மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும்.

மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்:

பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்)
பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்))
வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்)
நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்)
சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))

மூப்பனார் பட்டம் கொண்டோர்:

முத்தரையர்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)
சாலியர்(மூப்பனார்)=(நெசவாளர்கள்)
வன்னியர்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)
பார்கவ குல சுருதிமான்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)
மேலும் மலைஜாதியினர்,வேட்டுவர் என சில பழங்குடிகளிலும் மூப்பர் என்ற பட்டம் உள்ளவர்களுண்டு. இன்னும் அநேக பழமையான தமிழ் ஜாதிகளில் காணப்படும் பட்டங்களில் இதுவும் ஒன்று. அந்தந்த இனக்குழுக்களின் தலைமையாக செயல் பட்டோருக்கு மூப்பர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. குல உயர்வு கருதி ஆர் விகுதி கொண்டு அழைக்கப்படுதல்,

மூப்பன்+ஆர்=மூப்பனார்.
மேற்கண்ட இனக்குழுக்கள் மூப்பர்,மூப்பனார் என்று பட்டத்தால் ஒன்று போல் காணப்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் துளியும் இன சம்பந்தம் கிடையாது. அனைவரும் வெவ்வேறு இனக்குழுக்களே.
நன்றி: செய்தி வழங்கியவர்:

சேரமான் பெருமாள்:வீரமுடையார்

This entry was posted in இணையம் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *