கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்

செம்பியன் மாதேவி

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.
2. கணவர் கண்டராதித்த சோழன்
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன்
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்
உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும். செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை
1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.
கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.

இன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில் இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை  சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர். ஒரு சரித்திரப் பெண்மனியின்  வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரைஉளமார வாழ்த்துவோம்.
….
This entry was posted in கள்ளர் and tagged . Bookmark the permalink.

2 Responses to கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *