தேவர்கள்:

தேவர்கள்:

இவ்வினத்தில்மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர்,அகமுடையார். இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய சென்றுவிட்டார்.
அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி வந்தபோது ஒரு குழந்தை கதவுக்கு பின்னால் கள்ளத்தனமாக ஒளிந்து இருந்ததால்
கள்ளன் என்றும் மற்றொருவன் மரக்கிளையின் மீது அமர்ந்து இருந்ததால் மறவன் என்றும், மற்றொருவன் தைரியமாக வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்ததால் அகமுடையான் (அகந்தை) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு எட்கர் தார்ஸ்டன் செவிவழிச் செய்தியைக் கேட்டு தன்னுடைய புத்தகத்தில்
எழுதியிருந்தாலும் வரலாற்றில் இப்படி இல்லை …இதை எட்கர்
தார்ஸ்டன் ஏற்கவும் இல்லை .மேலும் மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர்
சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது நம்மை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது …

மேலும் திரு.வேங்கடசாமி நாட்டார் தன்னுடைய கள்ளர் சரித்திரத்தில்
சோழ மன்னர்கள், கள்ளர் வகுப்பை சார்ந்தவர் என்றும் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மறவர் வகுப்பைச் சார்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனிவாசஅய்யங்கார் அவர்களும் இதே கருத்தை தன் படைப்பு “செந்தமிழ்” என்ற நூலில் தொகுதி ஐஐ பக்கம் 175 ல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே “களவர்” என்பவர் “உள்ளம் கவர் கள்வர்” அதாவது தன்னுடைய நற்செயல்கள் மூலம் அதாவது நிர்வாகம் ஒற்றரிதல், நீதி நேர்மை ஆகியவற்றில் எல்லோர் இதயத்திலும் குடியிருப்பவர் என்ற உயரிய பொருளிலேயே இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கள்ளர் என்றால் மன்னர் என்றும் பொருள் உண்டு

மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான் என்ற வார்த்தையில் மரம் என்ற சொல்லில் ரகரம் இடையினம். ஆனால் மறவன் என்ற சொல்லில் உள்ள எழுத்து வல்லினறகரமாக இருப்பதால் இவ்வொப்புமை ஏற்புடையதல்ல. மரம் என்பதன் பொருள் மறம் என்பதோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது. ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தமிழை அறிந்தவர்க்கு தெரியும் …
மறவர் – பெயர்க் காரணம் :

மறவர் என்பவர் திராவிட இனத்தில் முதல் இனம் என்றும், இவர்கள்
தென்னிந்தியாவில் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ராமன் ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராமனுக்கு உதவி செய்ததால் இராமபிரான் இவர்களுடைய சேவையைப் பாராட்டி உங்களை மறவேன் என்று சொன்னதால் இவர்கள் “மறவன்” என்று அழைக்கப்பட்டனர். மற்றும் மறவன் என்ற இப்பெயர் வீரம்,
கொடூரம் கொலை செய்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றுடன்
சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல .முன்காலத்தில் இந்த இனம் படைக்கலன்களில் அதிகப் பங்கு எடுத்ததால் இப்பெயர் வந்திருக்காலம் என்று எட்கர் தார்ஸ்டன் கூறுகிறார்.

குகன் வழித்தோற்றம் :

இவர்கள் குகன் வம்சாவழியினர் என்தற்கு, இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு செல்வதற்கு குகன் உதவி செய்ததாகவும், அப்போது இராமன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வந்து, உன்னை சந்திப்பேன் என்று சொன்னான். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வராததைக் கண்ட குகன் தீ மூட்டி தற்கொலை செய்ய இருந்த காலத்தில் அனுமன் அதைக் தடுத்து நிறுத்தினார். பின்னால் இச்செய்தியை இராமனுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட இராமன் குகனின் வீரத்தைக் குறிக்கும் விதமாக “மறவன்” என்று அழைத்தார். இவர் வழி வந்தவர்கள் தான் மறவர்கள்.

இவ்வாறு இவ்வினத்தின் பெயர் வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர்
சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது நம்மை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது …

தேவர் [ மறவர் ]
கிளைகள்
கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.

முன்னொரு காலத்தில் கடேசர்கள் ஊத்துமலை காட்டு கலங்களில் உள்ள கொண்டையன் கோட்டை மறவர்களிடம் தஞ்சம் புகுந்தனர் அவ்விடத்தில் தங்கள் இனத்தை தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இவர்களை மறவர்கள் காத்தனர். கொண்டையன் கோட்டை மறவர்கள் கடேசர்களை தங்கள் குலத்தின் முன்னோடிகள் என்று கூறினார்கள்.

இன்றும் மேலகலங்களின் தேவர் / மறவர்கள் கடேசர்களை தங்கள் சொந்த அண்ணன் என்றே அழைக்கிறார்கள்.

கடேசர் பட்டங்கட்டியார் கிளைகள் 7 ஆக உள்ளன. இந்த கிளைகள் பற்றிய பட்டியல் கீழே அமைந்துள்ளது.மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்த எங்கள் கிளைப்பெயர்களை அறியலாம்.

1. காஞ்சிவனத்தார் – காஞ்சி கிளை
2. குட்டினி கிளை – கானாட்டான் கிளை
3. காவடி கிளை – மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை – வெட்டுவான் கிளை
5. தோப்பர் கிளை – குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை – குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை – சர்க்கரவர்த்தி கிளை

ஒவ்வொரு கடேசரும் தான் இந்த வம்சத்தில் பிறந்தவன் என்பதைப் பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்ல இதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கடேசர்களுக்கு தாங்கள் இந்தக் கிளையைச் சார்ந்தவர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். கடேசர் ஆண்களுக்கு மட்டும்தான் கிளை என்பது இல்லை. பெண்களும் தங்களின் கிளையைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பொதுவாக கடேசர்கள் தாய் வழியை பின்பற்றுகிறார்கள். இவர்கள் பிறக்கும்போது எந்தக் கிளையில் பிறந்தார்களோ அதனைக் கட்டாயம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கிளையின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கிளையைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கிளைக்கு அல்லது பெண்ணின் கிளைக்கு அன்னியமான கிளையில் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கிளைப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும். இதனைத் தெரிந்து கொள்வதற்காகவாவது ஒவ்வொரு கடேசரும் தனது கிளையைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ழைத்தான்,
மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை,
பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான்,
கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர்,
மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா,
பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான்,
பறைகுளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான்,
கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன்
கோட்டையார்.

கொத்தும் கிளையும்:

1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து

2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து

3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து

4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து

5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து

6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து

7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து

8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து

9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
பட்டம் : தேவன், தலைவன், கரையாளன், சேர்வைக்காரன்

மறவர் முழுநேரபடை வீரர்களாக அமர்த்தப்பட்டிருந்தனர். நால்வகைப் படைகளிலும் பெருமக்களாக இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
செருக்களத்திற்கு சென்று போரிடும் தொழிலைத் தம் முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் மன்னரால் படையில் முறையாக அமர்த்தப்பட்ட வீரர்களாய் இருந்தனர்.

இந்த காணொளி தேவர் இனம் தான் உலகின் முதல் மனிதன் என்பதை உறுதி செய்கிறது .தேவர்கள் உலகின் மூத்த குடி.இந்த கானோளியை கண்டிப்பாக பார்க்கவும்..http://www.youtube.com/watch?v=9dxIPOJp79A&feature=share

Vijay Tv Nadanthathu Enna 14-10-2011 Part I.flv

This entry was posted in தேவர்கள் and tagged , , . Bookmark the permalink.

One Response to தேவர்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *