தேவர்தளத்திற்கு வணக்கம்,
உங்களது தேவர் தளம் மிக தரமாக செப்பனிட்டமைக்கு நன்றி! அதில் சில வரலாற்று விசயங்களை பதிந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குற்றப்பரம்பரை மற்றும் நேதாஜி பற்றி படிக்கும்போது தேவரின்&சுபாஷ் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நான் முக்குலத்தோர் இல்லை. பல நாட்கள் ஏங்கியதுண்டு அக்குலத்தில் பிறக்காததற்கு. காரணம் நான் தேவர் வீட்டு மக்களுடன் நெருங்கி பழகி இருக்கேன். ரொம்ப ரொம்ப அன்பையும் சப்போர்டையும் எந்நேரத்திலும் தரும் வல்லமையும்,விவேகத்தையும் கொண்டவர்கள்.(மன்னார்குடி தேவர், உள்ளிக்கோட்டை தேவர்). சில அரசியல் வியாபாரிகள் தங்களது மேல் சில பிரத்தியேக குணங்களை திணித்து காட்டுவதும். அதை பத்திரிகைகள் (தினமலர்) வசைபாடுவதும் வழக்கமாக கொண்டுள்ளது எனக்கே மிகவும் வருத்தமா இருக்கும். குறிப்பா சினிமா துறையில் காவிரி மாவட்ட தேவர்களின் பின்புல உழைப்பு என்றும் பாராட்டத்தக்கவை! (பாடல் ஆசிரியர்,நடிப்பு). நான் என்றுமே உங்கள் சமூகத்துடன் மோதல் ஏற்படும்போது காரணங்களை ஆராய்வேன் அப்போது அம்மோதல்களின் ஆழம் அரசியல் லாபத்துக்காகவே என்று தெளிவுபடும். ரெண்டு தரப்பினுயும் பொறுமையாக அலசி ஆராய்ந்து செயல்படாத மக்குகள் இருக்கிறார்கள் என்று என்னும்போதுதான் கொஞ்சம் வருத்தம்.