சுந்தரபாண்டியன் திரைப்படமும்! – தேவர் இனமும்!

(தேவர் சமுதாயத்தை சார்ந்த திரைக்காவியம்)
படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி – மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.
 டைட்டில் முடிந்த அடுத்த காட்சியே, சுந்தரபாண்டிய தேவர் யென்ற சீயான் (பாட்டனார்) போட்டோவை காண்பிக்கிறார்கள். அதை வணங்கிய படியே சசிகுமாரின் அப்பா. தத்தாவின் பெயரான சுந்தரபாண்டியன் தான் சசிகுமாருக்கும்.
 அடுத்து ரஜினி பாணியை பின்பற்றும் விஜய் – சிம்பு மாதிரி ஒப்பனிங் சாங். சசிகுமார் படம் முழுவதும்  ரஜினி மாதிரியே இமிடேட் செய்து நடித்துள்ளார். ரஜினியின் ரசிகராகவே இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இடைவேளை வரை, பேருந்தை சுற்றியே படம் நகர்கிறது. கதாநாயகியை, சசிகுமார்  நண்பனும், வேறு ஒருவனும் காதலிக்க பல மாதங்கள் முயற்சி செய்து, சசிகுமாரையே நாயகி காதலிக்கிறாள்.  இடைவேளை வரை, பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் –  சைட் – காதல் யென பேருந்தில் செம கலாட்டா தான்.
 சூரியின் டைமிங் காமெடி செம! முதல் பாதியில் சிரிக்காமல் யாருமே இருக்க முடியாதபடி, சசிகுமாரும் – சூரியும் கலக்கலான கலாட்டா பண்ணி இருக்காங்க.
 படத்தின் பெரும்பாலான காட்சிகளில், காலண்டர் – சுவர் போட்டோ – சிலை – சாமியறை யென பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் தென்படுவதை காணமுடிகிறது.
 நண்பர்கள் வடிவில் கூடவே இருந்து துரோகம் செய்யும் நபர்களின் முகத்திரையை கிழித்து இருக்கிறார் இயக்குனர். க்ளைமேக்ஸ் காட்சியை பத்து நிமிடம் முன்னாடியே முடித்திருந்தால், படம் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனாலும், துரோகம் செய்த நண்பர்களையும் நல்லவர்களாக்க கூட ஒரு பத்து நிமிடம் எடுத்திருக்கிறார் போல.
 வம்சம் படத்துல வர கதாநாயகியின் பாத்திரம் போலவே, சுந்தர பாண்டியன் நாயகியின் பாத்திரமும் வடிவமைக்க பட்டுள்ளது வீரமாக.
 “நீ நினச்சத முடிச்சி ‘கள்ளச்சி’ ன்னு நிருபிச்சிட்ட” ன்னு, நாயகியின் அப்பா சொல்வது போல வசனம், க்ளைமேக்ஸ் காட்சிக்கும் முன்பாக வரும். நான் அனுமானித்த வரை, இந்த சுந்தர பாண்டியன் – முழுக்க முழுக்க தேவர் (நாயகன் – மறவர், நாயகி – கள்ளர்) சமுதாயம் சார்ந்த படம்.
 மண்ணின் மைந்தர்களான கள்ளர் – மறவர் – அகமுடையார் யென்ற பெரும்பான்மையான தேவர் சமுதாய மக்களை பற்றி சொல்லாமல், தமிழில் திரைப்படமே எடுக்க முடியாது, என்பதற்கு சுந்தர பாண்டியன் மற்றும் ஓர் உதாரணம்.
 தேவர்தளத்திற்காக,
 இரா.ச.இமலாதித்தன்
This entry was posted in தேவர் and tagged . Bookmark the permalink.

4 Responses to சுந்தரபாண்டியன் திரைப்படமும்! – தேவர் இனமும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *