ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
அதில் ஒரு சிலபெண்கள் கிணற்றுக்கு அருகில் வராமல் தங்கள் குடங்களுடன் கொஞ்சம் தள்ளி தனியே நின்று கொண்டிருக்க அந்த செல்வந்தரின் மகனான சிறுவன்தான் இறைத்து அந்த பெண்களுக்கு நடந்து போய் ஊற்றிகொண்டிருந்தார். எதனால் இப்படி அந்த பெண்களையே எடுத்துகொள்ள சொல்லலாமே என்று தேவர் தன் நண்பரிடம் கேட்க அதற்கு அவர் இவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்த பெண்கள் எனவே அவர்கள் இந்தகிணற்றில் தண்ணீர் பிடித்தால் தீட்டாகிவிடும், மற்ற யாரும் தண்ணீர் பிடிக்கமாட்டார்கள், அதனால் தான் இந்த ஏற்பாடு என்றார்.
உடனே தேவர் கூறினார் சரி நான் கிளம்புகிறேன், இனிமேல் இங்கு வரவும் மாட்டேன், இப்போது இங்கே விருந்தும் உண்ணபோவதில்லை, தாழ்த்தப்பட்ட பெண்களும் மனிதர்கள்தானே அவர்களை இந்தநிலையில் வைத்திருக்கும் இடத்தில் என்னால் கைநனைக்க என் மனம் இடம் தரவில்லை என்று கூறினார்.
உடனே அந்த நண்பர் பதறிபோய், ஐயா மன்னித்துவிடுங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது, இப்பொழுதே அவர்களை எடுக்க சொல்கிறேன் என்று கூறி அந்தப்பெண்களை உடனே கிணற்றில் தாங்களாகவே தண்ணீர் பிடித்துக்கொள்ள அனுமதி அளித்தார்.
பின்பு தேவரும் விருந்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். அன்றிலிருந்து அந்தவீட்டில் உயர்ஜாதி மக்களை போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கபட்டார்கள்.
குறிப்பு: இந்தசம்பவத்தில் வரும் தேவரின் நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களுடைய தந்தை ஆவார். தண்ணீர் இறைத்துக் கொடுத்த அந்த சிறுவன்தான் திரு. தா.பாண்டியன் அவர்கள். இதை தா.பா அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னார்.
முகநூலில் பகிர்ந்தவர் – அழகுத் தேவர்