Author Archives: குவைத் பாண்டியன்

தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

மாங்குளம் கல்வெட்டு

மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன் | Tagged , | Leave a comment

புகழூர்க் கல்வெட்டு

கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த … Continue reading

Posted in கல்வெட்டு, சேரர் | Tagged , | Leave a comment

இராமு தேவர்

இராமு தேவர் என்பவர் நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவின் ஒற்றர். பள்ளிப் பருவம் : இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப … Continue reading

Posted in இராமு தேவர் | Tagged , | Leave a comment

சோழர்களின் ”அங்கோர் வாட்”

   சோழர்களின் ”அங்கோர் வாட்” வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம்.  சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து  தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம்.  வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?  அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், … Continue reading

Posted in சோழன் | Tagged , | 2 Comments

பொன்னியின் செல்வன் -29

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 28 “நம் விருந்தாளி” புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார். … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -28

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 28 இரும்புப் பிடி திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார். “உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!” என்றார் சுந்தர … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -27

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 27 ஆஸ்தான புலவர்கள் பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -26

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 26 “அபாயம்! அபாயம்!” ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக் கொண்டு ஒருவர் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -25

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 25 கோட்டைக்குள்ளே பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள், உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment