ஆதி பகவன் சிவனே
அட்டுழியம் செய்த
அசூரர்களை அடக்கி தம் பாதம்
பணிய வைத்தார்.
மகாதேவரின் வழியை
தன் ஒளியாக கொண்ட
சுக்ரீபனும் வாலியும்
தென் நாட்டில்
ஆதியில்
அட்டுழியம் செய்த
அசூரர்களை விரட்டினர்.
இதன்பின்
நிலம்பகிர்வதில்
பகைமை உண்டானது
இருவரிடத்தில்.
வாலியை ஏமாற்றி
சுக்ரீபன்
கிஷ்கிந்தா முழுமையையும் ஆண்டுவந்தமையால்
ஏமாற்றமடைந்த
வாலி
சுக்ரிபனை பழிவாங்க நேரம்பார்த்து காத்திருந்தான்
ஸ்ரீராமனின் காலத்தில்
வாலி மரணம் எய்ததும்
ஆதியில்
சிவனின் வழியில்
அசூரர்களை விரட்டிய
வாலியின்
மரணத்திற்க்கு காரணமான
சுக்ரிபன் தன் ஈசனை வழிபாடுசெய்து
தமது
பாவம்போக்கும் வடிவத்திலான சிலை அமைத்து
நல்லாற்றாங்கரையில்
சுக்ரீஸ்வரர் என்றொரு ஆலயத்தையும் கட்டினர்
சோழர்தேவரும்
பாண்டியர்தேவரும்.