பொன்னமராவதி இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு இடைபட்ட பகுதியாகும்.
இந்த பகுதியில் பல சரித்திர பின்னனிகளும் பல கல்வெட்டுகளும் கான கிடைக்கின்ற பகுதியாகும். இப்பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் மறவர்கள்.இவர்களின் பின்னனியே அதிகமாக கிடைக்கிறது.இப்படி வாழ்கின்ற மறவர்களை பற்றி சரித்திரத்தில் அதிகம் இருக்கிறபோதும் அது வெளியாகவில்லை. மறவர் சரித்திரங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகதியினரையே அதிகமாக வெளியாகின்றன.எனவே பொன்னமராவதி வாழ் மறவர்களை பற்றி வரும் குறிப்புகளை இக்ககட்டுரையில் கான்போம்.
பூர்வீகம்:
இவர்களது பூர்வீகம் பெரும்பாலும் சேரர்களை பற்றியே கான கிடைக்கிறது. இவர்கள் உப்புக்கோட்டை மறவர்(அ)உப்பு கட்டு மறவர் ஆகும்.ஆதாவது குமரியை ஆண்ட சேர்ப்பர்களே உப்புக்கோட்டை மறவர் ஆகும் .
பொருள்: சேர்ப்பன்-சேரன்,பாண்டியன் முதலிய பல அரசர்களுக்கு இந்த பட்டம் உண்டு. இதில் சேர அரசர்களின் வரலாற்றோடு இந்த மறவர்களை பொருத்திப்பார்போம். 1059-கு முன் சேர மன்னர்களின் ஆளுகையில் குமரி நிலப்பரப்பு இருந்த்து பின்பு அந்த நிலப்பரப்பும் ஆழி சூழ்ந்து அழிந்தது.அவ்வழியினர்கள் இடம் பெயர்ந்து வந்து இப்பகுதியில் குடியெறிய பொறையர்கள் பின்பு பாண்டிய மறவர் மக்களுடன் ஒன்றாக இனந்துவிட்டனர். பொறையர்-சேரரின் பட்டமாகும். பொறையர் ஏன்பது புரையார் (அ) புரியர் என்று திரிந்துள்ளது. எனவே விரயச்சிலை உப்புக்கோட்டை மறவர்(சேர்ப்பன்) தான் இப்பொறையராகும்.
உப்புக்கோட்டை மறவர் பட்டங்கள்:
புரையார்(பொறையர்) ஐநூற்றிபுரையார் ஆயிரத்துபுரையார்
கானாட்டுபுரையார் கோனாட்டுபுரையார் தொண்டைமான்புரையார்
காங்கேயபுரையார் மாளுவிராயபுரையார் பல்லவராயபுரையார்
யானைகுற்றினான் யானைவெட்டினான் வெற்றிமாலையிட்டான் பூழிநாட்டர்
பூழிதேவர் வானாதிவிராயர்
வீரகேரளன் திருகொன்றமுடையான்
மனிகட்டிபல்லவராயர் குட்டுவன் நல்லகுட்டி(குட்டுவன்) படைவெட்டி
காரனர் சாவேறு வில்லியன் ரண்டன் சேர்ப்பன் கொம்பன்
வேனாடன் கொங்கனவர் சீத்தல் பழுவேட்டரயர் கண்டன்மறவன்
மாறன் கரையாளன் பெருமாள் வெற்பன்.
விரயாச்சிலை மறவரின் சிறப்பு:
இவர்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் கானாடு,கோனாடு என்ற இரு நாட்டின் பிரிவுகளாக வாழ்கின்றனர்.
இவர்களுக்கு பொதுவாக “தேவர்” என்ற பட்டத்துடன் அதிகமாக கானப்பட்டாலும்.இவர்களது தலைவர்கள் “அம்பலம்” என்று அம்பலக்கல்லில் உட்கார்ந்து நாட்டாமைத்தனம் செய்யும் தலைவரை கானலாம். “அம்பலம்” என்ற பட்டம் நாட்டார் கள்ளர் மக்கள் அதிகமாக புனைந்தாலும் மறவர் மக்களில் “ஊர் அம்பலம்” என ஒருவர் மட்டுமே இருப்பார்கள்.அப்படி அம்பல பட்டம் சூடுபவரின் பெயர் இப்படி இருக்கும் “ஊர் அம்பலம் ராமசாமி தேவர்”.ஆதாவது மறவர் கிராமங்களில் ஒருவர் மட்டுமே அம்பலம் பட்டம் சூடுவர்.ஆனால் கள்ளர் குலத்தில் அனைவரும் அம்பல பட்டம் சூடுவர்.கள்ளர் மக்களை போல் முழுவதுமாக அம்பல பட்டம் சூடும் மறவர் பிரிவினர்களும் புதுக்கோட்டைமாவட்டங்களில் உள்ளனர்.
அவர்கள் புலிகுத்தி மறவர்,இளம் மறவர் போன்ற பிரிவினர் உள்ளனர் இவர்கள் கொட்டம்பட்டி, சிங்கபுனேரியில் அதிகமாக உள்ளனர். உப்புகட்டு மறவர் சொந்ததத்துகுள்ளே பென் கொள்கிறார்கள்.மறவரில் உள்ள கிளை பிரிவு இவர்களில் கரை எனற பிரிவு கானப்படுகிறது.இவர்கள் மூதாதயராக கொம்மாயத்தேவன்-பிச்சத்தேவன் என இருவரை கூறுகிறார்கள்.இவர்கள் விராயச்சிலை என்ற ஊரில் உள்ள “மதுவீடு செவ்வாய் அடைக்கலம் காத்த அம்மன்” கோயில் கும்பிடுகிறார்கள்.அக்கோயில் 11 வம்ச மறவர்களுக்கு பாத்தியபட்டது ஆகும். அந்த 11 வம்சத்தினர்
1.யானையை குற்றிய ஐந்நூற்றி புரையார்
2.வானாதிவிராயர்
3.யானையை வெட்டிய கானாட்டு புரையார்
4.மேல வனங்கிய தேவர்
5.கிழ வனங்கிய தேவர்
6.வெற்றிமாலையிட்ட கோநாட்டு புரையார்
7.நஞ்சுண்டா தேவர்
8.தொண்டைமான் புரையார்.
9.மனி கட்டி பல்லவராயர்
10.ரண்டன் கொம்பன் தேவர்
11.பிற்பாடு கொடாத தேவர்.
இப்பட்ட பெயர்கள் “வம்சம்” என்ற திரைப்படத்திலும் வருகிறது.இவர்களின் தெய்வங்கள் பெரும்பாலும் பென் தெய்வ வழிபாடே பின்பற்றுகின்றனர்.கொன்னையூர் மாரியம்மன்,கானாட்டு நாயகி,கோநாட்டு அம்மன், அடைக்கலம் காத்த அம்மன் முதலிய தெய்வங்களை வன்ங்குகின்றனர்.
உப்புகோட்டை மறவர்கள்(குமரி சேர்ப்பர்கள்):
இந்த பகுதியே முன்பு “கேரள சிங்க வள நாடு” என்று அழைக்கபட்டுள்ளது. இதை இரண்டாம் ராசதிராசன் என்ற சோழன் காலத்தில் “பொன்னமராவதி கேரளன் திருக்கொடுங்ககுன்றமுடைய நாயன நாத ராஜன்” என்ற பொன்னமராவதி பகுதியை ஆண்ட மறவர் தலைவனை பற்றி குறிப்பு வருகிறது.
பொன்னமராவதியின் பெயரில் வரும் பொன்னன் மற்றும் அமரன் இருவரும் மறவர் தலைவர்கள் ஆவார்கள்.
இதில் உப்புகட்டு மறவரில் வரும் ஒரு பட்டம் “யானையை குற்றிய ஐந்நூற்றி புரையார்”. இதில் வரும் ஐந்நூற்றுவர் என்பவர் வனிகர் குழுவினரை குறிப்பதாக ஊள்ளது. அவர்களுக்கு கடல் பயனங்களிலிலும்,வனிக தளங்களில்லும் காவல் புரிந்ததை காட்டுவதாக இருந்தாலும் புரையார் என்பது சேர பட்டமான பொறயர் என்பதாகும். “யானை குற்றினான்” என்பது சேர மன்னனின் பெயரான “பல் யானை செல் குட்டுவன் இளஞ்சேரல்” என்பதை குறிப்பதாகும்.
இப்படி யானை குற்றினான்,
யானை வெட்டினான்,
பொறையர்,
வெற்றிமாலையிட்டான்,
கொம்பன் என்பது சேரரின் பட்டமாகும்.
கடைச்சங்க காலச் சேரர்கள் :
உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105 செங்குட்டுவன்< கி.பி. 129-184 அந்துவஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165 இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180
விரயாச்சிலை ஒரு படைக்களமாகும்:
விராயச்சிலை என்பது உப்புக்கோட்டை மறவர் மிகுதியாக வாழ்கின்ற பகுதியாகும். பிற் காலத்தில் இது சோழ மற்றும் பாண்டிய நாட்டு படைகள் தங்கி பயிற்சி பெறும் களமாக இருந்துள்ளது. எனவே இப்பகுதியை பற்றிய பல மறவர் கல்வெட்டுகள் இப்பகுதியில் கான கிடைக்கின்றன.
அதில் பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,
“விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை” என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது.
பாண்டிய மன்னன் சீவல்லவ தேவர் விராயச்சிலை கல்வெட்டுகலில் “முன்னள் குல சேகர தேவருக்கு இவ்வூர் மறவர் நம்பியான் ஞாற்றுவ பெரியான் “ என்று க்ல்வெட்டு கூறுகிறது.
இராஜராஜ சோழனின் கல்வெட்டும் மட மயிலாபூரில் உள்ள மறவரை பற்றி கூறுகறது.
குலோத்துங்கனின் குடுமியான் மலை கல்வெட்டு திருவேங்கை வாசல் சிவன் கோயில் க்ல்வெட்டும் அவ்வூரில் உள்ள மறவரை பற்றி குறிக்கிறது.
இவ்வாறு பொன்னமராவதியில் உள்ள விராயச்சிலை 1000-ம் வருடங்களுக்கு மேலாக போர்பாசறையாக உள்ளது.
மறவனீஸ்வரம் கண்ட சேர மறவன் பழுவேட்டரயர்
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும்.
ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்.” என்று பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி ‘பெரிய பழுவேட்டரையரையும்’, ‘சின்னப் பழுவேட்டரையரையும்’ எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம்.
பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.
மீண்டும் அடுத்த பயணத்தின்போது சந்திப்போம். .
1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொப்ப
2 ரகேசரி பம்மக்கு ய
3 ¡ண்டு கூ ஆவது அ
4 அடிகள் பழுவேட்டரைய
5 ர் மறவன் கண்டனா
6 ர் கன்மி அடிகள் அ
7 ருளிச் செய்ய சிறு ப
8 ழுவூர் திருவாலந்து
¨ 9 ற திருக்கற்றளி மேனாய
10 கமாக நின்று செய்வித்த
11 மங்கல நாட்டு மங்கலத்து
12 கவிசியன் நக்கன் மாறபி
13 ரானான நம்பியாரூரன் திருவா
14 லந்துறை மகாதேவர்க்கு
15 மூன்று சந்திக்கும் வைத்த
16 தயிரமுது நாராய நாழி
17 யால் நாடுரி நாடுரிக்கு
18 ம் வைத்த சாவா மூவாப்
19 பேராடு இருபது இது
என்று முடியும் இன்னும் புதுக்கோட்டை மறவரை பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும் என நம்புகின்னேன்.