Monthly Archives: November 2010

மூவேந்தர்

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர்.

Posted in மூவேந்தர் | Tagged | Leave a comment

மருது பாண்டியர்கள்

சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் (மார்ச் 3, 1867 – டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் … Continue reading

Posted in பாண்டித்துரை தேவர் | Tagged | Leave a comment

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் வேலுநாச்சியார் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் வரலாறு

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது. இந்துவின் வயிற்றிலே … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 11 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2

மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : – உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும் 1. 12-5-1956-ல் மதுரையில் … Continue reading

Posted in கலவரம் | Tagged | 2 Comments

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம். நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி … Continue reading

Posted in கலவரம் | Tagged | Comments Off on முதுகுளத்தூர் கலவரம் (1957) – 3

முதுகுளத்தூர் கலவரம் (1957) – 4

(4) பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி … Continue reading

Posted in கலவரம் | Tagged | Leave a comment

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். விடுதலைப்போராட்டத்தில் பங்கு : 1755ஆம் ஆண்டு … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment