ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்

தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் “கள்ளர்” “மறவர்” “அகமுடையர்” சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

உறவுமுறைகள்

இச்சாதியில் கிளைகள் (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக தங்கமுடி(மகுடம்) என்ற கொத்துக்கு அரசங்கிளையும், சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது.அது போல் ஓணான் என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குள் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள சிவகளைப் பிள்ளைமார் எனப்படும் “நன்குடி வேளாளர்”நன்குடி வேளாளர்”இல்லத்துப்பிள்ளைமார்” இல்லத்துப்பிள்ளைமார் போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.

பண்பாடு

இந்த சாதிப் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) பாப்படம் (தண்டட்டி) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த தகவல்கள் “இராமநாதபுரம் மாவட்டம்” இராமநாதபுரம் மாவட்டம்”முதுகுளத்தூர்”கமுதி வட்டங்களிலும், “திருநெல்வேலி மாவட்டம்”திருநெல்வேலி மாவட்டம்”சங்கரன்கோவில்”சங்கரன்கோவில்”வாசுதேவநல்லூர்” வட்டங்களிலும், “தூத்துக்குடி மாவட்டம்” மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

This entry was posted in மறவர் and tagged . Bookmark the permalink.

8 Responses to ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *