சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம், கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப்
பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.
இந்த ஐந்துமங்கலத்தில் ஒரு ஊர்தான் ‘மறவ மதுரை’.
இவர்களை பற்றி புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய
புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் மறவர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.
நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக்
கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து ‘மறவர் மதுரை’ என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து
கொண்டு, இவர்க்குப்பிறந்த கிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர்.
இந்த ஐந்து மங்கலங்களிலும் இளமக்கள்(எ)இளம்மறவர் என்ற சமூகத்தவர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.அவர்கள் தங்களைப் பாண்டிய மன்னனது இளையதாரத்து மக்கள் எங்கின்றனர். இளையதாரத்து மக்கள் என்ற சொல்லே இளமகர்கள் (அ) இளம்மாக்கள் என அழைக்கபடுவதாக கூறுகின்றனர்.அந்த இளம்மாக்கள் வம்சத்து இளம்மறவர்கள் இந்த பகுதியின் ஐந்து மங்கலங்களிலும் தலைமை பதவிகளான ஐந்துநாட்டார்கள் என அழைக்கபடுகின்றனர்.இவர்களுக்கு இங்கு ‘அம்பலம்’ பட்டம்.பொதுவாக மறவர்களுக்கு தேவர்
பட்டமே இருப்பினும் இவர்களுக்கு இங்கு அம்பலப்பட்டம் உள்ளது.இவர்கள் சிங்கம்புனேரி கோயில் திருவிழக்கலிலும் முதல்மரியாதை வாங்கும் இனமாகவும் உள்ளது.
செய்தி விபரம்:
சிவகங்கை மந்திரி, ஐந்தினிலை நாட்டை வம்சம் பரம்பரை வரலாறு, இரா.சேது. பாரியது பறம்யு(கட்டுரை),சிங்கம்புனேரி,நிக்கோலஸ் டிரிக்ஸ்(இந்திய வரலாறு).