தென்னாடு

சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார்.

இவருக்குப் பின்னால் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமல் போகவே இவருடைய இரண்டாவது மனைவியின் மகன், ரெகுநாத தேவனை மறவர்குள மக்கள் கி.பி.1674ம் ஆண்டு பட்டம் சூட்டி வைத்தார்கள். கிழவன் சேதுபதி என்ற பெயரில், இவர் சேதுநாட்டை ஆண்டு பெரும் பேரும் புகழோடு 39 ஆண்டுகள் ஆட்சி ஆண்டு சேது நாட்டின் பெயரை உயர்த்திய வீரமன்னனாகும்.

.

.

இந்தக் கிழவன் சேதுபதியின் படைகளைக் கண்டு மதுரை , தஞ்சை அரசர்கள் அஞ்சினர். கிழவன் சேதுபதி மதுரைக்கு செலுத்த வேண்டிய கப்பப் பணத்தையும் கட்ட முடியாது என நிறுத்தி விட்டார். தனது நாட்டில் சாதிப் பற்றையும்.உறவினர்கள் கூட்டமும் உடைய, அகமுடையர் இனம் சேது நாட்டில் நிறைந்தது இருந்தனர். கிழவன் சேதுபதியின் ஆத்தா அகமுடையர். அந்தக் காலத்தில் சேதுபதி அந்தக் காலத்திலேயே முக்குல மக்களின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருந்தார் என தெரிகிறது.

கி.பி.1700க்குப் பின் தஞ்சையும் மதுரையும் உறவினர்களாக இருந்தன. அந்த நேரம் கி.பி.1702ல் தஞ்சை படைகளின் உதவியோடு தளவாய் நரசப் பையன், சேது நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் நரசப்பையன் போரில் மாண்டான். கிழவன் சேதுபதி மதுரை படைகளை ஊரைவிட்டே விரட்டி விட்டு, தன் ஆட்சியை தனியாட்சியாக்கிக் கொண்டார். அத்துடன் 1709ல் தன் மீது படை எடுத்து வந்த தஞ்சை அரசன் ஏக்கோசியை வென்று அறந்தாங்கியை கைப்பற்றினான்.

கி.பி. 1662ல் மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரை ரஷ்டம்கான் என்பவன், அரசனைக் கோட்டைக்கள்ளேயே கைதியாக்கி வைத்துக் கொண்டு, மதுரையை தன்வசமாக்கிக் கொண்டான். சிறைப்பட்டு இருந்த சொக்கநாத நாகக்கன் கண்ணீர் விட்டு கதிகலங்கி தன்னைக் காப்பாற்றும்படி தூதுவன்ன மூலம் கிழவன் சேதுபதிக்கு தெரியப்படுத்தினான். இதைக் கேட்ட சேதுபதி கடுங்கோபத்தோடு,

தன் படைகளுடன் விரைந்து மதுரை நோக்கி வந்து மதுரையைச் சுற்றி வளைத்துக்கொண்டார். இவர்களின் படைகளின் முற்றுகையைக் கண்ட சொக்கநாதன் மதுரை மன்னரையும், இவருடைய மனைவி குழந்தைகளையும் கொன்று விட எண்ணினான். இந்த விஷயம் செதுபதிக்குத் தெரிந்து விட்டது. உடனே அன்று இரவு படைத்தலைவர்கள் அனைவரையும் ரகசியமான இடத்தில் கூட்டி வைத்து,

உருக்கமாக என் வீராதி வீரர்களே தளபதிகளே, தன் உயிரை திரணமாக மதிக்கும் மறவர் பெரும் மக்களை மதுரை மன்னன் சிறையில் இருக்கும் போது, ராசத்துரோகி ரஷ்டம்கான் உயிருடன் இருப்பதா,? உங்களின் வீரத்தை நீங்கள் தாங்கி இருக்கும் வாள் முனையில் எதிரிகளின் ரத்தம் சிந்திக்காட்டுங்கள். நாளைக்கு நீங்கள் ரஷ்டம்கான் தலையைத் துண்டாக்கிக் காட்டாவிட்டால் நம்முடைய ஆண்மையும் போர்த் திறமையும் நகைப்புக்கு இடமாகும் என்று பேசியதால் இரவோடு இரவாக வட்ட வடிவமாக கோட்டையை வியூகமாக வளைத்துக் கொண்ட மறவர் படைகள் பூகம்பம் போல பொங்கி எழுந்து கோட்டை மதில்கள் மேல் ஏறி நின்று எதிர்த்து வந்த எதிரிகளை கண்டதுண்டமாக வெட்டடித்தள்ளினர். கோட்டைக்குள் மறவர் படைகள் இறங்கி விட்டனர்.

மிகவும் பாதுகாப்பான கோட்டைக்குள் இடிமுழக்கத்துடன் தாக்குதல் நடந்தது. இதற்குள் இருக்கும் சேனைப் படையுடன் தொடர்பு கொண்டனர். கொஞ்ச நேரம் சண்டையில் ஆயுதங்களின் ஓசைகளுக்கிடையே ரஷ்டம்கான் தலை துள்ளி கீழே விழுந்தது. எங்கும் வெற்றி முரசு எழும்பியது. சிறைபட்டு இருந்த சொக்கநாதநாயக்க மன்னன் இவர் மனைவி பிள்ளைகளோடு விடுதலையானார்கள். தன் படையினர் காட்டிய வீரச்செயலை பாராட்டிய சேதுபதிக்கு மகிழ்ச்சி உண்டாகியது.

கி.பி.1689ல் சொக்கநாத நாயக்கர் மனைவி மங்கம்மாள் தன்னுடைய பேரன் சிறுவனாக இருந்ததால், ஆட்சியை தான் ஏற்று நடத்தி வந்தாள். கிழவன் சேதுபதி தஞ்சை மன்னருடன் சேர்ந்து சதி செய்து மதுரை மேல் படை எடுக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிழவன் சேதுபதியை தண்டிக்கும் நோக்கத்தோடு கி.பி.1702ல் ராணி மங்கம்மாள் 4500 பேர்கள் அடங்கிய படைகளை ஏவி இராமநாதபுரத்தை பிடிக்கச் செயல்பட்டால் என்ன பயன்.

மதுரைப் படையை புறங்காட்டி ஓடும்படி நாயக்கர் படைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்கும் மறவர் படைகள் விரட்டி அடித்தனர். இரு தரப்பிலும் அதிகமான வீரர்கள் இறந்தும் விட்டார்கள். பிரிடோ பாதிரியார் என்பவர், கிழவன் சேதுபதிக்குப் பின் பட்டத்திற்கு வரவேண்டிய தேவர். அவரை கிறிஸ்துவ மதத்தில் சேரும்படி செய்து விட்டார். இதனால் நாட்டில் நடந்த சில வேலைகளைக் கொண்டு பெரும் கலவரம் உருவானது.

உள்நாட்டில் அதனால் கி.பி.8.1.1693ல் பிரிட்டோ பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு விரோதமாக செயல்பட்டார் என்று பலாத்காரச் செயலில் ஈடுபட்டார் என்று இரண்டு குற்றங்களுக்கும் பிரிட்டோ பாதிரியார்க்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது.

கி.பி. 1710ல் கிழவன் சேதுபதி மறைந்து விட்டார். அப்போது அவருடைய வயது 80. இவருடைய மனைவியர்கள் 48 பேர்களும் உடன்கட்டை ஏறி தன் கணவருடன் சேர்ந்து மடிந்தார்கள். கிழவன் சேதுபதிக்குப் பின் பட்டத்திற்கு யார் வருவது என்ற போட்டி ஏற்பட்டது. பவானி சங்கரத் தேவருக்கும் விஜய ரகநாதத் தேவருக்கும், அந்த நேரத்தில் பல தொல்லைகள் நாட்டில் நடந்து வந்தன. கடைசியில் பவானிடியே பட்டத்திற்கு வந்தார். கி.பி.1729ல் பவானி சிவகங்கையை கைப்பற்றினார். சிவகங்கை பாளையக்காரர் சசிவர்ணத்தேவர் தஞ்சை மன்னரின் உதவியோடு சேதுச் சீமையை மீட்டனர்

This entry was posted in சேதுபதிகள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *