தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. பண்டமாற்று முறை முடிவுக்குப்பின் சரியான மாற்றுப் பொருளாகநாணயங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். அதைக் காலப்போக்கில் மெருகேற்றி அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தார்கள்.
மக்களிடையே புழங்கி வந்த நாணயங்கள், வரலாற்றுக் காலத்தை வரையறுக்க உதவும் சான்றுகள் ஆகின்றன. சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்துநாணயங்கள் கண்டறியப்படவில்லை.
சொக்கநாதப் புலவர் இயற்றியதுதான் பணவிடுதூது. இவர் திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அப்பொழுது சேதுபதியை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மீது பாடப்பட்டதுதான் இப் பணவிடுதூது என்றும் கூறுவர். இந்நூலில் பணத்தின் அதாவது, பல்வேறு காசுகளைப் பற்றிய செய்திகளையும் பெயர்களையும் புலவர் குறிப்பிட்டுள்ளார். காசு குறித்து 36 சொற்களை அவர் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:
பொன், தாது, அத்தம், ஆடகம், வெறுக்கை, ஈகை, வேங்கை, சாதரூபம், கல்யாணம், ஏமம், மா, நிதானம், அரி, மாடு, மோகரம், சம்பங்கி, சாணான் காசு, ஈடு, தங்கக்காசு, சந்தமிக் காசு, பெருங்காசு, கருவெருமை நாக்கு, பெருங்கீற்று, சன்னக்கூற்று, வராகன், மாடை, வெட்டு, நாணயம், கோழி விழுங்கல், நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழா நெல்லிக்கொட்டை, சில்லறை, மட்டம், கம்பட்டம்.
இந்நாணயங்களின் பெயர்களில் பல இன்று வழக்கொழிந்து போய்விட்டதால், அவற்றின் மதிப்போ, வடிவமோ அறிய இயலவில்லை. அச்சாகியுள்ள இராமலிங்கேசர் பணவிடு தூது, திருவேங்கடேசர் பணவிடு தூது ஆகிய நூல்களையும் வைத்து ஒப்ப நோக்கும்பொழுது, கோழி விழுங்கல் போன்றவை குற்றமுள்ள நாணய வகை என்பது தெரிகிறது. நாணயம் செய்முறையில் ஏற்படும் குற்றங்களை வைத்தே கோழி விழுங்கல் என்பது போல, நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழாநெல்லிக் கொட்டை முதலிய பெயர்களும் இடப்பட்டிருக்க வேண்டும்.
“”நாணயம் ஒன்று குறிக்க, இவ்வாறு 36 பெயர்கள் இருந்தமை நோக்கத் தமிழின் மொழி வளப்பமும் தமிழரின் பண்பாட்டு வளர்ச்சியும் புலனாகிறது” என்று எழுதியுள்ளார் இந்நூலைப் பதிப்பித்து, குறிப்புரை எழுதியுள்ள இரா.நிர்மலாதேவி.
சேதுபதி மன்னர்கள் நாணயங்கள்
சிவகங்கை கெளரி வல்லப உடையணத்தேவரின் நாணயங்கள்
SIVAGANGA ZAMIN COINS
INDIA, SIVAGANGA, c. 1743-1801, copper 2 kas, K-nl, diety pair standing / lingam on altar, bull recumbent L, slightly porous, VF
INDIA, SIVAGANGA, c. 1743-1801, copper 2 kas, K-nl, Venkata(?) stg facing / lingam on altar, bull recumbent
INDIA, SIVAGANGA, c. 1743-1801, copper 2 kas, K-nl, MN-1234v, lion R / garlanded lingam on altar, VG/VF $18.00
Obverse : Standing RamaReverse : Shiva lingaWeight : 3.2 grams
Metal : Copper
Obverse : Rama and Sita
Reverse : Shiva