Author Archives: thevarthalam

மாமன்னன் ராஜராஜ சோழன்

– அண்ணாமலை சுகுமாரன் புதுச்சேரி சொல்லச்சொல்ல அலுக்காத சில சங்கதிகளில் இராஜராஜனின் வரலாறு பற்றிய குறிப்புகளும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.இன்றோ அந்த மாமன்னனின் 1025 வது சதய திருநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த மன்னனின் பிறந்த நாளாவது உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகிறதா ? என்பது மிகப்பெரிய ஒரு அதிசயமான கேள்விதான்.அதுவும் இந்த மாமன்னனின் பிறந்தநாள் … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

நீதி மன்றத்தில் தேவர்

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment

மருது பாண்டியர்கள்

சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு … Continue reading →

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் (மார்ச் 3, 1867 – டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் … Continue reading →

Posted in பாண்டித்துரை தேவர் | Tagged | Leave a comment

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் வேலுநாச்சியார் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். … Continue reading →

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் வரலாறு

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது. இந்துவின் வயிற்றிலே … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 11 Comments

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். விடுதலைப்போராட்டத்தில் பங்கு : 1755ஆம் ஆண்டு … Continue reading →

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment