மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு
உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;
மாலை – மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!
தேவர்தளத்திற்காக,
இரா.ச.இமலாதித்தன்
This entry was posted in வரலாறு and tagged , . Bookmark the permalink.

7 Responses to மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *