(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை)
முன்னுரை.
.கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக
கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க முயன்றுள்ளதும், கள்ளர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை எழுதியுள்ளதையும் தவறு என்பதை எடுத்துக்காட்டவே இக்கட்டுரையை
எழுதுகிறேன்.
கள்ளர்கள் சாம்ராஜ்யவாதிகள் என்று மேனாட்டு அறிஞர்கள்
போற்றியிருக்கின்றனர். டாக்டர் உ,வே,சாமிநாதய்யர் அவர்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஓலைச் சுவடிகளை கண்டுபிடித்து அச்சிலேற்றி, முக்குலத்து சமூகத்திற்கு பெரும் தொண்டு ஆற்றினார். அதைப்போலவே, அக்டோபர் 29,1950 முதல் மூன்றரை ஆண்டுகாலம் கல்கியில்
பொன்னியின் செல்வன் என்ற இராசராசனின் இளமைகால வரலாற்றுப்புதினத்தை அமரர் கல்கி கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதி கள்ளர் குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்தார்.
இதைஎழுதுவதற்கு வரலாற்று ஆராய்ச்சிப் பேர- றிஞர் சதாசிவப்பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறுஅடிப்படையாக அமைந்- தது என்று பிற்காலச்சோழர் வரலாறு பதிப்புரையில் (பக்கம்xxல்) திரு.மு.பெரி.மு.இராமசாமி எழுதியுள்ளார்.. அமரர் கல்கி
அவர்கள் மயிலாடுதுறை, மணல்மேடு கிராமத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்த பிராமணர். கல்கி, டாக்டர் உ.வே.சா., சதாசிவப்
பண்டாரத்தார்,மு.பெரியசாமி அனைவருமே முக்குலத்தோர் அல்ல.ஆனால்,உண்மையை எழுதிய மாசுமருவற்ற சான்றோர் பெருமக்கள்.
சான்றோர்–கல்கி எழுதியுள்ளது (பொன்னியின் செல்வன் பாகம்-1அத்தியாயம்-6ல்)
நடுநிசிக்கூட்டத்திற்கு……..”…பழுவேட்டரையரும், சம்புவரையரும்
தவிர………..அங்கே மழபாடித் தென்னவன் மழவராயர் வந்திருந்தார். குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந் தார். மும்முடிப் பல்லவராயர் வந்திருந்தார். தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாபதி பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக்குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார்(இருக்குவேளிர்).
. வந்திருந்தனர். . . இந்தப் பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல. எளிதாக ஒருங்கு சேர்ந்துக் காணக்கூடியவர்களும் அல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள், அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச்செயல்களினால் அடைந்தவர்கள்.
ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி
வந்தது. சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு
வாய்ந்தவர்க்ளுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது.
அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச்சொல்லும் மரபும் இருந்தது.(மழவ+அரையர்=மழவரையர்,மழவராயர் என
மரூவியது.பல்லவ+அரையர்=பல்லவரையர்.பல்லவராயர்..கலிங்க+அரையர்=கலிங்கரையர்.
காலிங்கராயர்…)
அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால், பிறப்பினால்
மட்டும் அரசர் பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீர்ர்கள்தான் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே, ஒவ்வொருவரும் பற்பல போர்க் களங்களில் போரிட்டுப்புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனைபேரும் பழையாறைச் சுந்தர சோழ
சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள்அதிகாரம் செலுத்தி வந்தார்கள்.சிலர் சோழப்பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவிவகித்து வந்தார்கள்.
. . . “
கனகசபைபிள்ளை எழுதியது தவறு. அத்தவறைச்
சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் வருமாறு “நாக மரபினரிடையே முற்றிலும் அடங்காப் பண்புடையவர்கள் எயினர் அல்லது வேடரே. நிரைகோடலும் கொள்ளையும் கொலையுமே அவர்கள் வாழ்க்கையில் மேற் கொண்ட ஒரே தொழிலாயிருந்தது. அவர்கள் அச்சந்தரும் காளியை வணங்கினர். தம் கொள்ளையில் அத்தெய்வத்தின் துணையைப் பெற அவர்கள் அத்தெய்வத்தின் கோயில் களில் எருமைகளைப் பலியிட்டனர்.
சூறையாட்டுக்குப் புறப்படுமுன், அவர்கள் புட்குறிகளும் பறவை ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும் பற்றிய அறிவுரை கேட்டனர்…(சிலப்.XII3 XII 120-128).அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள் பண்புக்கேற்றபடி கள்ளர் அல்லது கள்வர் என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர்……”
இவ்வாறு கனகசபைப் பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்(ஆதாரம்.1800 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழகம் பக்கம்-89).கள்ளர்களை வழிப்பறி கொள்ளையர்களாக காட்டவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் கனகசபைப் பிள்ளை இப்பாராவில் மேற்கண்ட முதல் இரண்டு வரிகளை எழுதியுள்ளார்.இவ்வாறு எழுதியுள்ளது தவறு.
பன்னிருபட லத்தில்தொல்காப்பியரும், புறப்பொருள் வெண்பா மாலையில் அய்யனாரிதனாரும், தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை எழுதிய இளம்பூரனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் போன்ற சான்றோர் பெருமக்களும் நிரைகோடல் நிமித்தம் நடைபெற்ற போர்கள் (ஆநிரைகளை கவர்ந்த போதும் ஆநிரைகளை மீட்டபோதும் நடந்த போர்கள்) பிறந்த மண்ணின் மானம்காக்க வேந்தன் ஏவியபோது கள்ளர்கள் நடத்திய போர் என்பதையும், அப்போரில் வீரமரணம் அடைந்த கள்ளர்களுக்கு நடுகல் நட்டு, அரசன் முதல் ஆண்டிவரை வீரவணக்கம் செய்து தெய்வமாக
வழிபட்டனர் என்பதையும் தெளிவாக எழுதி யுள்ளனர்.
ஆனால், கனகசபைப் பிள்ளை இவ்வுண்மையை மறைத்து எழுதியுள்ளார். நிரை கோடல் சம்பந்தமான போர்களை பின்வரும் பக்கங்களில் நான்
விவரிப்பேன்.. அதற்கு முன்பாக கள்ளர்களின் முன்னோர் களாகிய நாகர்கள் நாடாண்ட வரலாற்றை முதலில் எழுதி,போர்க்களங்களில் வீரமரணம் அடைந்த முக்குலத்து மறவர்களுக்கு-அவர்களின் வீரப் புகழ் வானளாவ ஓங்குக என வாழ்த்தி வணங்கி இக்கட்டுரையை
சமர்ப்பிக்கின்றேன்.இராமநாதபுரம் மன்னர் மாட்சிமைதங்கிய இராஜராஜேஸ்வர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவில் தலைமை உரை ஆற்றினார்.
அத்தலைமை உரையில் அவர் பேசியதாவது ”சோழர்களுக்கு முன், இப்போதுள்ள மறவர், கள்ளர் சாதியினரின் முன்னோர்கள், நாகர் என்ற பெயரில் இச்சோழநாட்டை ஆட்சி புரிந்தனர். அப்போது அவர்களின்(நாகர்களின்) தலைநகரமாக காவிப்பூம்பட்டிணம்,தஞ்சை, திருக்குடந்தை
விளங்கின என்பதை சரித்திரங்கள் வாயிலாக அறிகிறோம்.”
மேன்மைபொருந்திய வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள், இந்திரகுலாதிபர் சங்கத்தின் நான்காவது ஆண்டுவிழாவில் தலைவர் உரை ஆற்றினார். அவ்வுரையில் அவர் பேசியதாவது
”இந்நாட்டை ஆண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் என டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். திருவாளர் ம.சீனிவாச அய்யங்கார் அவர்கள், சோழர் சாதியில் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார்
கொள்கை” என்றார். (செந்தமிழ் தொகுதி-2, பக்கம் 175)
நாகர் என்பார் முக்குலத்து மறவர்களின் முன்னோர் ஆவார்.
நாகர் என்ற பெயரில் அவர்கள் நாடாண்டனர் சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்து வரிகள் 19 & 20ல் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாக்க் குறிக்கப்பட்டுள்ளது.பாண்டிய நாட்டில் நிறுவப் பெற்ற தலைச்சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப்புலவர்களுடன்வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார்.
இன்னும் கடைச்சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர் இருந்தனர். நன்னாகன், இளநாகன்,
வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந்தொகை நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டிலுள்ள நாகப் பட்டிணம், நாகர்கோயில் முதலிய ஊர்கள் நாகர்கள் ஆண்ட ஊர்களாகும்.