சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, மதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவரின் சிலைக்கு கீழே அவரது உருவ படம் வைக்கப்பட்டிருந்தது.
தேவரின் படத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி., துணை பொதுச் செயலாளர்கள் எஸ்.பி.சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக தலைமை அலுவகத்தில் தேவர் உருவப்படத்துக்கு தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலா ளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், தேர்தல் பணிச்செயலாளர் பாண்டியராஜன், இளைஞரணி துணைச் செயலாளர் நல்லதம்பி உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு, தலைமை நிலைய செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். மதிமுக பொதுச்செ யலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில துணை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் மாலை அணிவித்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஏ.நாராயணன் எம்.எல்ஏ. தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
thanks :
Dinakaran
….
One Response to பசும்பொன் தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை!