கடுங்கோன் பாண்டியன்-கி.பி. 575-600

pandian012

இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முத்தொள்ளாயிரம் என்னும் நூல் கடுங்கோன் என்னும் பெயரால் பாண்டிய மன்னன் ஒருவனைச் சுட்டுகிறது. [1] வேறு சான்றுகள் கடுங்கோனைப் பற்றிக் கிடைக்காததால் இவனை வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியர் பட்டியலில் ஒருவனாகக் கொள்ளலாம்.

‘கடுங்கோ’ என்னும் பெயருடன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனும், பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர்களும் காணப்படுகின்றனர்.

கடுங்கோன், கடுங்கோ என்னும் பெயர்களை எண்ணும்போது முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் இருந்த குமரிக் கண்டத்தில் சேர சோழ பாண்டியர் பாகுபாடு இல்லை எனக் கொள்ள இடமுண்டு.

ஆயின் குமரிக்கண்டத் தமிழர் பாண்டியர் எனத் தகும்.

பிற்காலத்தவர் :

கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-

 

களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல் தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப் பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித் தன்பால் உரிமை நன்கனம் அமைத்த மானம்போர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்

இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.

அடிக்குறிப்பு :

  1. ↑ முத்தொள்ளாயிரம் 47
This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *