தேவர் புகழ்
தற்போது முகநூலில் இளைஞர்கள் தங்கள் ஆர்வமிகுதியால், பசும்பொன் திருமகனின் தலையை மட்டும் தங்கள் அபிமான நடிகர்களின் படங்களில் ஒட்டி வெளியிடுகின்றனர். அவரின் கையில் அரிவாளை கொடுக்கின்றனர். உண்மையில் தேவரின் புகழை பரப்ப வேண்டும் என்றால் இளைஞர்கள் அனைவரும் தேவரின் வாழ்க்கை வரலாறை படிக்க வேண்டும். அவரது பேச்சுக்களை வாசித்து அறிய வேண்டும். அதன் பின்னர் அவரது கருத்துக்களை பின்பற்ற வேண்டும், பரப்ப வேண்டும். அதுவே அவரது புகழை பரப்புவதற்கான சரியான முறையாகும்.
சுயசாதிப் பெருமையை தவிர்த்தல்
தேவர்கள் வீரம் நிறைந்தவர்கள். பண்டைக் காலத்தில் படை வீரர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் இருந்தவர்கள். நமக்கு ஒரு பெருமை மிக்க வரலாறு உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அதேவேளையில், இந்த பெருமைகளை நாம் இன்னும் எத்தனைகாலம் சொல்லி அதை வைத்தே நாம் நம் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதாவது நாம் நமது பெருமையை விட்டுக் கொடுக்காமல் அதேவேளையில் பொது சமுதாயத்தில் நமது நியாயத்தை பேசி நமது உரிமைகளை எப்படி நிலைநாட்டுவது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
5 Responses to முக்குலத்து இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன?