ஒரு இயக்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து ,
அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து ,
அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பங்குக்கொண்டு,
அந்த இயக்கத்தின் பொருளாதாரம் ,சுக துக்கத்தில்
செயல்பாட்டில் ,களப்பணியில் பங்கெடுத்து
பணியாற்றுபவனே உண்மை தொண்டன் .
எந்த ஒரு இயக்கத்திற்கும் நூறு உண்மை தொண்டன்
இருந்தாலே அதன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும்
தடுக்க முடியாது . ஒரு கெட்ட தலைவனை கூட
நல்லவனாக ,செயல்பாடு உள்ளவனாக மாற்ற
ஒரு உண்மை தொண்டனால் முடியும் .
சும்மா கோஷம் போடுவதும் ,ஜானா காட்டுவதும் ,
பீலா விடுவதும் ,தலைவனின் பெயரை கெடுப்பதும் ,
தண்ணி போட்டு ஆடுவதும் எந்த இயக்கத்திற்கும்
எந்த தலைவனுக்கும் அவப்பெயரைதான் ஏற்ப்படுத்தும்
நீங்கள் முதலில் ஒரு உண்மை தொண்டனாய் இருங்கள்
பிறகு தலைவனை குறை சொல்ல கிளம்புங்கள் ..
மழை பெய்தால் கூட அது ஆதிக்க ஜாதியின் சதி
என்று சிலர் சொல்வது போல ,ஒரு சிறிய விசயத்திற்கும்
நம் தலைவர்களை குறை சொல்வதே நமக்கும் வேலையாக
இருக்கு. முதலில் நமக்கான ஒரு உணர்வுள்ள ஒரு
உண்மை தலைவனை தேர்ந்தெடுங்கள் ..அவர்களோடு
இணைந்து பணியாற்றுங்கள் . போராடுங்கள் .
அதை விட்டு கணினி முன்னால் அல்லது
முதுகுக்கு பின்னால் நின்று குறை சொல்லி
நம் செயல்பாடுகளில்ஒன்றாக “குறை சொல்வதையும்”
சேர்த்தால் அது நமக்கு அழிவைத்தான் தரும் ..
ஒரு தலைவனுக்காக எத்தனை ஆண்டு ஜெயிலில் இருந்திங்க,
எத்தனை போராட்டங்களில் பங்கேடுத்திங்க ,எத்தனை கோடி
செலவு பண்ணிங்க ,அட இனத்திற்காக என்ன தான் செஞ்சிங்க
இதையெல்லாம் சிந்தித்து பிறகு பேசுங்கள் ..சிந்தித்தால்
உங்களால் யாரையும் குறை சொல்ல முடியாது ..
நம் தேவர் இனத்திற்காக தன் உயிரை தியாகம்
செய்தவனை விடவா நீங்கள் சாதித்துவிட்டிர்கள் ???
நம் இனத்திற்காக உழைப்பது என்பது யார் சொல்லியோ
வருவது அல்ல ..அது நம் ஒவ்வொருவரின் கடமை ..
நம் முன்னோர்களின் சாதனைகளில் அவர்களின்
கால் தூசி அளவில் கூட நாம் சாதிக்கவில்லை ..
முதலில் நாம் யார் ,இனத்திற்காக நாம் என்ன செய்யணும்,
அதையும் எதுக்காக செய்யணும் , எப்படி செய்யணும்
என்பதை உணருங்கள் .பிறகு செயலாற்றுங்கள் .
எந்த ஒரு முக்குலத்து தலைவராலும் ஒட்டுமொத்த
நம் இனத்தையும் தாங்கி நிற்க முடியாது .
எனவே நம் ஒவ்வொருவரின் பங்கும் வேண்டும்
நாம் அனைவரும் செயலாற்றனும் ..நமக்கு
எதிராக மலையளவு பணி உண்டு .
ஆனால் நாம் கடுகளவு கூட சாதிக்கவில்லை .
எனவே நம் இனம் காக்கும் பணிகளில் “நான் தான்”
என்று மார்த்தட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை.
இவை அனைத்தும் எனக்கும் சேர்த்து எழுதப்பட்டதுதான்
உணர்வுடன்
உங்களில் ஒருவன்
மேகநாதன் தேவன்