கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும்.
கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது.
இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் பெயர் பூண்ட பாண்டியரின் தலைமை இடமாகும்.
கவுரியர் நன்னாடு என்பது பாண்டியநாடு. அந்நாட்டிலுள்ளது அருவி கொட்டும் மலைப்பிளவு. (குற்றாலம்). அப்பகுதி அரசன் தென்னன்.
கவுரியர் மதி போன்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் நிலப்பரப்பை யெல்லாம் காப்பேன் என முரசு முழக்கிக்கொண்டு தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுகையில் ஈகைப் பாங்கைத் தவிராது கடைப்பிடித்து வந்தார்களாம். இவர்களின் மரபு வழியில் வந்தவனாம் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
அடிக்குறிப்பு :
- வெல்போர்க் கவுரியர் தொன்முது கோடி … வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் – அகநானூறு 70
- அகநானூறு 342
- இரும்பிடர்த்தலையார் பாட்டு புறநானூறு 3