மெய்பொருள் நாயனார்

[1]
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” –திருத்தொண்டத்தொகை.

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும்.

நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான்.
கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர்.

பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான்.

‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார்.

அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.

மெய்பொருளாளர் துணைவியாரை  அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார்.

முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான்.

“இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர்.

அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார்.

பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
தேங்க்ஸ் டு http://ta.wikipedia.org/wiki/மெயà¯�பà¯�பொரà¯�ளà¯�_நாயனாரà¯�

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” – திருத்தொண்டத்தொகை.

[2]

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர்குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்புசெய்து வந்த மலையான்மான்குலமாகும்.

நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால்கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார்.

ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக்கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச்சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவுகாணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

இவ்வாறுஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர்முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்றுஅவமானப்பட்டுப்போனான்.

வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன்வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக்கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கிஉள்ளே போகவிட்டனர்.

பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர்பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கெனவந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறிஉள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார்.

அங்கேயிருந்த அரசிஅடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப்காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினானஅவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.

மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர்ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்குஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளைஎடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும்நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார்.

முத்தநாதன் நுளைந்தபொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும்கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில்இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கிநின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான்.

“இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும்நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார்.மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்தகுடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர்.

அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்துசென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன்.வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனைஇடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார்செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார்.

பின்னர்அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத்திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசுஅம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல்நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
THANKS TO http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1996653-meiporul-nayanaar
[3]
சேதிராயர்

முனைவர் மு. பழனியப்பன்

பன்னிரு திருமுறைகளில் இசைப்பா என்று இசையின் பெயரால் அழைக்கப்பெறும் திருமுறை திருவிசைப்பா ஆகும். இது ஒன்பதாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இதனுடன் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் இணைந்து இத்திருமுறை முழுமை பெறுகின்றது.

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்களின் பாடல் தொகுப்புகளுக்கு அடுத்தநிலையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அமைக்கப் பெற்றிருப்பதன் வழியாக இத்திருமுறையின் பெருமையை உணர்ந்து கொள்ள இயலும்.

இந்த ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும். ஒன்பது அருளாளர்கள்- ஒன்பதாம் திருமுறை என்ற எண் பொருத்தம் கருதியும் இத்தொகுப்பு இவ்வரிசையில் வைக்கப் பெற்றிருக்கலாம்.

மேலும் காந்தாரம், புறநீர்மை, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் ஆகிய தேவாரப்பண்களே இத்திருமுறையிலும் கையாளப் பெற்றுள்ளது. இத்திருமுறையில் சாளரபாணி என்ற பண் மட்டும் புதிதாய் பயன்படுத்தப்பெற்றுள்ளது.

இத்தொகுப்பில் 301 பாடல்கள் அடங்;கிய 29 பதிகங்;கள் உள்ளன. திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்.

இப்பதிகம் பத்துப்பாடல்களைக் கொண்டது. அந்தாதி யாப்புடையது, நான்கடிகள் கொண்ட இப்பதிகப் பாடல்கள் இறுதியடியில் ஒரு சீர் குறைந்து வருமாறு பாடப்பெற்றுள்ளன, இவ்வமைப்பு இசைப்பாடலுக்கு உரியது என்பர் இசை வல்லுநர்கள்.

இக்கட்டுரை இப்பதிகத்தை அருளிய சேதிராயர் குறித்தும், அவரின் அருட்பதிகச் சிறப்பு குறித்தும் ஆராய்வதாக உள்ளது.

சேதிராயர்

’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை

நாயனாரை நயந்துரை செய்தன‘‘

என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.

’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.

’’முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும்.

இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.

திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.

சேதிராயரின் பக்திச்சிறப்பு

இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார். அவ்வாறு போற்றிப் பரவும் தில்லைச் செய்திகளைத் தொகுத்துக் காண்கையில், பொது முடிவுகள் சிலவற்றைப் பெறமுடிகின்றது.

’’சேலுலாம் வயல் தில்லை உளீர்’’(1)

’’சேணு தற்பொலி தில்லையுளீர்’’((2)

’’சீரியல் தில்லையாய்ச் சிவனே’’((3)

’’செம்மலோர் பயில் தில்லை உளீர்’’((4)

’’செயலுற்றார் மதில் தில்லை உளீர்’’((5)

’’தில்லை வாதித்தீர் என் மடக் கொடியை’((6)

’’சிறைவண்டார் பொழில் தில்லையுளீர்’’((8)

’’தென்றலார் பொழில் தில்லையுளீர்’’(9)

’’தில்லை நாயனார்’’((10)

இவ்வாறு தில்லையைப் பாடல்தோறும் விளிப்பதன் மூலம் இவர் தில்லையின் மீது கொண்டுள்ள பக்தியை உணரமுடிகின்றது.

தில்லை நகரின் நிலப்பெருமை, நிலத்துள்ளோர் பெருமை, ஈசன் பெருமை ஆகிய மூன்று நிலைகளில் இவர் தில்லையைப் பெருமைபட கண்டுள்ளார்.

’கெண்டை மீன்கள் வாழும் வயல்கள் கொண்டது தில்லை (1), சிறகுகளை அசைத்துத் தேன் உண்ணும் வண்டுகள் நிறைந்த பூங்காக்களை உடையது தில்லை (8), தென்றல் உலாவும் சோலைகளை உடையது தில்லை(9)‘¤ ஆகிய பகுதிகள் தில்லையின் நிலவளத்தைக் கூறுவன.

’வான் முகட்டைத் தொடும் அளவிற்கு மதில்களை உடையது தில்லை(2), நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகளை உடையது தில்லை (5)‘ என்பன தில்லைநகரின் அமைப்பை, அழகைக் கூறுவன.

’பெருமை உடைய சான்றோர்கள் பயில்கின்ற இடம் தில்லை (4), மிக்க சிறப்புடைய தில்லை(6)‘ என்பன- தில்லையில் வாழ்பவரைக் குறிக்கும் அடிகள் ஆகும்.

’தில்லை வாதித்தீர் (6), தில்லைநாயனார்(10)‘ ஆகியன தில்லையில் வீற்றிருக்கும் எம்பெருமானைக் குறித்த பகுதிகளாகும்.

நிலங்களின் அமைப்பு, நகர அமைப்பு, நகர மாந்தர் திறம், நகரத்துள்ள சிவன் திறம் ஆகியனவற்றை ஒரு வழிப்போக்கர் முதன் முதலாகத் தில்லையை ஆர்வம் கொண்டு காணும் நிலையில் சேதிராயர் கண்டு பாடியுள்ளார்.

சேதிராயர் தில்லைப்பதியைக் காணும் விருப்பம் கொண்டு தன் நகரமான திருக்கோவ்லலூர் விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். முதன்முதலாகத் திருக்கோவலூர் விட்டு தில்லைப் பதிக்கு மன்னர் குலத்தவரான சேதிராயர் எழுந்தருளிய சூழலில், அதற்கான அனுமதியை அப்பகுதி மன்னரிடம் பெற்றபின் தில்லைக்குள் நுழைந்திருக்க வேண்டும்.

அவ்வாறு நுழைந்த இவர் அரசர் என்பதால் தில்லை நகர அமைப்பை, மாந்தர் நிலையைக் கண்டு வியந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடுதான் இப்பதிகம் என்பது மேற்கண்ட தில்லை வருணனைகள் வாயிலாக வெளிப்படுகின்றது.

பாடலின் கூற்று

இப்பத்துப்பாடல்களும் செவிலி கூறுவனவாக அருளப்பெற்றுள்ளன. அகப்பாடல் மரபில் தலைவியின் காதல் வருத்தம் கண்ட தோழி -செவிலிக்கும், செவிலி -நற்றாய்க்கும் தலைவியின் காதலை மொழிவது அறத்தொடு நிற்றல் என்னும் துறையாக கொள்ளப்படுகின்றது. அத்துறையில் இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும் அறத்தொடு நிற்கும்

இம்முறை இப்பதிகத்துள் சற்று மாறுப்படுத்தப் பட்டுள்ளது.

தலைவியின் வருத்தத்தைக் கண்ட செவிலி தானாக முயன்று -அவள்

காதலையும், அவளின் காதலனையும் அறிந்துகொள்கிறாள். அறிந்த அவள்

நற்றாயிடம் சென்று அறத்தொடு நிற்காமல், காதலைத் தந்த தலைவனிடமே சென்று

திருமணம் செய்து கொள்ளக் கூறி வரைவு (திருமணம்) கடாவுகிறாள்.

வரைவு கடாதல் என்னும் தோழியின் செயலை இங்குச் செவிலித்தாய் செய்கிறாள். நற்றாயிடம் அறத்தொடு நிற்க வேண்டிய செவிலித் தாய், அவ்வாறு நிற்காமல் காதலனிடம் சென்று கூறுவதாக -இப்பதிகத்துள் மாற்றமடையச் செய்திருப்பதன் நோக்கம் என்ன? என்று வினா எழுப்பினால்க்ஷ ’சிவனே உயிர்களுக்கு நற்றாய் போன்றவன் அவனே உயிர்களை ஈடேற்றுவான்‘ என்ற பதில் கிட்டும்.

எனவே தலைவனாகவும், நற்றாயாகவும் -இங்;கு உயிர்களுக்கும், ஆன்மாக்களுக்குத் தில்லைச் சிவன் விளங்கும் காரணத்தால் சேதிராயாரால் படைக்கப்பெற்ற செவிலி- இறைவனான தலைவனிடம், நற்றாயிடம் தன் மகளின் (ஆன்மாவின் ) குறையை நேர்கிறாள். சேதிராயர் செவிலியாக விளங்கி இங்கு உயிர்களை உய்விக்கும் வண்ணமாக இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தகது.

தலைவன், நற்றாய்- தில்லைச்சிவன்

செவிலி – சேதிராயர்

தலைவி – உலகஉயிர்கள் (ஆன்மா)

இவ்வாறு அகத்துறையில் இப்பதிகம் அமைந்து சிறக்கின்றது.

தலைவியின் வருத்தம்

’’தலைவி காதல் மயக்கம் பெற்றள்ளாள்(1), நாணம் உற்றனள்(2), அழுகிறாள் (3), விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆளெனா உம்மையே நினைந்து ஏத்துகிறாள் (4), ஒன்றும் ஆகிலள் (4), அயர்வுற்றாள்(5), அஞ்சலி கூப்பினாள் (5), அந்தோ என்னை உய்யச் செய்ய கொன்றை மாலை தந்து அருள்வாய்

(5), மையலுற்றாள்(6), கிளியோடு பேசுவாள்(6), ’என்று முடியும் நீர் செய்த மயக்கம்‘ என அரற்றுவாள் (7), என்னை வாதை செய்யேல் (8), உம்பொருட்டால் ஒன்றும் ஆகிலன் (9) ‘‘ ஆகிய பகுதிகள் தலைவியின் வருத்தம் கூறும் பகுதிகளாக இப்பதிகத்தில் விளங்குகின்றன.

இப்பகுதிகள் தலைவிக்கு உரியன போல் தோன்றிடினும் ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை அடைய- படும் துயரங்கள் இவைஆகும். விம்மி விம்மி அழுதல், அஞ்சலி செய்தல், மயக்கம் பெறல் ஆகியன ஆன்மாவிற்கே உரியன. இதன் மூலம் ஆன்மாவிற்கான குறியீடாக இங்;கு தலைவி காட்டப்பெற்றுள்ளாள் என்பது தௌ¤வாகின்றது.

அகத்துள் புறம்.

அகச்சுவைப்பாடலான இப்பதிகத்துள் ஆண்டவனின் புறச் செயல்கள் காட்டப்பெற்றுள்ளன. இதன் மூலம் அகமும் புறமும் நிறைந்த அழகு மிகு பாக்களாக இப்பதிகப்பாடல்கள் விளங்;குகின்றன. ஆண்டவனின் வீரச் செயல்கள் பின்வருமாறு.

1) ’’வேலையார்விடம் உண்டுகந்தீர் (1)

-(ஆலகாலவிடம் அருந்துதல்)

2) மால்கரி ஈருரித்தெழு போர்வையினீர் (3)

-(யானையின் தோலைப் போர்த்தல்)

3) சேதித்தீர் சிரம் நான்முகனை (6)

– (பிரம்மாவின் தலை ஒன்றைக் கொய்தல்)

4) பகைத்தார் புரம் இடிய செஞ்சிலைக் கால் வளைத்தீர் (7)

– (திரிபுரம் அழிக்க மேருவை வில்லாக்கி

நாணேற்றல்)

5) பன்றிப்பின் ஏசிய மறவனே (6)

-(அர்ச்சுனனுக்குப் பாசுபதமருள பன்றியின்பின்

ஏகுதல்)

6) அருக்கனைப் பல்லிறுத்து (9)

-சூரியனின் பல்லை அறுத்தல்

7) ஆனையைக் கொன்று (9)

-தாருகவன முனிவர்களின் யானையைக் கொல்லல்.

8) காலனைக் கோளிழைத்தீர்(9)

-மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்தல்.

ஆகிய சிவபொருமானின் அட்ட வீரட்ட செயல்களும் இங்கு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. அகப்பாடலுள் புறச்செய்திகள் கலந்து வருவதிலும் ஓர் அழகு உள்ளது என்பதை இப்பாடல்கள் விளக்குகின்றன.

சிவபெருமானின் திருநாமங்கள்

தில்லைப்பதியில் விளங்கும் பெருமானை அழைத்த சேதிராயர், பொதுவாகவும் அவனது திருநாமங்;களைப் பதிகப் பாடல்களில் தந்துள்ளார்.

மாதோர் கூறன் (6), வண்டார் கொன்றை மார்பன் (6), அறவன் (8),மறவன்(8) ஆகிய பெயர்கள் சேதிராயரால் சிவபெருமானுக்குத் தரப்பெற்ற பெயர்களாகும். இவற்றைத் தலைவி கூறுவதாக சேதிராயர் படைத்துள்ளார்.

இவ்வாறு இப்பதிகம் அகத்துள் புறத்தையும், அகத்துள் பக்தியையும் கலந்து தந்து சிறப்பதாய் உள்ளது. மேலும் இப்பதிகத்தின்வழி இதனை அருளிய சேதிராயர் காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கிச் சிவனிடம் பக்தி செலுத்தும் அன்பர் என்பதும் தௌ¤வாகின்றது.

அவரின் ஓர் அருட்பாடலுடன் இக்கட்டுரை நிறைவு செய்வது பொருத்தமாகும்.

’’அறவனே‘ அன்று பன்றிப் பின்ஏகிய

மறவனே‘ எனை வாதைசெய் யேல்எனும்

சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர் எனும்

பிறைகு லாம்நுதற் பெய்வளையே’’(பா-9)

நன்றி :
மாயத்தேவர்
….
This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *