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் ஆகியோர் களப்பாளர் மரபில் தோன்றியவர்கள். [3]
களப்பாளர் உத்தண்டன்

]]>
By: கவிவர்மன் https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d/#comment-12082 Sat, 25 Aug 2018 11:48:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1212#comment-12082 “தமிழகத்தை ஆண்ட களப்பாளர்களின் கொடியில் வில், புலி, கயல் மூன்றுமேஇருந்தன”….. ஏன்?

வேற்று நாட்டைச் சார்ந்தவர்கள் தமிழகத்தைப் பிடித்திருந்தால், தம் கொடியையல்லவா ஏற்றியிருப்பார்கள்! எப்படி மூவேந்தர்களின் கொடிகளை ஏற்றினார்கள்?

“என்னைப் புகழ்ந்து உன் தமிழில் பாடினால் உன்னை விடுதலை செய்கிறேன்” என்று அச்சுதன் சோழ வேந்தரிடம் கேட்டானாம்….அப்படியென்றால், அச்சுதனின் தாய்மொழியென்ன அரபு மொழியா?

கி.பி 250 களிலெல்லாம் கர்னாடகத்தில் வழங்கிய மொழி தமிழே! எவ்வாரெனில்,
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடகாவில் பவணந்த முனிவரால் ‘நன்நூல்’ எனும் தமிழ் இலக்கண நூல் இயற்றப்பட்டது எப்படி? …

புராணத்தை விடுத்து உண்மைகளை எழுதுங்கள்…

வைதீகத்தை தலைகளில் தூக்கி வைத்து ஆடிய மூவேந்தர்களை சிந்தனை மரபில் வளர்ந்த தமிழர் குடிகள் (ஆசீவகம், சமணம், பெளத்தம் போன்றவைகளை ஏற்று) சிற்றரசர்களோடு இணைந்து, மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பதுதான் உன்மையாக இருக்கமுடியும்.

மூவேந்தர்களை வீழ்த்தும் அளவிற்கு அச்சுதன் படை கொண்டுவந்தானா?…
வைதீகத்தை அழிக்க களத்தில் இரங்கிய புரட்சித்தமிழர்களின் 300 ஆண்டுகள வரலாற்றை சுவடுகள் தெரியாமல் அழித்துவிட்டு….இருண்டகாலம் என்றா சொல்கிறீர்கள்? … உங்களுக்கு என்று மூட வைதீக மயக்கம் தீருவது?… என்று தமிழனாகச் சேருவது?

உண்மை உறங்காதென்பார்கள்!?

]]>