மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம்

madurai001
46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம்
கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய இவர்கள் மிக கொடூரமான கொடுங்கோல் ஆட்சி செய்துள்ளனர் … இந்து கோவில்களை இடித்து தள்ளிவிட்டு அவற்றை பள்ளிவாசல்களாக மாற்றியுள்ளனர் .
இந்துகள் சாமிகும்பிட தடைசெய்யப்பட்டனர் இந்துக்களை கட்டாயப்படுத்தி அவர்களை துலுக்கர்களாக மதமாற்றம் செய்துள்ளனர் மீறி சாமி கும்பிட்ட இந்துக்களை அந்த இடத்திலேயே வெட்டி கொன்றுள்ளனர் இந்துக்கள் பலர் கழுவிலேற்றி கொல்லப்பட்டனர் இந்து மதத்தை விட்டு மாற மறுத்த பெண்களையும் அவர்களின் குழந்தைகளை அந்த பெண்களின் மார்பில் வைத்து வெட்டிகொன்றுள்ளனர் . இஸ்லாத்தில் சேர மறுத்தவர்களின் மண்டை ஓடுகளை  மதுரை வீதிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டனர்
மதுரையை ஆண்ட மன்னர் மற்றும் படைகள் இவர்களை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறி தலைமறைவாகிவிட்டனர் மேலும் மதுரை நகரின் பிரதான புகழ்பெற்ற கோயிலான மதுரை மீனாட்சி அம்மன் -சொக்கநாதர் கோயிலை கொள்ளையடித்து அதன் பிரகாரங்களை இடித்து தள்ளி கோயிலின் சன்னிதானத்தை இழுத்துப்பூட்டினர்
இவ்வாறு சுமார் சுமார் 46 ஆண்டுகாலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அக்கிரமமானமுறையில் பூட்டப் பட்டிருந்தது இதை கண்டு வெகுண்டெழுந்த தன்னரசு நாட்டு கள்ளர்கள் கம்பன உடையார் என்பவரின் படைகளோடு தங்களது படையையும் இணைத்து கொண்டு 1378ல் மதுரையை ஆண்ட துளுக்கர்களோடு மிக பயங்கரமான போரைதொடுத்து வெற்றிபெற்று அவர்களின் படைகளை விரட்டியடித்தனர் சிக்கிய சுல்தான்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்
46 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறக்கப்பட்டு உடனே திருப்பணிகள் துவக்கப்பட்டன பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காவல் முறைவைத்து பெரியமறவர்கள் கோவிலின் வடக்கு வாசல் சின்ன மறவர்கள் தெற்குவாசல் பிறமலை கள்ளர்கள் மேற்குவாசல் கீழ்நாட்டு அம்பலம் கிழக்கு வாசல் என்று பாதுகாப்பு அமைப்பு வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அழிந்து போகாமல் தமது கண் இமை போல் காத்தனர்-
நன்றி -சேர சோழ பாண்டியர்கள்
வாரிசான தேவர்கள் வரலாறு
நூல்ஆசிரியர்
திரு .ஆர் .கே .கண்ணன் .
This entry was posted in தேவர்கள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *