மகாவித்துவான் தமிழறிஞர் இராகவ அய்யங்கார் தமிழக குறுநில மன்னர்கள் என்னும் தலைப்பில் வேளிர்வரலாறு,கோசர்,பல்லவர் வரலாறு,சேதுநாடு என்னும் தலைப்புகளில் சேதுபதிகள் என்னும் தலைப்பில் மறவர்கள் என்ற இனம் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலாலும் வில்-வாள் முதலாய படைத்தொழில் வலியாலும் தம் உயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர் . அகம் வில்லுழுவர்,வாளுழவர்,மழவர்,வீரர் முதலிய பெயர்களில் இவர்களை கூறுவர் முன்னோர். இவர் திரைகவர்ந்ததால் வெட்சி மறவர் எனும் பெயர் பட்டனர்.
நிரைகளை மீட்கும் மறவரை கரந்தை என கூறுவர்.
வெட்சி மறவர்க்கு ஆறலைப்பார்,கள்வர் முதலிய பெயர்களும் கரந்தை மறவர்க்கு வயவர்,மீளியர் முதலிய பெயர்களும் நன்று பொருந்தனுவாகும்.
இரண்டு வகை மறவரில் சேதுபதிகள் கரந்தை மறவராவர்.
இம்மறவர் வாழ்ந்த பழையவூரை கரந்தை என்றும் சேதுபதிகளை கரந்தையர் கோன் எனவும் “மல்லார் கரந்தை ரகுநாதன் தேவை வரையில் “கரந்தையர்கோன் ரகுநாதன்”(ஒருதுறைக்கோவை-68). இவர்களே மூவேந்தருக்கும் படையும் படைத்தலைவவருமாய் விளங்கினர்.
சேதுபதிகளை பற்றிய கல்வெட்டுகள் செப்பேடுகளும் சூரிய குலத்தை சேர்ந்தவர் என கூறும் ஆதாரங்கள்
http://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
http://thevar-mukkulator.blogspot.in/2014/05/blog-post_26.html
10:1
“இரும்பாழி மறவன் அரசன் தேவனான அநபாய நாடாழ்வான்”
No.667
(A.R.No 106 of 1895)
“பழுவேட்டரையர் கண்டன் மறவநார் பெருந்திறத்து அரையன் சுந்தர சோழன்”
No.1393(A.R.No 276-1911)
“செம்பியன் இக்காட்டு வேளானான மறவன் நக்கன்”
இவர்களே சேரன் மறவர்,சோழன் மறவர்,பாண்டியன் மறவர் என வழங்க பட்டனர்.
நன்னன்,ஏறை,அத்தி,கங்கன் கட்டி முதலியோர்கள் சேரன் மறவர்(அகநானூறு:44).
கோடைபொருநன் பண்ணி,நாலைகிழவன் நாகன் பாண்டியன் மறவர்(அகம்:44,326,புறம்:183)
பழையன்,பண்ணன் முதலியோர் சோழன் மறவர்களாவர்.
இச்சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் என வழங்குவர்.பாண்டியநாடு பாண்டி நாடு என கூறுவர். செம்பியன் நாடு செம்பிநாடு என ஆனது. ஒருதுறைக்கோவையிலும் ரகுநாத சேதுபதையை செம்பிநாடன்(60,82) செம்பியர் கோன்(203) செம்பி நாட்டிறை(208) செம்பியர் தோன்றல்(218) என வழங்குதல் காண்க.
இச்சேதுபதிகளை இரவிகுலத்தவரெனகூறுதலும் அச் சேதுபதி சாசனங்களில் உள்ள விருதாவளிகளில் முதற்கட் “சோழ மண்டல பிரதிஸ்டாபகன்” ‘அகளங்கன்’ எனவரும் விருதுகளும் இவர் சோழர்மறவராகியவர்கள் சோழநாட்டை விட்டு சேது தீரத்திற் குடியேறிகாலம் இது திரிபுவனதேவன் எனும் பெயர் கொண்டது காரணமாகிறது.
இவர்களின் பழைய சாசணங்களிற் பெரும்பாலும் “குலோத்துங்க சோழ நல்லூர்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கிசாதிபர்” என சோணாடு ஈண்டுபோந்துகண்ட தலை நகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பது இங்கு உற்றுனோக்குவதாக.
சோழர்கால கல்வெட்டுகளில் சிலர் மறவரின் கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்துகிறது.
விரையாதகண்டன் எனும் பெயரில் கண்டன் என்பது குலோத்துங்க சோழன் பெயரில் ஒரு பெயராகும்.இக்காலத்து சேதுபதிகள் தலைநகராகிய முகவைக்கு ஒரு காத தூரத்தில் வைகைக்கரையிலே கங்கைகொண்டான் என்னும் பெயரில் ஒரு ஊர் உள்ளது.
இச்சேதுநாட்டு வீரபாண்டி,விக்கிரமபாண்டி,வீரசோழன்,சோழபுரம் என்னும் பெயர்கள் இருப்பது நோக்கதக்கது.
அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் “பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் “வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்
எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .
இச்சேதுபதிகள் சாசணத்தில் அகளங்கன் எனவும். அமிர்தகவிராயர் அபயரகுநாதசேதுபதி,செம்பியன்,அநபாயன் ரகுந்தாதன்(242) புணர்செம்பியன்,சென்னிக்கும் சென்னி ரகுநாதன் என கான்க. இரவிகுலமென்பதுபற்றி சோழரின் குலமாகிலும் இரவி குலத்தில் தோன்றிய சீராமமூர்த்திபெயரே இவர்களுக்குபெயராக வைத்து ரகுநாதசேதுபதியெனச்சிறப்பித்து வழங்கினர் போலும் இச்சேதுபதிகளில் இராஜசூரியசேதுபதி எனவும் சூரியன் புன்னாடட் சோழன் பெயரே. சோழன்மறவனாகிய பண்ணன் பெயர்வழக்கம் இராசசிங்கமங்கலம் ஊரின் அருகே உள்ள பண்ணக்கோட்டை எனவும். சிறுகுடியெனவும் வழங்கும் ஊர்கள் இரண்டும் உள்ளன.
தொண்டி சோழரின் துரைமுகங்களில் ஒன்று. சேதுபதிகளின் விருதுவாளிகளின் தொண்டியன் துறைகாவலன் என்னும் பெயர் சேதுபதிகளுக்கு உண்டு.
இம்மறவர் சோழரின் மரக்கலப்படையுடையுடையராயினாரென்பது நன்கறியப்படும். இம்மறவர்களுக்கு ஆற்றுப்பாய்ச்சி,கடற்பாய்ச்சி எனும் பட்டங்கள் உள்ளனர். இம்மரக்கலப்படைவலியாற் சென்று ஈழமும்,கொங்கும்,யாழ்பாணராயன் பட்டணமும் கஜவேட்டைகொண்டருளினர்.
இம்மறவரில் “மரக்காயர்கிளை” எனும் கிளையினர் இம்மரகலத்தலைவராயிருந்தோர் என கருதலாம். இம்மறவருள் தொண்டைமான் கிளை என சிலரை வழங்குவதும் சோழற்கும் இவர்க்குமுள்ள தொடர்பில் நாகபட்டினத்திருந்த சோழன் ஒருவன் நாக இளவரசியை மணந்தான். நாககன்னிகைக்கு மகன் ஒருவன் தோன்றினான் அவனே திரையன் என பெயர் பெற்றான்,தொண்டைமான் சோழர்வழிதோன்றலென்பதும் சோழராலே தொண்டைமான் நாடாட்சி அளிக்கப்பட்டனரென்பதும் தெளிவாகும்.
சோழனுக்கும் நாக பெண்ணுக்கும் பிறந்தவனே தொண்டைமானாகும்.
இவர்களே மறவரில் தொண்டைமான் கிளையினராகௌம். இம்மறவரை தேவரென சிறப்பு பெயர் புனைவதாலும் குலோத்துங்க சோழதேவன்,திரிபுவந தேவன்,இராஜ இராஜ தேவன் என தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத்தேவன் என்பர் உனர்க.
இனி இம்மறவர் புனைகின்ற முல்லை மாலை சோழர்க்குரியதாகும். முல்லையத்தார் செம்பியன்(பாடான் படலாம்-24). என ஐயனாரிதனார் கூறினர்.
இச்சேதுபதி “முல்லைவீர தொடை புனைவோன் ரகுநாதன்”(6). இச்சேதுபதிகள் சோழன் மறவர் வழிதோன்றலே என நன்குணரலாம்.
இச்செம்பிநாட்டு மறவருக்குள்ளே ஒர் கிளையினர் “பிச்ச்கிளை” என்னும் ப்யரான் வழங்கபடுகின்றனர்.பிச்சம்-குடை சேத்பதிகள் குடை “செங்காவிகுடையாகும்” ‘கார்செம்பி நாடனுயர் செங்காவிகுடையான் ரகுநாதன்”
என்பது ஒருதுரைக்கோவையாகும்.
‘திருவுடை மன்னரெல்லாம் திருமால் கூறாவர் ரகுநாதன்’ எனப்பேர் பெற்றது ஸ்ரீ ராம தோன்றிய சூரியகுலத்தவதரித்த விஜயரகுநாதன் என்பதை பேராக கொண்டனர் எனலாம்.
குலோத்துங்க சேதுபதியின் புத்திரராகிய சமரகோலாகல சேதுபதி சோழமன்னரிடத்தில் குடாக்கடலில் முத்துகுளீக்கும் உரிமையை பெற்ரனராதலால் தமது கடல்வளமுடைமை பெயர்களே “முத்து” என பெயர் பட்டனர்.
இச்சேதுபதிகள் பயன்படுத்திய அரிய வளரிபயிற்ச்சியும்,வீரக்கழல் அனிந்தமை
சிற்றம்பல கவிராயர் பாடிய தளசிங்கமாலையில்,
“கீர்த்தியுஞ் செந்தமிழ் நிலையாகு……விசய ரகுநாத சேது தளசிங்கமே”.
சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்ட திரையர் எல்லாம் தொண்டைமான்கள் என பெயர் கொண்டார்போல், இச்சேதுபதிகளால் நாடாட்சி பெற்றவர் புதுக்கோட்டை தொண்டைமானாகும்.
“சூரியன் போற்றுமிராமேசர் நாளினைக் கன்புவைத்தை சூரியன் வீரையர்கோன் ரகுநாதன்” என சேதுபதிகளை குறிக்கிறது.
இச்சேதுபதிகள் இராமநாதபுரமாகிய முகவையை தமக்குரிய தலைநகராகக் கொள்ளுதற்கு முன்னே சேது நாட்டிற் பல ஊர்களை தலைநகராக கொண்டு ஆண்டுள்ளனர் அவை
1)குலோத்துங்க சோழ நல்லூர்
2)விரையாதகண்டன்
3)செம்பினேந்தல்
4)கரந்தை
5)வீரையம்
6)தேவை(இராமேஸ்வரம்)
7)மணவை
8)மழவை
9)புகலூர்(போகலூர்)
சேதுபதிகளை பற்றிய குறிப்புகள்:
சேதுநாட்டை சங்கர சோழனுலாவில்,,
“மாது மணக்கு மணவாளன் சேதுக்குந்
தஞ்சைக்குங் கோழிக்குந் தாமா புகாருக்கும்
வஞ்சிக்கும்…………
பல நாடுகள்க்கும் முற்புடவைத்துஸ் சேதுநாட்டை குறித்ததாகும்
சேதுவுக்கு பாண்டியரே பேரரசாகுதல் பற்றி
“வென்வேகவுரியர் தொன்முதுகோடி முழங்கிரும்”
கவுரியராகிய பாண்டியர் சிவகங்கை மன்னவர் ஆவார்.
தஞ்சை ஆண்ட நாயகர்குலத்து திருமலம்பா என்னும் பெண்மனியால் மிகவும் செய்யப்பட்ட வரதாப்யுதம் என்னும் வடமொழி காவியத்தில் சேதுபதி அரசரை
“ரக்ஷித்வா சேதுனாதம்
சரணமுபகதம்
பாண்டியயராஜா பதகம்தம்”
சேதுநாதம் என்றும் பாண்டிய வரசர்க்கு நன்பர்
என்ரு கூறபட்டுள்ளது.
சேதுநாட்டை செம்பிநாடென்றும் சேதுவை படைச்ச ஸ்ரீராமமூர்த்தியை சேது நாட்டன் என்று துணிந்து அவனையே செம்பிநாட்டன் என வழங்குதல் ,,
“காட்டானை குறுதுயரக் காட்டனை திருமருவிக்களிக்குஞ் செம்பினாட்டானை”
சேதுநாட்டான் என்று துனிந்து அவையே செம்பிநாட்டன் என கூறுகிறது.
சேதுபதிகளை வைனவரெல்லாம் “திருவுடை மன்னரை காணிற் திருமாலை கண்டேன்” என ஸ்ரீ ராமமூர்த்தியாகவும் சைவரெல்லாம் ஸ்ரீராமநாதமூர்த்தியாகவும் மரியாதை செய்வதாகும் என அரியலாம்.
ஒருதுரைகோவையில் – அமிர்தகவிராயர்
“கோரத்தை யூர்த்த வளவர் குலசேர் குலமறவர்
பாரிர் புரிந்த பெரும்பாக்கியத்தின்”
சோழர் குலத்தை சார்ந்த மறவர் தென்னாட்டை பின்னாளில் சேந்தனர்.
“காளியை போற்றி செருக்களம் செல்தறுகண்மறவர்”
கொற்றவையை வணங்கி போருக்கு சென்ற மறவர்கள்.
“பல்லவர் போர்வென்ற சோழர் துனைவலியாக சென்ற செம்பிநாட்டு மறவர்”
பல்லவரை வென்ற சோழர் துனைவராக சென்ற செம்பிநாட்டை சேர்ந்த மறவர்.
சேர சோழபாண்டியர்க்கு பின் சுத்த தமிழ் அரசர்கள் சேதுபதிகள் மட்டுமே.
இவ்வொருத்துறைக்கோவை திருமலை சேதுபதியின் பெயரால பாடப்பட்டது. இதைபாடியது அமுதகவிராயர். இச்சேதுபதிகளால் நல்லுதவி பெற்று சிறந்த செந்தமிழ்புலவர் பலராவார் அவர்கள்.
புலவர் பாடியது
அகோரதேவர் திருக்கானப்பேர்ப்புரானம்
திருச்சிற்றமல தேசிகர் திருவாடனை புராணம்
காட்டார்ந்தகுடி
கண்ட தேவர் மருதூரந்தாதி
சிற்றம்ப்லகவிராயர் தளசிங்கமாலை
அமிர்த கவிராயர் ஒருதுறைக்கோவை
உவேசுவாமிநாத ஐய்யர்களுக்கும் சேதுபதிகளின் நட்பும்:
வித்துவான் இராகவ அய்யங்கார் அவர்களுக்கு சேதுபதி மகராஜ எழுதி கொடுத்த உரிமை பத்திரத்தில்.
1901 இல் நவன்ம்பர் 4 மதுரை ஜில்லா இராமநாதபுரம் சமஸ்தானம் லேட் ராஜா முத்துராமைலிங்க சேதுபதி மகாராஜா அவர்கள் புத்திரர் மறவ ஜாதி சிவமதம் ராஜா அந்தஸ்துள்ள ஸ்ரீமான் ஹிரன்யகர்ப்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத ரஜாயம் பாஸ்கர சேதுபதி மகராஜா அவர்கள் இராமநாதபுரத்தில் இருக்கும் லேட் ராமானுஜ அய்யங்கார் புத்திரர் பிராமன் ஜாதி வைஷ்னவமதம்…………
சேரசோழபாண்டியர்கட்குப் பின் சுத்த தமிழ் அரசர்களான சேதுபதிகளே தமிழ் பாஷாவிருத்தி தமிழ் வித்துவான்களுக்கு ..…………….
என சேதுபதிகளின் குலத்தை பற்றிய பல ஆதாரங்களை இராகவ அய்யங்கார் வெளியிட்டுள்ளார்
நன்றி:
இராகவ அய்யங்கார்
தமிழக குறுநிலை மன்னர்கள்
சேதுநாடும் தமிழும்
ஒரு துறை கோவை-அமிர்த கவிராயர்