கா. காளிமுத்து தேவர்

கா.காளிமுத்து(K. Kalimuthu ) அதிமுக அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்

குடும்பம் :

விருதுநகர் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி கிராமத்தில் 14-7-1942 ந்தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள்.காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள்ளனர்.

மதுரை தியாகராஜ கல்லூரியில் எம்.ஏ.தமிழ் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

இலக்கியபணி :

தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி’ என்றும் பாராட்டி உள்ளார்.தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக்கிய-அரசியல் பேச்சாளர்களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார்.

அரசியல்பணி ;

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவரணி அமைப்பாளராகவும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மாணவரணி அமைப்பாளராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும், அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்ததால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்

வகித்தபொறுப்புகள் :

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டபேரவை உறுப்பினர் ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும் , 1980 முதல் 1984 வரை தமிழ்நாடு விவசாய துறை அமைச்சராகவும் , 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

தமிழக சட்டபேரவை தலைவராக :

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார். இதையடுத்து அவர் தமிழக சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவராக காளிமுத்து இருந்து வந்தார். 8-11-2006 ந்தேதி காளிமுத்து மரணமடைந்தார்.

 

நன்றி : விக்கிப்பீடியா

This entry was posted in வரலாறு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *