நம்பி நெடுஞ்செழியன்

pandian012

நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170 முதல் 180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்.

அதில் “செய்தக்க எல்லாப் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?’ என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்,

புலவர் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இது கானப்பேரெயில் எனப் பெயர் பெற்றிருந்த ஊர்.உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இவ்வூரில் போரிட்டு அதனைத் தனதாக்கிக் கொண்டான். எனவே நம்பி நெடுஞ்செழியன் இந்தப் போரில் மாண்டவன் எனலாம்.

இவனைப் பற்றிய குறிப்புகள் :

  • தோளில் காப்பு அணிந்திருந்தான். தலையில் பூச் சூடியிருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான்.
  • பகைவரைப் பூண்டோடு அழித்தவன்.
  • நண்பர்களுக்கு உயர்வளித்தவன்.
  • வலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான்.
  • யாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான்.
  • தேரிலும், யானைமீதும் உலா வருவான்ய
  • பாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான்.
  • ஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.

அடிக்குறிப்பு :

  1. தொடிஉடைய தோள் மணந்தனன்

    கடி காலில் பூச் சூடினன்

    தண் கமழும் சாந்து நீவினன்

    செற்றோரை வழி தடித்தனன்

    நட்டோரை உயர்பு கூறினன்

    வலியர் என வழி மொழிபவன்

    மெலியர் என மீக்கூறலன்

    பிறரைத் தான் இரப்பு அறியலன்

    இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்

    வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்

    வருபடை எதிர் தாங்கினன்

    பெயர் படை புறங்கண்டனன்

    பாண் உவப்ப பசி தீர்த்தனன்

    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்

    இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ

    படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!

    —(புறம் – 239)
This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *