(அஞ்சுகொத்து மறவர்கள்)
உ.மீனாட்ச்சி துனை
“காரார் குழலி பவள செவ்வாய்ச்சி
கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள்
திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர்
போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி
“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)
“மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)
“திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:142)
“திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”
அச்சுதராயர் விஜயநகர அரசராக இருந்தார். அப்போது விஸ்வநாத நாயக்கர் மதுரை மண்டலேஸ்வரராக இருந்த காலம் அனேகமாக (1534-1534) ஆக இருக்கலாம்.
(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் )
திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்
http://thevar-mukkulator.blogspot.in/2014/03/blog-post_17.html
கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு :
இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.
செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.
1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு……திருக்கானப்பேர்க்கூற்றத்து
2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி
3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை நாடாழ்வார் தேவி
4 . …வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா
நன்றி-ஆவணம்-1993,ப.26
பழையனூர் நாடாழ்வார்:
மேலே சொன்ன திருக்கானப்பேர் கூற்றம் என்பது காளையார் கோவில் அமைந்த சிவகங்கை மாவட்டம் தான். இதில் பழையனூர் என்பது திருப்புவனம் அருகே உள்ள ஒரு ஊர். இது பழையனூர் என்பது பழைய பாண்டியனான பழையன் மாறன் என்னும் ஆதி மறவனுடைய ஊர். இன்னும் பழையன் மாறன் என்பவரின் வம்சம் இன்னும் பழையனூரில் வாழ்கின்றனர். அவர்கள் மறவர். வருட திருவிழாவில் கொடைக்கானலில் வாழும் பழியர்கள் மற்றும் வலையர்களால் இன்னும் பழையனூர் மாறன் மறவர் குலத்தினருக்கும் முதல் மரியாதை தருகின்றனர்.
பழையனூர் பத்து அம்பலக்காரர்கள் முதல் மரியாதை வாங்கு கின்றனர். இவர்கள் அனைவரும் செம்பி நாட்டு மறவர்கள். இன்னும் அந்த ஊரில் வாழ்கின்றனர். இவர்களே அந்த கல்வெட்டில் குறிப்பிட்ட பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள். இவர்களை இன்றும் கானலாம். வருட சிவராத்திரியில் அந்த பத்து நாட்டம்பலம் வாங்கும் முதல் மரியாதையை கானலாம்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் முதல் மரியாதை பெறும் மறவர்
நாட்டு அம்பலக்காரர்:
நரசநாயக்கனின் மதுரை படையெடுப்பை பற்றி அச்சுதராயரின் அப்யுக்தத்தில்
“மதுரா மகேசம் மறவாய தத்வம்” என மதுரை ஆண்ட மானக்கவசன் என்னும் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் என்னும் மானக்கவசனை நரசநாயக்கன் துருக்கரின் உதவியில் வீழ்த்தினான்.
நரச நாயக்கன் மானபூசன் என்னும் மானக்கவசனையும் பஞ்சபாண்டியரையும் வீழ்த்தினான் என குறிப்புகள் உள்ளது.
இதன் பிறகும் மானபூசன் பல சாசங்கள் வெளியிட்டன் என வரலாறு கூறுகின்றது.
“மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி”
என குலசேகரன் கல்வெட்டு கூறுகின்றது S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)
சோழரின் கல்வெட்டில்:
சோழரின் கல்வெட்டிலே அஞ்சுக்கோட்டை நாடாள்வானும் கற்குடி மாறாயனும் மறவர் குலத்தை சார்ந்தவர்கள் என கல்வெட்டில் குறித்துள்ளனர்.
மதுரையை வாணாதிராயனுக்கு முன்னே ஆண்ட அஞ்சுக்கோட்டை மற்றும் கொற்க்கை பாண்டியனான மானக்கவசனும் மானபூசனும் மறவனே என தெரிகின்றது.
நன்றி:
ஐவர் ராசாக்கள் கதை
இராமநாதபுரம் தொல்லியல் துறை
ஆவணம்-தமிழ்நாடு தொல்லியல் துறை
மதுரையை ஆண்டுகொண்டிருந்த துருக்கர்களை விரட்டிவிட்டு நாயக்கர்கள் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்திருந்த பாண்டிய அரசமரபினருக்கோ அதிர்ச்சி. வந்த தெலுங்கு தளபதிகள் மதுரையில் நிலையாக புதிய அரசை அமைக்கவேண்டுமென விரும்பி அதற்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Continue reading →