ஊற்றுமலை வம்சாவளி

வம்சாவளி:

1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர்.

நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. இதற்கு அடுத்து பெரும்பான்மையான் மறவர் பாளயபட்டுகள் அனைத்தும் திருவிளையாடற்புரானம் மற்றும் பெரியபுரான நிகழ்வுகளில் தம் வம்சாவளியில் இனைத்து எழுதின.


பளையங்களின் கதைகளும் சூரிய,சந்திர,அக்கினி குலங்கள் பற்றிய செய்திகள்:

உலக மற்றும் இந்திய அரசுகள் அனைத்தும் தம்மை சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறி கொள்வது இயல்பு. நாயக்க பாளயபட்டுகள் அனைத்தும் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. மறவர் பாளயபட்டுகளுள் சேதுபதி தம்மை “நம்பி மார்பத நம்பிபுரானம் பாடிய ரவிகுல சேதுபதி ரகுனாதன்” -மருதூர் புரானம். என்று தம்மை ரவிகுலம் என கூறுகிறார்,உற்றுமலை,சேத்துர்,கொல்லம்கொண்டான்,செம்பி நாட்டு தலைவர்கள் தம்மை ரவிகுலமாகிய சூரிய குலம் என்று கூறுகின்றனர். தலைவனார் வம்சம்(இந்திரன்,நம்பி,தடிய,அனஞ்சா,குமார,சேதுராம,சிவராம,சொக்க) கொண்டயம் கோட்டை மறவர்கள் இதரமறவர்கள் தம்மை சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டன, வன்னிய மறவர் தலைவர்கள் தம்மை அக்னி வம்சம் என்று கூறிக்கொண்டன.இவர்கள் அனைவரும் ஓரே இனத்தை சார்ந்தவர்கள்.

ஓரே இனத்தை சார்ந்தவர்கள்சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறிவது சாத்தியமா என்றால் சாத்தியமே என்கின்றனர் பரதவர் இனத்தவர்கள்.பரதவர் இனத்தவர்களில் துத்துக்குடி பரதவர் தம்மை “நிலா பரவர் என்று சந்திர வம்சம்” என்று கூறிக்கொண்டனர், எதிர்கரை இலங்கைபரதவர் தம்மை சூரிய வம்சம் என சூரிய குலம் என்று கூறிக்கொண்டனர்(எ-டு ஸனத் ஜெயசூரிய கிரிக்கட் வீரர்), கன்னியாகுமரி பரதவர்களோ தம்மை அக்கினி வம்சம் என்று கூறிக்கொண்டனர்.
துத்துக்குடி – இலங்கை – கன்னியாகுமரி 60 மைல் தொலைவு தான் இருக்கும் இதற்குள் தம்மை பிரித்து காட்டுவத்ற்காக இவ்வாறு கூறுகின்றானர். இதுமூவேந்தருக்கும் பொருந்தும். சேர மன்னர்களில் வம்சத்தை எடுத்துக்கொண்டால் சேரர் அனைவரும் அக்கினி குலம் என்று கூருவர், ஆனால் இடைகால சேர மன்னன் ஒருவன் சந்திர வம்சத்தையே சார்ந்ததாக கல்வெட்டு ஆதரங்கல் கூறுகிறது.ஆனால் சேர மன்னனர்களுள் 12 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர அழ்வார் ராமன் மீது கொண்ட பக்தியின் காரனமாக தம்மையும் “சூரிய வம்சம்” என்று கூறிக்கொண்டார் அதானாலே தன் அரியனைக்கு “பாஸ்கர(சூரிய) திருவடி” என்றே இன்றளவும் கூறுகின்றனர், இன்றய திருவிதாங்கூர் பென் வழி சேரனோ தம்மை “நாக சூரிய வம்சம் குலத்தவன்” என்று கூறுகிறார். சேரனின் முத்திரை “வில்” திருவிதாங்கூர் மன்னர் சின்னமோ “சங்கு” .

>பிற்கால பாண்டியன் ஒருவன் “வரகுன ராமன்” என தம்மை கூறுகிறார். ஆக மூவேந்தரே தம்மை பிரித்து காட்டுவத்ற்காக சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் இவ்வாறு கூறுகின்றானர் ஒழிய இவர்களை ஆரிய வடமாநிலத்தவர்கள் என்றுமே சூரிய,சந்திர,அக்கினி அரசர்களாக ஏற்றுகொண்டதில்லை.அனைத்தும பாளயங்க்ளும் தம்மை சூரிய,சந்திர,அக்கினி குலங்களோடு இனைத்துக் கூறி கொண்டனரே தவிர இவர்கள் ஆரிய வழியினர் அல்ல என “நிகொலஸ் டிரிக்ஸ்” கூறுகிரார்.

மறவர் பாளயபட்டுகளுள் நடுவக்குறிச்சி திருவிளையாடற் புரானத்தில் வரும் “கால் மாறி ஆடிய படலத்தையும்” சிவகிரி,எழயிரம்பன்னை”பன்றிக்கு பால் ஊட்டிய படலத்தையும்” அளகாபுரி,குமாரகிரி “வலை வீசிய படலத்தையும்”. ஏனைய மறவர் பாளயபட்டுகளுள் திருவிளையாடற் புரானதில் வரும் ஒவ்வொரு படலத்தையும் கோறினர்.

இதில் ஓரளவு நம்பகத்தனமையான வரலாற்று சம்பவத்தை கொன்டா பாளயபட்டகளாக சிங்கம்பட்டி,உற்றுமலை இருந்ததாக டிரிக்ஸ் கூறுகிறார்.இவ்விருவரும 1100 வருட பாரம்பரியம் கொண்டதாக மிக மிக பழமையான பாளயபட்டக நெல்லை சீமையில் விளங்கியதாக கால்டுவேல் கூறுகிரார்(திருநெல்வேலி சரித்திரம்).

ஊற்றுமலை வம்சாவளி: இது உக்கிரங்கோட்டை என்னும் பாண்டியன் இறுதியாக அரசான்ட பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்த ஆட்சி பகுதி இது பரப்பலவில்சிங்கம்பட்டியைவிட பெரிது. இதுவும்,நெற்கட்டும் செவல்,தலைவங்கோட்டை,சொக்கம்பட்டியும் உக்கிரங்கோட்டையை சுற்றியுள்ள மற்ற பகுதியாகும். இவர்கள் அனைவரும் பாண்டியனுக்கு உறவினர்கள் ஆவர்.

உற்றுமலை வம்சாவளி ஒரளவு நம்பகத்தன்மையாக இருந்த்தாக கூறும் புரான கலப்பில்லாமல் சரித்திர பின்னனி கூறுகிறது. இதன் தோற்றம் பற்றி கூறும் மறவர்கள்(தேவர்கள்) பிறாப்பை அரக்கர்கர்களின் இடையுறுகலால் மீனாட்சி த்ம் திக்விஜயம் தடை படுவதை தடுக்க தம் வலப்புறத்திலிருந்து தோன்றிய தேவர்களவர்(இம்மறவர்கள்).இவர்கள் சகல பாண்டியர்கலுக்கும் காவலராக நியமித்தாள். தேவியின் வலப்புறத்தில் தோன்றிய தேவர்களே இம்மறவர்கள் இது அந்த காலத்தில் நிலவிய வலங்கை-இடங்கை சங்கதியில் தம்மை இனைத்துள்ளனர் என கூறுகிறார்..

முதலில் வம்சாவளி கன்னப்பனாரின் கதையும் பின்பு திருமங்கை அழ்வாரின் கதையும் வருகிறது.பொதுவாக மறவர்கள் அனைவரும் சைவர்கள் ஆனால் ஏன் வைனவத்தை தழுவினர் என்னும் காரணத்தையும் கூறுகின்ற்னர். இவர்கள் ஜமீந்தார் பெயர் ஹிருதாலயா நவநீத கிருஷ்ன மருதப்ப தேவர் ஆகும். ஒருமுறை பிற்கால பண்டியன் மகளிர்கொடை கேட்ட்போது தரமறுத்துவிட்டனராம் காரணம் பாண்டியன்(சந்திரகுலம்) என்றும் இம்மன்னர்(சூரியகுலம்) எனவே பொருந்த்தாது என மறுத்துவிட்டனராம்.பாண்டியனுக்கு உட்பட்ட குறுனில மன்னனாக இருந்தும் தர மருத்துவிட்டார்.

பின்பு ஒருமமுறை குரும்பர்கள் தொல்லை அதிகரிக்கவே மறவர்கள் சென்று அடக்கி அவர்கள் காடுகலை அழித்து நாடுகளக்கினர்.பின்பு தம்மை எதிர்த்து தாக்க வந்த கொள்ளையர்களை அழித்து பாண்டியனை பல பிரச்சனைகளால் காத்ததால் இவர்கலள் தலைவனுக்கு புலிகொடி,மீனக்கொடி,வளரிக்கொடி(இந்திரகொடி) கொடுத்து சாமரம்,வென்கொற்ற கொடை,முத்துபள்ளாக்கு அளித்து ” பாண்டியன்” என்றப் பட்ட்த்தையும் வழங்கினர்.திருமலை நாயக்கர்,பாண்டியர்,சேதுபதி மன்னர்கலுக்கு அடுத்து நவராத்திரி பண்டிகை கொண்டாடும் உரிமையை பெற்றிருந்தார்.ஒரு முறை இத்தலைவர் “வல்லப மகாராஜா” என்று பாண்டிய பட்ட பெய்ருடன் நவரத்திரி பண்டிகையை தலைமை தாங்கி பாண்டியனின் உக்கிரங்கோட்டையில் பாண்டியனுடன் கொண்டாடிய உற்ற தோழனாவர். பின்பு நாயக்கர்கள் ஆட்சியில் இவர்கள் பாளயம் ஆகிறது.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களால் அடக்கபட்டு ஜமீன் ஆகிறது. இவ்வாறு உற்றுமலை வம்சாவளி முடிவடைகிறது. இறுதியாக இவ்வம்சாவழியின் மூல்மாக மறவர்கள் வனவேட்டூவர்களாக ராஜா விசுவாசியாகவும்,முரட்டுபக்தர்களாகவும்,குறுனிலைமன்னர்களாகவும் தொன்றுதொட்டு பேரரசர்களுக்கு சேவகம் செய்து வந்துஇருக்கிறார்கள். எனினும் இவர்கள் மூதாதையர்கள் இம்மன்னை ஆண்ட பேரரச்ர்கள் வழிவந்தவ்ர்கள் என தெளிவாக தெரிவதாக கூறுகிறார்.

This entry was posted in ஊற்றுமலை ஜமீன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *