மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அழிக்கவும் முடியாது ….

தேவனின் வீரம் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போற்றுதலுக்கு உரியது ….இது நமது முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல. நாம் முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செயல்களும் செய்தவர்கள் அல்ல. அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய அரசியல் தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

 

எந்த காலத்திலும் “ஒருத்தன் நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் தேவன் டா” என்றே வாழ்ந்திருக்கிறார்கள் …. ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த நம் மூதாதையர்கள் விவேகம் என்பதை கருத்தில் கொண்டு நம் இனத்தை தன் சுயநலத்திற்க்காக, தன் நாட்டு மக்களை கதறவிட்டது இல்லை. நம் முன்னோர்களின் தியாகத்தை உணர்ந்து இருந்தால் இன்று தேவனை ஜாதி வெறியனாக எவனும் சித்தரிக்க மாட்டன் ..

தேவன் என்பது படித்து வாங்கிய பட்டமா ??

என்கிறார்கள் … தேவன் என்பதே நம் பட்டம் தான் …அது ஜாதி கிடையாது …..அதை நம் முன்னோர்களுக்கு அவர்கள் நாட்டு மக்களே [ தாழ்த்தப்பட்டவர்கள் உள்ப்பட] அளித்த பட்டம் … தன் மன்னரை கடவுளாக போற்றி வழங்கிய பட்டம் ……அந்த அளவு தன் மக்களுக்காக வாழ்ந்துள்ளனர் நம் தேவர் இனத்தின் முன்னோர்கள் …

ஆனால் இப்ப உள்ள சில பகுத்தறிவாளர்களின் பேச்சையும் , நம் இனத்தின் மீது தொடுக்கும் விமர்சனங்களையும் பார்க்கும்போது எனக்குள் தமிழன் ,இந்தியன், மனிதன் என்ற உணர்வு தொலைந்து போய்க்கொண்டிருக்கிறது ….

சொந்தங்களே நம் இனம் முக்கியம். அதைவிட நம் தேவர் இனத்தை வளர்த்து முன்னேற்ற வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.

வாழ்க தேவர் இனம் வளர்க ,நம் ஒற்றுமை உணர்வுடன்

V.K.C.K.K. மேகநாதன் தேவர் தேவர்

இனத்தின் போராளி

This entry was posted in மேகநாதன் தேவர் பதிவுகள் and tagged , . Bookmark the permalink.

One Response to மேகநாதன் தேவர் பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *