தேவர் ஜெயந்தி

அரசியல் கட்சிகளும் தேவரின சமூகம் மீதான சமீபத்திய அரசியல் பார்வையும் …தி.அரப்பா
November 24 மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி
பொதுவாக தேவர் சமுதாயத்தினர் எனப்படும் முக்குலத்தோர் இந்திய தேசிய,திராவிட தேசிய,தமிழ்த்தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்பது யாவரும் அறிந்தது.சொந்த உறவுகளையும் மீறி தான் சார்ந்த அரசியல் கட்சிகளின்,அமைப் பின் தலைமைக்கு மிகவும் நன்றியுள்ளதான சமூகம் இந்த தேவர் சமுதாயம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு கட்சியிலும் பின்னர் இந்திய விடுதலைப் போரிலும் நேதாஜி உருவாக்கிய இந்திய ராணுவப் படையிலும் அக்காலத்தில் புரட்சிப் பாதை என அறியப்பட்ட கம்யூனிச இயக்கத்திலும் தமிழகத்தில் இந்திய விடுதலைக்குப்பின் தொடங்கப்பட்ட திராவிடர் இயக்கத்திலும் பின்னர் அரசியல் இயக்கமாக பரிணமித்த திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அதிலிருந்து பிரிந்த அனைத்திந்திய அண்ணா திமுகவிலும் மதிமுகவிலும் தேமுதிகவிலும் தமிழ்தேசிய கட்சிகளான நாம்தமிழர் கட்சியிலும் தமிழ்த்தேசிய அமைப்புக்களிலும் இருந்து நேரடியாகவும் பின்பலமாகவும் இருந்து முதல் வரிசையில் நிற்கும் சமுதாயம் இந்த தேவர் சமுதாயம்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இனம் இன்று எந்த நிலையில் அரசியல் கட்சிகளாலும் பிற தளங்களிலும் பார்க்கப்படுகிறது?
சமீபத்தில் பசும்பொன் தேவர் நினைவு நாளில் (30-10-2012) அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பதினோறு இளைஞர்கள் கல்லால் அடித்தும் பெட்ரோல் குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பெட்ரோல் குண்டு வீச்சில் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இறந்துபட்ட இளைஞர்களின் பெற்றோர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகை கூட அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.
படுகொலைக்கு ஆளான இளைஞர்களின் நிலைக்காக தமிழகத்தில் இயங்கும் எந்த கட்சியும் வருத்தப்படவில்லை.நடந்த படுகொலைக்கு காரணமானவர்களைக் கண்டிக்கவும் இல்லை.இறப்பு நடந்த போதும் அவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற போதும் எந்த அரசியல் கட்சிகளும் அஞ்சலி செலுத்த வரவில்லை.கண்டன அறிக்கை வெளியிடவில்லை. படுகொலைக்கு ஆளானவர்களின் வீடுகளுக்கு வந்து துக்கம் விசாரிக்கவில்லை.அந்த தொகுதி சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்களும் துக்கம் கேட்க வரவில்லை.அமைச்சர் பெருமக்களும் வீட்டுக்கு வந்து வருத்தம் தெரிவிக்க வில்லை.
ஊடகங்கள் சரியான முறையில் செய்தி வெளியிடவில்லை.கண்டன அறிக்கை கொடுத்த சிலரது செய்தி கூட நாளிதழ்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடம் கருத்து கேட்கப்படவில்லை.இதற்குப் பதிலாக படுகொலை செய்யக் காரணமான சமூகத்தலைவர்களையும் ”தலித்” அரசியல் நடத்தும் தலைவர்களையும் கருத்துக் கேட்டு பேட்டிகள் எடுக்கப்பட்டன.
அரசியல் கட்சிகளிலும் ஊடகங்களிலும் அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் முக்குலத்துச் சமுதாயம் புறக்கணிக்கப்படுவதும் இதே நிலை வேறு எந்த சமுதாயத்துக்கும் ஏற்படும் போது அனைத்து அரசியல் கட்சிகள்,ஊடகங்கள்,மனித உரிமை அமைப்புக்கள்,உண்மை கண்டறியும் குழுக்கள்,நீதிவிசாரணைக்கு உத்தரவிடும் நீதிமன்றங்களிலின் நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் கமிசன்கள்,மத்திய அரசின் சமூகநீதித்துறை,சிறுபான்மை நலக்குழு,தாழ்த்தப்பட்டோர் நலக்குழு…என பல்வேறு கோணங்களில் சம்மந்தப்பட்ட ஊர்களுக்குச்சென்று அறிக்கை தயாரித்து வெளியிட்டு அரசிடமும் ஊடகங்களிலும் நியாயம் கேட்கும் எந்த தளமும் இப்போது காணாமல் போய்விட்டதே…?ஏன்?
முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்கு இப்படி ஒரு அவமானமா?படுகொலைக்கு ஆளாகும் போதுகூட ஆதரவோ,கண்டனமோ,தெரிவிக்க முடியாதபடி இவைகளைத் தடுப்பது எது?முக்குலத்தோர் படுகொலை செய்யப்பட்டாலும் கண்டும் காணாமல் இருக்கும் அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் எது பின்னணியாக இருக்கிறது?
இப்போது சொல்…
யார் தீண்டத்தகாதவர்கள்?
அரசியல் கட்சிகளால்..
ஊடகங்களால்….
மனித உரிமை அமைப்புக்களால்…
அதிகார வர்க்கத்தினரால்…
புறக்கணிக்கப்படுவது எந்த சாதி?
படுகொலை எனும் தவறைச்சுட்டிக் காட்டினால் கூட வாக்கு கிடைக்காது என பயப்படும் அளவுக்கு தலித் அரசியல் மேலோங்கியிருப்பது தெரிகிறதா?
வருங்கால இளைஞர் சமுதாயமே சிந்திக்க வேண்டாமா? அரசியல் சட்ட உரிமை படைத்த தலித் சமுதாயத்துக்கு தமிழ்நாட்டில் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படியும் வந்து விடுவர்.ஆனால் தேவரினத்துக்கு அப்படியா? அப்படியே வந்தாலும் அந்தந்த கட்சித்தலைமைக்குக் கட்டுப்பட்டு சாதி மறந்து கட்சிக்காரனாகவே இருக்கும் கொடுமை இந்த சாதியில் மட்டுமே இருக்கிறதே? தேர்தல் நேரத்தில் சாதிப்பிரியம்-உறவுப்பாசம்- கொள்வதும் வென்ற பின் சாதியை மறப்பதும் தேவரினத்தின் மரபாகி விட்டது.ஆனால் பிற சாதியினர் தேர்தல் நேரத்தில் தங்களைக் கட்சியினராய் காட்டி,வெற்றி பெற்றதும் தன் சாதிக்கான தலைவனாக எந்த கட்சியில் இருந்தாலும் நடந்துகொள்வது நடைமுறையாகிவிட்டது.
முக்குலத்தோர் ”எடுப்பார் கைப்பிள்ளை”யாக இருப்பதும் முக்குலத்தோருக்கென ஒரு சரியான தலைமை இல்லாத்தும் முக்கியமான காரணங்கள்.
தலைமை என்பது……..
சுயவிளம்பரம் இல்லாமை,
விட்டுக்கொடுக்காத தன்மை,
போராடும் துணிச்சல்,
நீண்ட கால சமூகப்பார்வை,
அரவணைத்துச்செல்லும் பண்பு,
சர்வாதிகாரப்போக்கு இல்லாமை,
திட்டமிடும் ஆளுமைத்திறன்,
சமூக அக்கறை…..கொண்ட்தாக இருக்க வேண்டும் என்பது பொது மரபு. ஆனால் இத்தகைய தலைமை இன்றி தேவரினம் தவிக்கிறது.அந்த தலைமை உருவாகும் வரை இப்படிப்பட்ட அவலநிலை தேவரினத்துக்கு தொடர் கதையாகவே இருக்கும்.அதுவரை அழுது புலம்புவது தவிர வேறு வழியுமில்லை.
படுகொலைக்கு ஆளானவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால்….
தேவரினத்து இளைஞனே..
உன் அரசியலை நீயே தீர்மானிக்கும் வரை உன் சமூகத்தில் இழப்புகள் அதிகம் இருக்கும்.நீ சுய நினைவுடன் சிந்திக்கும் காலம் வரை பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உனக்கான அரசியலைப்புரிந்து அதை நடைமுறைப்படுத்தும் வரை உன் சமூகத்தில் சிதறல்கள் தொடரும்.
தேவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதை தடுத்து நிறுத்திட முடியாத சக்திகளின் முயற்சிதான் இந்த படுகொலைகள் என்பது புரிகிறதா?தேவரினத்தின் தலைவனை வணங்கிடக் கூட பிறரின் அனுமதியைக் கேட்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு வருவதன் அடையாளம் தான் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி நாளில் நடைபெற்ற திட்டமிட்ட படுகொலைத்தாக்குதல்!
மது தவிர்த்தல்…
திரைப்பட மோகமின்மை…
கல்விக்கு முன்னுரிமை….
சுய உழைப்பால முன்னேற்றம்….
சமூக அமைப்புக்குள் வருதல்…
சமுதாயத் தலைமைக்குக் கட்டுப்படுதல்…
பிற சமூகத்தினரின் நன்மதிப்பைபெறுதல்..
தன் சமுதாய வரலாறு அறிதல்…
அன்றாட அரசியல் நிலை உணர்தல்..
வாக்கு வங்கியின் மதிப்பறிதல்…இவையெல்லாம் இன்றைய இளைஞர்களின் கட்டாயத்தேவை..
சமூகத்தில் நீயும் ஒரு அங்கம் என்பதை உணர்…..பின்னர் உணர்த்து!
வெறும் ஆர்ப்பாட்ட அரசியல் பலன் தராது.
உரிமையைப் பெற்றுத்தர உதவாது.
புரிந்துகொண்டு இனியாவது முறையாக செயல்படு….
படுகொலைக்கு ஆளானவர்களில் ஆசாரி,பிள்ளை சமூகத்தின் இளைஞர்களும் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் நாடார்  சமூகத்தினரும் அடக்கம்.தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அனைத்து சாதியினரும் என்பதற்கான சான்று.
This entry was posted in தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *