‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்)
பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் வீறுகொண்ட வெஞ்சமர் கதை கூற வந்தோம் யாம்.
சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் இராச விசுவாசத்திலும் பாரம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர்போன ஊர். கி.பி 1772-ல் இராமநாதபுரம் கோட்டைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேது நாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்த போது பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்த பகுதிக்குள் அன்னியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள் . அத்தகையை ஊரில் பிறந்தவர்தான் தளபதி மைலப்பன் சேர்வைக்காரர்.சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். மைலப்பன் என்பது இவரது இயற்பெயர் அல்ல இவருக்கு முன் வாழ்ந்த மைலப்பன் என்ற பெருமகனாரின் வழித்தோன்றலான இவருக்கும் அந்த பெயர் வந்தது.
சிறுவயதில் மறவர் நாட்டை சென்று 3000 மாமறவர்களின் உயிர் கொன்ற கூலிப்படையான ஆங்கிலேய கம்பெனியும் அவனின் அன்றைய எஜமானனான ஆர்க்காடு நவாப்பின் படைகளும் ராம்நாதபுரம் கோட்டையை கைப்பற்றி சிறுவயது பாலகனான மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து திருச்சி கோட்டைக்கு கொண்டு சென்றதை எதிர்த்து மாப்பிள்ளை தேவனுடன் சென்றதை எதிர்த்து போராடியது1797-ல் சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி,இறைகளை கும்பெனியாருக்கு கொடுக்க மறுத்தது மைலப்பரின் போராட்டம் வவரிக்க முடியாத வரலாறு.
மயிலப்பனின் முதல் போர்:
1763-இல் மறவர் நாட்டு முக்கிய நகரங்களில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்த போது அந்த குழப்பத்தை பயன்படுத்திகொண்டு அவர்களுக்குகெதிராக தனது விரிவாக்கத்திர்கான அரசியல் நடவடிக்கைகளை நவாப் திட்டமிட்டான்.
1772 ஜனவரியில் நவாப் படைகள் சிவகங்கையில் நுழைந்து முக்கியமான துறைமுகம் தொண்டியைக் கைப்பற்றினர். சௌமியலிங்க பிள்ளை தலைமையிலான மறவர் படைகள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இயலாது கலைந்து செல்ல நேரிட்டது. ஆனாலும் நவாப் கர்னாடகா மீது மராட்டியர்கள் படையெடுத்தையொட்டி தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டான். மறுபடியும் மே-1772 இல் நவாப் மற்றும் ஜோசப் ஸ்மித் தலைமையிலான் கும்பினிப் படைகள் மீண்டும் தங்கள் தாக்குதலை தொடர்ந்து இராமநாதபுரம் கோட்டை ஒரு பெரும் பீரங்கியை ஐம்பது இலகுரக துப்பாக்கிகைளையும் பெரும் திடலையும் நாற்பத்து நாண்கு அரங்குகளையும் ஒரு அகழியையும் கொண்டிருந்தது அரசுக்கு எதிராக எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில் மே 28-ஆம் நால் இரானுவம் கோட்டைக்கு எதிரே திரண்டது. பாஞ்சேர் தலைமையில் மற்றோரு நிலைப்படை மதுரையிலிருந்து புறப்பட்டு சிவகங்கை கிழக்கு பகுதியில் முன்னேறி திருப்புவனத்தை கைப்பற்றியதன் மூலம் சிவகங்கை படைகள் சேதுபதிகளுக்கு உதவி செய்ய முடியாமல் தடுத்துவிட்டது.
ஆற்காடு முகமது அலியின் மகன் படையின் குழுத்தலைமை ஏற்று அரசியின் தூதரோடு பேச்சு வார்த்தை நடத்தி பாளயங்களை பனியவைக்க எடுத்த முயற்ச்சி தோற்றுப்போனது. ஜூன் முதல் நாள் ஸ்மித் ஒரு பொது முற்றுகை போருக்கு உத்தரவிட்டு மறுநாள் கோட்டை சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தினான்.வையிட் தலைமையில் ஒரு எறிகுண்டுப்படையினர் கோட்டையை தாக்கினர். இதில் 3000 மறவர் படையினர் இறந்துவிட வளமிக்க நகரை சூறையாடினர் ஆங்கில படையினர்.
பின் இந்த சமஸ்தானத்தை கிழக்கில் ஜோசப்பும் மேற்க்கில் பான்சேரும் 1772 இல் கைப்பற்றினான். இது போன்ற படையெடுப்பை எதிர்பார்ததே சிவகங்கை உடையத்தேவர் சாலைகளில் தடைகளை நிறுவியும் பதுங்கு குழிகளை நிறுவியும் அமைத்திருந்தார்.
முகமது அலி அவரிடம் திரைப்பணம் ஒரு லட்ச ரூபாய் தருமாறு கேட்ட போது அவர் மறுத்து விட்டார். ஜூன்-21 ஆம் நாள் ஸ்மித்தும் பான்சேரும் ஒருங்கினைந்து சிவகங்கையை ஆக்கிரமித்தனர். மறுநாள் படைகள் காளையார் கோயிலை நோக்கி சென்று கீரனூர் சோழவரம் ஆகிய சாவடிகளைக் கைப்பற்றினான். இந்த சூழ்நிலையில் சிவகங்கை அமைச்சர் தாண்டவராய பிள்ளை முகமது அலிக்கு ஒரு உடன்பாடு தயாராகயிருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால் அந்த கடித்ததை சிவகங்கை படைகள் தடுத்தி நிறுத்தி வட்டனர். ஜூன் 25 ஆம் ஆண்டு 1772 ஆம் ஆண்டு சிவகங்கை படைகளோடு மோதினான். இதில் சிவகங்கை அரசர் தனது ஆதரவார்களோடு போரில் இறந்தார் அவரது மனைவியும்,தளபதிகளான மருது சகோதரர்களும் திண்டுக்கல் விருப்பாச்சிக்கு தப்பி சென்றனர்.படையெடுத்து வந்தவர்கள் 50000 பகோடா மதிப்புள்ள நகைகளை கைப்பற்றிக்கொண்டனர்.
நவாப் இவ்வாறு மறவர்களை வென்று அவர்களது பெரும் பகுதிகளை இனைந்த்து கொண்டான். இந்த நிலை உருவாக காரணம் அவ்விரு அரசுகளும் வலுவற்றிருந்தது மட்டுமின்றி தென்னிந்தியாவின் மற்ற பாளையங்களில் இருந்து தனிமை பட்டிருந்தது. மேலும் சிவகங்கை அரச குடும்பம் தனது எதிரி நாடான மைசூருக்கு ஓடியது. பிரச்சனைக்கு கூடுதல் காரணமாகியதால் இவ்வாறு அரச குடும்பம் ஒடுக்கபட்டது மக்களின் உறுதியான சுதந்திரத்துக்கும் உணர்வுக்கும் அரச விசுவாசத்திற்கும் ஒத்து போகவில்லை.
இரண்டாம் மைசூர் யுத்த தொடக்கத்தில் இராம்நாதபுரம் மற்றும் சிவகங்கையின் கட்டுப்பட்டினை முகம்மது அலி இழந்த போது இந்தப்பாளையங்கள் இணைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பின்னும் நவாப்புக்கும் பாளையக்காரர்களுடனான சமரசம் தோல்வியை கண்டது.
இராமநாதபுரம் பகுதிகளில் போர் வீரர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்த மறவர்களுக்கு போர் தொடுப்பதிலும் பின்பு அங்கிருந்து விடுபட்டு தங்கள் பயிர் நிலங்களுக்கு திரும்புவதிலும் ஆக இருவகையிலும் சூழலுக்கு ஏற்ப மாறி கொண்டும் கள்ளர்களோடு உடன்பாடுகண்டும் நெருங்க முடியாத வனங்களில் சாவடி அமைத்தும் மற்றும் சர்க்கார் பகுதிகளில் கலவரங்களை உருவாக்கி கொண்டும் இருந்தனர். ஈட்டிகளையும்,துப்பாக்கிகளையும் ஏந்தி கும்பினியின் முகாம்களைக் கொள்ளையிட்டதோடு நவாப் படை கொண்டிருந்த கோட்டைகளுக்குள் எறிகணைகளை வீசினர். இதன் விளைவு 1780 இல் நவாப் நிர்வாகம் கோட்டைக்ளுக்குள் புகலிடம் கேட்க நேரிட்டது. நாட்டின் பெரும் பகுதி சேதுபதிகளின் மாமனான மாப்பிள்ளை தேவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதற்கிடையில் சிவகங்கையின் முன்னாள் திவான் தாண்டவராயபிள்ளை போரில் இறந்துபட்ட உடையத்தேவரின் நாடு மீட்கப்பட உதவுமாறு கைதர் அலியை வேண்டினார் மைசூர் மன்னர், மறவர் நாடுகளை மீட்க உறுதியளித்த சில மாதங்களுக்குள் தாண்டவராய பிள்ளை மறைந்தார். அவரது மறைவுக்கு பின் மருது சகோதரர்கள் இருவரும் ஆக்கிரமிக்கப்ட்ட பகுதிகளின் பிரச்சனைகளில் முன் நின்றனர்.1780-இல் கைதர் அலி ஆற்க்காட்டின் மீது படைஎடுத்து திண்டுக்கல்லை கைப்பற்றி நவாப்பின் ஆட்சிப் பகுதிகளில் மதுரை நகர் எல்லை வரை கைப்பற்றி விட்டனர். மருது சகோதரர்கள் சிவகங்கையில் நுழைந்து விட்டவுடன் உள்ளூர் மக்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ள கலவரம் பரவியது. இதில் வேலுநாச்சியாருடன் சிவகங்கை படைக்கு தலைமையேற்ற மருது பாண்டியர் மிகப்பெரிய வெற்றியை பெற்றனர்.
நாடு துண்டாடபட்ட போதும் தகர்க்கவியலாத சுதந்திர உணர்ச்சியுடைய மக்கள் இறுதியில் வென்றனர். அதன் பின்.முகமது அலி கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு வளர்வதை தடுக்க 20 வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியை சிறையிலிருந்து விடுத்து 1781-இல் சேதுபதியாக நியமித்தான்.இதனால் கோபமான மாப்பிள்ளைத்தேவர் ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டார்.1772-இல் மே மாதம்,கடைசி வாரம் மீண்டும் ஒரு பெரும் படை இராமநாதபுரம் கோட்டை வெளியில் தஞ்சை படையை விட அளவிலும்,வலிமையிலும்,மிஞ்சிய அற்க்காடு நவாப்பின் படையும் கும்பெனியாரின் பரங்கிப்படையுடன்
கி..பி 1799 ஏப்ரல் 24-ல் காலை,அமைதியைக் குழைத்து முதுகுளத்தூரில் துப்பாக்கிகள் படபடக்கும் ஓசை கேட்டது. சர்க்கார் கச்சேரி முன்னர் வேலும் வாளும் நாட்டு துப்பக்கிகளும் பிடித்த மறவர் கூட்டம் ஒன்று திரண்டு நின்றது. கச்சேரிக்குள்ளிருந்து அமில்தார் அடித்து இழுத்து வரப்பட்டார். அங்கு காவலில் இருந்த கும்பெனி சிப்பாய்களது துப்பாக்கிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. மறுத்த சிப்பாய்களுக்கு உதை விழுந்தது. அடுத்து அபிராமம் கச்சேரியைத் தாக்கி அங்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அமில்தாரை அழைத்து சென்று கும்பென்யாரது துணிக் கிடங்கை திறந்து விடுமாறு பலவந்தப் படுத்தினர். கூடி நின்ற மக்கள் சர்க்கார்த் துனிகளை கொள்ளையிட்டு அள்ளிச் சென்றனர். இதனை போன்றோ கமுதிக் கச்சேரி ஆயுதங்களும் தானியக் கிடங்கும் கைப்பற்றப்பட்டன.
பொது மக்கள் கும்பெனியாருக்கும் எதிராக கிளர்ந்து எழுந்து வன்முறையில் ஈடுபட்ட இத்தகைய நிகழ்ச்சி, அன்று முதுகுளத்தூர் தொடங்கி அபிராமம், கமுதி ஆக்ய ஊர்களில் தொடர்ந்து நடைபெற்றன். இந்த கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர் மைலப்பன் என்ற குடிமகன் ஆவார்.
அவரது அறிவுரைப்படி குடிமக்கள் கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைப் பணத்தை செலுத்த மறுத்தனர். இந்த கிளர்ஹ்க்சிகளின் பாதிப்பு பற்றி மதுரைச் சீமை வரலாற்றில் இவ்விதம் குறிப்பிடபட்டுள்ளது.
சிறையில் உள்ள சேதுபதி மன்னரை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற இலட்சியத்தில் ,23-4-1797-ல் துவக்கப்பட்டது போன்ற புதிய கிளர்ச்சியொன்று மையிலப்பன் சேர்வைக்காரர் புதிய கிளர்ச்சி யொன்று கும்பெனியாருக்கு எதிராக உருப்பெறுவது போல்த் தோன்றியது. இராமநாதபுரம் கிளர்ச்சியால் பாதிப்புக்கு ஆளானது.
மைலப்பன் ஏற்கெனவே இராம்நாதபுரம் அரசில் சேர்வைக்காரராக இருந்தவர். முதுகுள்த்தூரை அடுத்த சித்திரங்குடியில் பிறந்த விவசாயி. அன்று இந்த சிற்றூர் வீரத்தின் விளை நிலமாக விளங்கியது. கி.பி.1772-ல் கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக இராமநாதபுரத்தை பிடித்த பொழுது நிகழந்த போரிலும் கி.பி.1781-ல் மாப்பிள்ளைத் தேவன் தலைமையிலான புரட்சி அணியுடன் இளைஞர் முத்துராமலிங்கம் போரிட்ட பொழுதும் தங்கள் உயிரை கானிக்கையாக தந்து, மறவர் சீமையின் மாண்பை உயர்த்தியவர்களில் குறிப்பிடதக்கவர்கள் இந்த சித்திரங்குடி ஊரினர். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காடல்குடி பாளைய்க்காரரும் தளபதி மையிலப்பனது உதவிக்கு முன்னூறு வீரர்களை அனுப்பி வைத்ததுடன், சர்க்கார் சீமைக் கிராமங்களில் தமது ஆட்களுடன் அவர் கொள்ளைகளை மேற்க்கொண்டார்.
மைலப்பனின் கிளர்ச்சி ஒரு முக்கியமான குறிக்கோளுடன் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காக துவக்கபட்டுள்ளது என்றும் அதனை கும்பெனி தளபதி மார்டின்சின் விசாரனைகள் உறுதிப்படுத்துவதுமாகவும் குறிப்பிட்டிருந்தார். சேதுபதி மன்னர்டம் சேர்வைக்காரராக பனியாற்றிய மையிலப்பன் என்வவர் அந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வருவதாகவும் அவர் அன்மையில் திருச்சி கோட்டைக்கு சென்று சேதுபதி மன்னரச் சந்தித்து திரும்பிய பிறகு கிளர்ச்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
சேதுபதி மன்னரிடம் பனியாற்றிய பல அலுவலர்கள் தொடர்ந்து திருச்சியில் உள்ள சேதுபதி மன்னருடன் தொடர்பு கொண்டு இருப்பதால் மைலப்பனது முயற்ச்சிக்குச் சேதுபதியின் ஆதரவு இருந்துவருவது நம்பகத்தன்மையுள்ளதாக உள்ளது என அதன் காரணமாக மறவர் சீமையில் உள்ள நாட்டுத்தலைவர்கள் பலருக்கும் மையிலப்பன் ஒலைகள் அனுப்பி,சேதுபதி மன்னருக்கு ஏற்பட்டுள்ள சிறுமையைக் களையவும் கும்பெனியாரிடமிருந்து மறவர் சிமையை விடுவிக்கவும் குடிகள் அனைவரும் கிளர்ந்து எழுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் ஆகையால் இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகத்தடுத்து நிறுத்த தவறினால் விபரிதமான விளைவுகளை எதிர்கொள்ள இருக்கின்றன என்று அச்சுறுத்தி இருந்தார். சேதுபதி மன்னர் திருச்சிக்கோட்டையில் இருந்து தப்பித்து செல்ல இயலாத முறையில் நெல்லூர் இரானுவ தளத்திற்கு அனுப்பி வைக்க யோசனை தெரிவித்தார்.
இதற்கிடையில் மக்கள் கிளர்ச்சி பங்குனி மாத பகற்பொழுது போன்று கடுமையாககிக் கொண்டுவந்தது கும்பெனியாரது கூலிப்பட்டாளத்திடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றுவதும் அவர்களது இருப்புக் கிடங்குகளில் உள்ள துனிகள்,தானியங்களைச் சூறையாடி பேரிழப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்களில் மட்டும் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அபிராமத்திலும்,கமுதியிலும், தவிர்க்க முடியாத நிலையில் பொது மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதத் தவிர வெறுக்கதக்க போக்கு வேறு எதுவும் கிளர்ச்சியில் காணப்படவில்லை என்றாலும் கிளர்ச்சி வேகமாகப் பரவியது. பாப்பான் குளம்,பள்ளிமடம் ஆகிய பகுதிளில் கிளிர்ச்சிக்காரர்கள் முனைந்து நின்றனர். பொதுவாக வைகைப் பகுதிக்கும் குண்டாற்றுக்கு இடைப்பட்ட நீண்ட பகுதியில் கிளர்ச்சி உச்சநிலையில் இருந்தது அதனை கிளர்ச்சி தலைவர் மையிலப்பனின் சொற்களில் சொல்ல வேண்டுமானால் இந்த இயக்கம் காட்டாற்று வெள்ளம் போல் பரந்து பரவிக் காணப்பட்டது. பண்ணிரண்டாயிரம் மக்கள் அதில் பங்கு கொண்டனர்.
கிளர்ச்சியின் போது கலெக்டர் லூசிங்டன் அதன் நிலவரத்தை அறிந்து கொள்ள நாண்கு கள்ளர்களை முதுகளத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தார் அவர்களும் கிளர்ச்சியாளர்களை கண்டு அவர்களின் எண்ணிக்கை முதலிய பல விஷயங்களை நோட்டமிட்டு தெரிவித்தனர்.
கும்பெனியாரது முதல் அணி முதுகளத்தூருக்கு இராமநாதபுரம் கோட்டையிலிருந்து தளபதி மார்டின்ஸ் தலைமையில் புறப்பட்டது.வழியில் அந்த அணி மறைந்து இருந்த கிளர்ச்சிக்காரர்களால் பலமாக தாக்கப்பட்டது கும்பெனிப் பட்டாளத்தில் ஐவர் மடிந்தனர். மார்டின்ஸ் மேலும் முன்னேறாமல் தன் இராமனாதபுரம் கோட்டைக்கு திரும்பினான். இன்னோர் அணி மேஜர் கிரீம்ஸ் தலைமையில் 100 பேர்களுடன் 50 துப்பாக்கிகளுடன் 200 ஈட்டிக்காரர்களுடனும் மற்றொரு வழியாக மேற்கே காமன் கோட்டை பாதையில் தெற்கே முதுகுளத்தூரை அடைய முடியவில்லை மிகவும் பீதியடைந்த கலைக்டர் லூசிங்டன் பாளையங்கோட்டை தொடர்பு கொண்டு மேஜர் பானர்மேனைப் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் மூன்று பவுண்டர் பீரங்கி அனியுடன் புற்ப்பட்டு 26-5-1779-ல் பள்ளி மடம் வந்து சேர்ந்தார். மதுரையிலிருந்து மேஜர் டக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும் பள்ளிமடம் வந்து மேஜர் பானர்மேனுடன் சேர்ந்து கொண்டது. பிறகு கமுதியை நோக்கி ஒரு அனும் அப்பனூரை நோக்கி இன்னோரு அனுய்மாகப் புறப்பட்டன் மன்னொரு சிறிய அனியில் அத்தனை பேரும் அயுதங்களைத் தாங்கியவர்களாக இருந்தனர். ஒரு சிலரிடம் துப்பாக்கிகளும் “மட்ச்லாக்கும்” இருந்தனர். ஊருக்கு அரை மைல் தொலைவில் இருந்த வெளியில் பட்டப்பகலில் தங்களது தாக்குதலை பயமின்றி தொடுத்தனர். இராமநாதபுரம் அரசரது முன்னாள் பிராதனியாக இருந்த முத்துக்கருப்ப பிள்ளை ஒரு கருப்புகுடையை பிடித்து கொண்டு கிளர்ச்சிக்காரகளுக்கு அவ்வபோது கட்டளைகளைப் பிறப்பித்தும் ஆப்பனூர் சேர்வைக்காரர்கள் கும்பெனிக்கு அளித்து வந்த உதவிகள் காரனமாக கிளர்ச்சிக்காரர்கள் பலத்த காயங்களுடன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் பின்வாங்கினர். சேதுபதி மன்னருக்கு பரம வைரியான அபிராமம் வீசுகொண்ட தேவர் என்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன. அன்றைய கிள்ர்ச்சியின் முக்கிய தலமாக கமுதிக்கோட்டை விளங்கியது. முழ்வதும் கல்லினாலாகிய இந்த வலிமையான அரனை பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு அமைத்தவர் விஜய ரகுநாத சேதுபதி மன்னர்(கி.பி.1711-21) அதனுடைய பாதுகாப்பு இடமாக கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கலான சிங்கன்செட்டி,பட்டூர்,மைலப்பன் ஆகியோர்களது நடமாட்டமும் அங்கு மிகுந்து இருந்தது. கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இங்கு பயங்கர மோதல்கள் பல ஏற்பட்டன. மறவர்களிடையே வீர சாகஸங்கள் புகுந்து இருந்த பொழுதும் கும்பெனியாரது சக்தி வாய்ந்த வெடிமருந்து திறனுடன் இயங்கிய பீரங்கிகளுக்கு முன்னர் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பயனற்று போயின.
அந்த வீர போரில் தங்களது தோழர்கள் பலரைக் களப்பலியாக கொடுத்த கிள்ர்ச்சிக்காரர்கள் வடதிசையில் நழுவினர். அவர்களைப் பின் தொடர்ந்த சுபேதார் சேக் மீரானும் அவந்து அணியும் கிளர்ச்சிக்காரர்களை வீர சோழன், அபிராமம் ஆகிய பகுதிகளில் இருந்து விரட்டி இராமநாதபுரத்தின் தெற்கு பகுதிக்குப் பின்னடையுமாறு நிர்ப்பந்தம் செய்தனர். மையிலப்பனும் அவரை சூழ்ந்து நின்ற நானூருக்கும் அதிகமான மறவர்களும் கீழ்க்குளம் காட்டிற்குள் நுழந்தனர்.
அதே சமயத்தில் இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் லூசிங்டன், சிவகங்கை சேர்வைக்காரர்களிடமிருந்த பெற்ற கூலிப்படையின் பாதுகாப்பில் கமுதி கோட்டைக்கு வந்து சேர்ந்தார் பெரும்பாலும் அவர் மானாமதுரையிலிருந்து திருச்சுழி வழியாக அழிமானம் மிகவும் பரந்த அளவில் இருப்பதாக லூசிங்டன் பணியில் அவர் தீவிரமாக முனைந்தார். இப்போது அவர் அடக்க சிவகங்கை சீமை சேவைக்காரர்கள்படையை பயன்படுத்துவது அவர்களின் அடுத்த திட்டம்.
கீழ்குளம் காட்டில் சண்டை தொடர்ந்தது கிளர்ச்சிக்காரர்கள் வீரப் போரிட்டு முப்பது மறவர்களை இழந்தனர். ஐம்பது பேருக்கு படுகாயம், நாற்பது பேர் சிறைபிடிக்கபட்டனர். எஞ்சியவர்கள் வெள்ளைகுளம் நோக்கி சென்றனர்.சிங்கண்செட்டியும் கிளர்ச்சிக்கரர்களான தேவர்களும் சேர்வைக்காரர்களும் சிதறியோடினர். மைலப்பனும் அவனை சேர்ந்த முப்பதுபேர்களைக் கொண்ட படை கிழக்கில் நோக்கி பின்வாங்கியது. மறவர் சீமையில் சேது மன்னருக்கு இழைக்கப்பட்ட கும்பெனியாரது கொடுமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் பலர் கொலலப்பட்டனர் சிலரது தலைகள் நீண்ட ஈட்டி நுனிகளில் சொருகி பல கிராமங்களில் ஆங்காங்கு நட்டுவைத்து தங்களது “அ(நாகரீக)” தன்மையை வெளிப்படுத்தினர்.இறந்தவர்களுக்கு மனமுவந்து மிக்க மரியாதை செய்யும் இந்த புனித பூமியில் அவர்களது சடலங்களை இங்கனம் இழிவுபடுத்துவதை அவர்களால் சகித்து கொள்ள முடியாமல் இருந்தது.
அப்போது மறவர் சீமையெங்கும் இராமநாதபுரம் கலெக்டர் பகிரங்கப்படுத்திய பொது மன்னிப்பு விளம்பரத்தையும் வேண்டுகோளையும் தொடர்ந்து குடிகள் பலர் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் இந்த மன்னிப்பு கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்திய மைலப்பனுக்கும் முத்து இருளப்பபிள்ளை ஆகிய இருவருக்கும் மட்டும் பொருந்தாது ஆனால் அவர்களை உயிரோடு பிடிப்பதற்குத் திட்டமிட்டனர். அவர்கள் தலைக்கு விலையாக பரிசுகளும் ஏற்படுத்தினார்கள். மையிலப்பன் கடலாடி வழியாக காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளம், வில்லார் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்று சில நாட்களைக் கழித்த் பிறகு கமுதிக்குள் நுலையாமல் மண்டலமாணிக்கத்திற்கு வந்தார். அங்குள்ள நிலவரங்களைக் நன்கு புரிந்து கொண்டு மாறு உடையில் தஞ்சை பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு வெள்ளூர் பகுதியில் சிலகாலம் விவசாயக் கூலியாக தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் தெரிகின்றது.
மைலப்பனின் இரண்டாவது போர்:
அன்னிய எதிர்ப்பு உனர்வும் ஆவேசமும் கொண்ட போர்கோலம் பூண்ட மறவர்களின் வீழ்ச்சியை கேள்விபட்ட திருச்சி கோட்டை சிறையில் இருந்த ரெபல் முத்துராமலிங்க சேதுபதியின் கவலை ஆயிரமடங்கு அதிகமாகியது. தொன்று தொட்டு வந்துள்ள மறவர் மக்களின் தன்னரசைப் புறக்கணித்து அவர்களது சுதந்திர உணர்வுகளை மதிக்காது ஆட்சி செய்யும் பரங்கியரையும்,நவாப்பையும் மதிக்காத அடிபனியாத மானமிகுந்த சுதந்திர மன்னனாக மறவர் சீமையை என்றென்றும் மிளிரச் செய்ய வேண்டும் என்ற சிறப்பான இலட்சியங்களச் செயல்படுத்த சேதுபதிமன்னர் தனக்காக கிளர்ச்சிகளை தலைமை தாங்கிய மாவீரன் மைலப்பன் தன் பிறந்த மன்ன்னான முதுகளத்தூரில் தொடங்கி மாப்பிள்ளைத் தேவனுடன் நடத்திய மோதல்களில் பங்கு கொண்டு இராமநாதபுரம் அரசுக்கு சிறந்த சேவை செய்த சேர்வைக்காரர் ஏற்கெனவே சேதுபதி மன்னரைத் திருச்சி கோட்டைக்குள் சிறை வைத்த பின்னரும் அவரை விடுவிக்க முனைந்தவர் கிளர்ச்சி நடந்த பகுதியகலையும் அங்குள்ள மக்களையும் நன்கு அறிந்தவர் நிலமைகளை தெரிந்து திட்டங்களுடன் எதிரிக்கு பலமான இழப்பையும் தோல்வியையும் ஏற்படுத்தகூடிய அரசியல் தலைவர் சித்திரங்குடி,ஆப்பனூர் வேண்டா புல்லுருவிக் கயவர்களால் அவனுக்கு எதிரான் அணியில் சேர்ந்து இவ்விதம் துரோகத்தை செய்தனர்.
இதன் பின் சிவகங்கை சின்னமருது தஞ்சை தரனியில் தலைமறைவாக இருந்த மைலப்பனை சந்தித்து தென்னாட்டு கலகத்துக்கும் ஆயுதப்புரட்சிக்கும் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார். இதன் பின்பு தஞ்சை சீமையில் தலைமரைவாக இருந்த தளபதி மைலப்பன் மறவர் சீமைக்கு திரும்பினார்.
அவரையும் அவரது கிளர்ச்சி ஆதரவாளர்களையும் அடக்கி ஒடுகக் முன்பு கும்பெனியாருக்கு சிவகங்கை படைகளைக் கொடுத்து உதவியவர்கள், இப்பொழுது மயிலப்பனை, தங்களுக்கு பக்கபலமாக பரங்கியருக்கு எதிரான புரட்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மைலப்பனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது எனவே இருவருக்கும் பொது எதிரியான பரங்கியாரை அழிக்க இனைந்து செயல்பட்டார். அவரது தாக்குதல்கள் இப்பொழுது இன்னும் கடுமையானதாக இருந்தது. பரங்கிகளது குறிப்புகளில் மைலப்பனுக்கு “முரடன்”(ரோக்) என்ற அடைமொழி சேர்க்கபட்டது.அவரது பேராற்றலை கண்ட சின்னமருதும்,பாஞ்சை பாளையக்காரரும்,அவருக்கு பல அன்பளிப்பு வழங்கி சிறப்பித்தனர். மேல மாந்தையிலிருந்த் மறவமங்களம் வரை அவர் சுழன்று சுழன்று போரிட்டு வந்தார்.
மைசூர் மன்னர் திப்புசுல்தானுட்ன் தொடுத்த போர் முடிந்து விட்டதால் தங்களது மூல பலம் முழுவதையும் மறவர் சீமையின் மீது முடுக்கி விட்டனர் கும்பெனியார்.பரங்கி அணிகள் பல இராமநாதபுரம் சிமையையும் சிவகெங்கை சீமையையும் துளைத்து தொல்லைகள் கொடுத்து சுடுகாடாக்கினர்.
1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி வைகறைப் பொழுதில் மைலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பனியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்து சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கி துணிகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்ச்களின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியை தாக்கி நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர். இந்த கிளர்ச்சியினால் முதுகளத்தூர்,கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்த பகுதியில் ஆங்காங்கு குடிமக்களின் உதவியை பெற்று ஆங்கில கலெக்டர் லூசிங்டன் அந்த பகுதி நிலவரத்தை அறிய இயலாதவாறு துண்டித்து விட்டனர்.காமன்கோட்டை,கமுதி,முதுகுளத்தூர்,கிடாரத்திருக்கை,கருமல் முதலிய பகுதிகளில் 42 நாட்களுக்கு மேல் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். சிவகங்கை,எட்டையபுரம் தலைவர்களின் உதவியதன் காரனமாக ஆங்கிலேயருக்கு உதவியதால் தன்னுடைய கிளர்ச்சியாளர்களின் பெரும்பகுதியினரையும்,சிங்கன்செட்டி,இப்ராஹிம் சாகிப் போன்ற அவரது தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்த பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியர் முயன்றனர். மைலப்பன் சேர்வைக்காரரை தவிர அனைத்து கிளர்ச்சிக்காரகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர்.பின்பு மைலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைகுமாறு மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினார். ஆனால் மருது சகோதரர்கள் கலெக்டர் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை
மருது சகோரர்களது இறுதி முயற்ச்சியான காளையார் கோயில் போரில் 02-10-1801 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களை சார்ந்திருந்த மீனங்குடி முத்துகருப்பு தேவரையும்,சித்திரங்குடி மைலப்ப சேர்வைக்காரர் பிடிப்பதற்க்கு தீவிரமான முயற்ச்சிகளில் கும்பெனி இறங்கியது. தன்னந்தனியாக மைலப்பன் சேர்வைக்கரர் முதுகளத்தூர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்தார். அவர் சக துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கபட்டு 06-08-1802 அன்று அபிராமத்தில் தூக்கிலடப்பட்டனர்.
தொடர்ந்து இழப்புகளும்,வேதனைகளும் உங்களை துரத்திய பொழுதும்,தன் குடும்பமே அழிந்தும் மனம் கலங்காமல் தாயகத்திற்காக நின்று அஞ்சாது போரிட்ட வீர மறவனே!
எங்களின் ராஜ கோபுரம் நீங்கள்,ஆங்கிலேய கம்பெனியோடு உறுதியாக நின்று போரிட்ட
வீரமறவர்களும்,வீரமைந்தர்களும் கொல்லப்பட்ட போதும்,
சூரியனாய் விளங்கி எதிரிகளை சுட்டெரித்து எங்களின் மறமைந்தனே!
நீன் போர் களத்தில் நின்றபோது உமது தோற்றம் கண்டு, நீர்போரிடும் ஆற்றலை கண்டு எதிரிகள் மலைத்து உம்மைபற்றி
கூறியவை வராலாற்றின் பதிவுகளாய் உள்ளது
உமது வாழ்வு எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்
தளராத நெஞ்சுறுதியோடு யுத்த முனியிலே நின்ற எங்கள் மாவீரரே!
எங்கள் தேவனே! உங்கள் வாழ்வு எங்களுக்கு வழிகாட்டடும்!
எந்தநிலையிலும் விலை போகாத துரோகம் இழைக்காத
இந்த மான மறவனின் வாழ்க்கை ஒவ்வொரு மறவ்னுக்கும் பாடமாகட்டும்
சத்தியம் காத்திட களமாடிய எங்கள் மாவீரரே
என்றும் உங்கள் வாழ்கை எங்களுக்கு சரித்திரமாகட்டும்
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.
நன்றி: உயர்திரு. ஐயா எஸ்.எம்.கமால், சேதுபதிகள் சரித்திரம்
நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்
ஆய்வுகளின் துனை:
1.Military consulation, vol.188 A,21-7-1794,pp.3302
2.Madurai Dist, Records, vol.1133
3.Madurai Consulation, vol.179,25-2-1975
4.Revenue Consulation, vol.161
5.Fort st.George diary consulations,letter 22-6-1794 from collection Madras
6.Alexandar Nelson Madurai district manual(1896)
7.Rajayyan, k.vol South Indian Rebellion(1800,1801)…