தேவர் பற்றி நீதிபதி பேட்டி


சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர்.

தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர்.

ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி வந்தார். “அவசர விஷயம். முதல்வர் பக்தவச்சலம் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னார்” என்றார். போனேன்,”முதுகுளத்தூர் வழக்குக்கு அரசு வக்கீலாக போக எல்லாரும் பயப்படறாங்க நீங்தான் ஆஜராகணும்னு காமராஜர் விரும்பறார்” என்றார்.

சரின்னு சொல்லி வந்துட்டேன். ‘என்னிக்கோ போகப்போற உயிர் தானே’னு நெனச்சிட்டே, வழக்கு நடக்கும் புதுக்கோட்டைக்கு போய் இறங்கினேன். சாயந்திர நேரம் போலீஸ் பாதுகாப்போடு வாக்கிங் போனேன். எதிரே இருநூறு, முன்னூறு பேரு கூட்டமா வந்தாங்க நடக்கிறது நடக்கட்டும்’னு நெனச்சு. நடந்தேன்.

அப்போது, சுமார் எழுபது வழக்குகள்ல கைதாகி ஆயிரத்து 200 பேர். சிறையில் இருந்தாங்க. அவங்கலோட உறவினர்கள்தான் என் எதிரே வந்தவங்க அருகே வந்ததும் தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டாங்க.

“அரசு வக்கீலா நீங்க வந்திருக்கிறதா சொன்னாங்க, கைதானவங்கள்ல தப்பு செய்தவங்களும் இருக்காங்க, தப்பு செய்யாதவங்களும் இருக்காங்க நீதி தர்மத்துப்படி செய்யுங்கய்யா…” என்று கதறினார்கள், வெட்டிடுவாங்க. .குத்திடுவாங்கன்னு, யாரைச் சொன்னாங்களோ, அவங்கதான் என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டுட்டுப்போனாங்க.

மறுநாள் விசாரணை குற்றவாளிகளோடு சேர்த்து தேவரையும் நிற்க வைத்திருந்தார்கள். பதறிவிட்டேன். அவருக்கு நாற்காலி கொடுக்கச் சொன்னேன். ‘நாற்காலி இல்லை’ என்றார்கள். என் நாற்காலியை தருவதாக சொன்னேன். கோர்ட் ஆடிப்போய்விட்டது.

நடப்பதை சலம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தேவர் பேச்சால் போர் முழக்கம் செய்யக்கூடிய அவர் கோர்ட்டுக்கு கொடுத்த மரியதை இருக்கிறதே…. எந்த சத்தமும் ரியாக்ஷனும் இல்லாமல் யோகம் பண்றது மாதிரி உட்கார்ந்திருப்பார். காலையில் வந்தவர், மாலையில் கோர்ட முடியும்போதுதான் எழுவார் மதியம் சாப்பிடக்கூட போகமாட்டார். இது இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

கடைசியில் தீர்ப்பில் அவர் விடுதலையாகிட்டார். தீர்ப்பு வந்த அன்றும் கூட அவர் சந்தோஷமடையவில்லை, கொண்டாடவில்லை. இந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது.”

என தனது பேட்டியில் கூறியுள்ளார்.

..

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *