கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

maravar

கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130 முதல் 140 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.

  1. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி – 3
  2. வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி – 21
  3. வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
  4. வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம். [1] பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம். [2]

குறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

“சினப்போர் வழுதியே! ‘தண்தமிழ் பொது’ என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ” என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.

“வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!”

என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.

மேற்கோள்களும் குறிப்புகளும் :

  1.  ஐயூர் முடவனார் – புறம் 51
  2.  மருதன் இளநாகனார் – புறம் 52
This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *