ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.

மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர்.

 அரசன் தொண்டைமான் சேதிராயர்:

இவர் சிவகங்கை மாவட்டம் அரும்பாவூர் கோயில் இறைவனுக்கு நிலகங்களை தானமாக கொடுத்தை செய்தியாக தெரிகிறது காலம்: மூன்றாம் ராசராசர் கி.பி.1238 “ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோயிலுக்கு……அரைசன் தொண்டை மான் பெருமாள் பிள்ளையான் சேதிராய தேவனான் அரும்ப
உடையார்……………..” இவர் இப்பகுதியை ஆண்ட சேதிராய உடையாராக இருக்கலாம்.இவர் அம்புகோயில் ஆண்ட தொண்டைமான் சேதிராயர அல்லது அரும்பாவூர் சேதிராயராக இருக்கலாம்

மந்திரி ஞான சேதிராயன்:

காளையார் கோயில் தலத்தையும் விஞ்சை என்னும் நெட்டுர்தல்திய்ம் திருப்பனி செய்தவன் சேது நட்டு சேதிராயன் என்னும்
மந்திரி,பாண்டியநாட்டை சோழர் வென்றுகொண்ட போது பாண்டியன் நாடு வேண்டி வர பாண்டிய ராஜாவால் சோழருக்கு தூது சென்ற தலைவன். “தெருக்களுமாடமும் கோபுரம்மும்….. …..திருக்குளமும்கண்டான் மந்திரி சேதிராயன்.” இவர் பாண்டியனின் மந்திரி ஆக இருந்தவர்.

வேனாடன்:

இவர் சேர நாட்டில் இருந்து சேது நாட்டுக்கு குடி புகுந்த “கொடுமூர் பெரிய பிரபு வேனாடன்” இவரை விக்கிரம்சோழணூலா வில்”கலி தனை பாரில் விலக்கிய வேனாடன்”. இவரே சேது நாட்டில் சாளைகிரமங்கள்(வைனவ திருத்தலங்கள்) கண்டவர்.இவர் சேர நாட்டை சார்ந்த வேனாடு எனற பகுதியை ஆண்ட நாடாழவ சேதிராயராக இருக்கலாம். இவர்களளெல்லாம் சேதிராய உடையார் வம்சத்தவர்களெ

சேதிராயர் :

என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.
சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர். திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார் கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.
தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை ‘நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை ‘நடுநாடு’ என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ? உண்டு.
சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும். சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும். ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர் இதன்படி சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது.
சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள். இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். ” திரு விசைப்பாவின் திரு கடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர் ” ……….
” ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன ” என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. இங்கு
சேதிராயர் ” சேதிபர் கோன் ” என விளிக்கப்பட்டுள்ளனர். இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.


சேதி என்பது குல பெயர் ஆகும்.
” முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
திருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் ‘சேதியர்’ என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம்.

இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும்.
ஆனால் வரலாறு என்பது இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது. அதன்படி கல்வெட்டு ஆதாரம் ஏதும் உண்டா? எனில் உண்டு.
1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.
2. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் “பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்” என்றும்; இப்பதி “மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து …………………..இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.
மேலும் சில கருத்துக்களை பார்ப்போம்.
போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்), வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது. ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள்.

மேலும் சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது.
ராயர் எழுதுவராவர்: 1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . பாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது.
அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.

This entry was posted in இணையம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *