பாண்டிய மன்னனின் தென்காசி..

இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
“பரக்கிரம பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் வடக்கே காசி சென்று திரும்பினான். அவனுடைய கனவில் சிவபெருமான் தோன்றினார். இதன் விளைவாக இங்கு 1440 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட தொடங்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு கட்டி முடி’கப்பட்டது, வானளாவிய கோபுரமும் எழுப்பப்பட்டது . இக்கோவிக்கு வந்து சிவனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாகவே இவ்வூரின் பெயர் தென்காசி ஆனது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மும்மலைகளான “திரிகூட மலைகள்” சங்கமிக்கும் இடத்தின் அடிவாரத்தில்,சுத்தமான தென்றல் காற்றோடு,மழை தூரல் சாரலாக பொழியும் நகரம் தான் தென்காசி நகரம். இம்மலையில் பழைய குற்றாலம்,குற்றாலம், சிற்றருவி, செண்பாகதேவி,தேன் அருவி, புலி அருவி என அருவிகள் பல உள்ளன. இம்மலையில் பல மூலிகைகள் உள்ளதால்,அருவிகள் மூலிகை வாசத்தோடே கொட்டுகிறது. இந்நகரம் பல பண்டைய பெருமைகளை உள்ளடக்கிய நகரம்.முன்னோர்கள் தன் சந்ததியோடு தொடர்ப்பு கொள்ளும் வகையில் சிற்பங்கள், கோவில்கள்,என சான்றுகள் நிறைய உள்ளன.
சிதம்பரேஸ்வரர் கோவில் சிற்பங்களும், ஓவியங்களும் மிகவும் பழமையானவை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அழிக்கபட்டுவிட்டன. இங்கு இருக்கும் கிணற்றில் குகைகள் உள்ளன. குகைகள் தூர்ந்து போனாதால் இந்த வழிகள் எங்கு சென்று முடிகின்றன என்பதுகேள்வி எழப்புவதாகவே உள்ளன. இவ்வாறாக வராலாற்றில் என்ன நடந்தது என்பது கண்டறிய முடியாமலே விடுகதையாகவே மிஞ்சி நிற்கிறது சிதைந்த சில சான்றுகள்.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இது 1824-ல் தீ விபத்தால் சிதைந்து போனது. கோபுரங்கள் 1826 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இடிந்த நிலையிலேயே இருந்தது. பின் 1996 ஆம் ஆண்டு திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று கம்பிரமாக காட்சியளிக்கிறது. இக்கோவில் எவ்வளவு பழமையோ, அதுபோல் இக்கோவின் பாதத்தில் அமைந்திருக்கும் கடைகளும் மிகவும் பழமையானவை, பாரம்பரியம் மிக்கவை. அவைகளுள் முக்கியமான கடையாக நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்து தன்னுடைய நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்ரீ கிருஷ்ணா விலாஸ் பெரிய லாலா கடை. இக்கடை இனிப்பு மற்றும் கார வகைகளை தரம் குறையாமல் இன்றும் கொடுத்து வருகிறது.
1904ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் திரு.கிருஷ்ணசிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்கள், உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ராஜஸ்தானில் இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலபோக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கினர். அவர்கள் கோதுமையில் செய்த அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாகவும், வித்தியாசமான இனிப்பு வகையாகவும், சுவையாகவும் இருந்த காரணத்தினால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. இப்போது தென்காசி பெரிய லாலா கடையை திரு.கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான திரு.சுப்பு சிங், திரு.மோகன் சிங் நடத்தி வருகின்றனர்.இப்பரம்பரையின் வாரிசான திரு.திலிப் சிங். கூறும் போது “அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றரின் தண்ணீரே காரணம்” என்கிறார்.
சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகின்றன. மகாலிங்க மலையும் மிகவும் பழமையானது. இங்கு உள்ள மூலிகைகளும், குகையும் வியப்பூட்டுவனாவாக உள்ளன. சித்திரசபையை கொண்டுள்ள நகரம். வீரத்திற்கும் பங்சமில்லை என்பதற்கு தென்காசியின் அருகில் உள்ள செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன் தன் உயிரை கொடுத்து விடுதலைக்கு வித்திட்டார் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு பல பழமைகளை கொண்டுள்ள இந்நகரம் தற்சமயம் சில மத பிரச்சனையை சந்தித்து வருவது வருந்ததக்க போக்ககாக உள்ளது
thanks :
http://mutramonline.blogspot.com

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *