ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.

மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர்.

Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை

(பாண்டி படா பிரசித்தம்)

கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள். வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக பதவி உயர்ந்தார்.

எதையும் ஒளிவு மறைவின்றித் துணிவுடன் சிந்தித்துச் செயல்பட்டதாலேயே, முன்னேற்றம் அவரைத் தேடி வந்தது. இவர் ஆங்கிலத்திலே பல நூற்கள் படைத்தவர். அதில் ஒன்றே டிநே றடிசடன (ஒரே உலகம்) என்ற புத்தகம் அதற்கு நியாய-மாகக் கிடைக்க வேண்டிய புகழும் பாராட்டும் கிடைக்காது போனதற்கு அறிவுலகம் வருந்த வேண்டும்.

அதிலே கேரளாவில் தாய்மை என்பது உண்மை; தந்தையர் நிலை என்பது நிச்சயமற்றது என எழுதி கேரள மக்களின் மனக் க-சப்-புக்கு ஆளானதால், பல சிறப்பான தகவல்கள் அடங்கிய அப்புத்தகம் பலத்த சர்ச்சைக்கு ஆட்பட்டு, மறைக்கப்பட்டது. அதிலே ஒன்றுதான் சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய். மலையாள நாடான சேர நாடு, ஒட்டியிருந்த பாண்டிய நாட்டால் பலவகையில் பாதிக்கப்பட்டதைப் பன்மொழிப்-புலவர் கா.அப்பாத்-துரையார் தான் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். மதுரையை ஆண்ட நாயக்க வம்ச ராணி மங்கம்மா, திருவிதாங்கூர் பாளையத்தாரிடம் கப்பம் வசூலித்து ஆண்டதாக சரித்திரச் சான்று உண்டு.

Continue reading

Posted in இணையம் | Tagged | Leave a comment

மலையமான்கள்(விருது பல கூறுவீரமுடையார் வம்சம்)

விருது பல கூறுவீரமுடையான். உடையான் படைக்கு அஞ்சான். கோவல்ராயன்,வன்னியநாயகன், சேதிராயன்,உடையான்,மலையமான்,நத்தமான், சுருதிமான்,நாட்டார்,மலாடுடையார்,காடவராயன்.

மலையமான்கள் ஆண்ட பகுதி:

சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர்  மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம்.

ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. ‘மலையமானாடு’ எனவும் ‘மலாடு’ எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.

Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும்.

மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்:

பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்)
பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்))
வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்)
நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்)
சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))
Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி.

வரலாறு :

தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத்
தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 – 1809) பங்கு மிக சிறப்பான இடத்தைப் பெற்றது. அவரது நல்லாட்சி மேலும் தொடர முடியாதபடி மன்னரை 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. தங்களது சூழ்ச்சியினால் மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார்
ஏற்றனர்.

கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். மன்னரில்லாது மயங்கிய குடிகளுக்கு வழிகாட்ட முன் வந்தார் ஓர் இளைஞர். இவர் சேதுபதி
சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

Continue reading

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

மறவர் ஜமீன்கள்

மறவர்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக்
குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் செந்நெலுஞ் சாயவும், கங்கையும் வாவியும் பாயவும் வழி வகுத்தன.

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான்
‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக
ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை
மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை ‘மறப்பாட்டு’ சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் ‘குல வம்சம்’ தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள்
பங்கேற்றது பற்றியும் ‘குலவம்சம்’ பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

நாயக்கர்,கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை

நாயக்கர் கவுண்டர் மற்றும் ரெட்டி இனத்தவர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகத்தில் குடி புகுந்தவர்கள் இவர்களுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு தான் தாய்மொழி.ஆனால் சில தமிழ் பேசும் இனத்தவர்களுக்கும் இந்த பட்டங்கள் இருக்க இன்று நாம் பார்க்கின்றோம் அதன் காரனத்தை இங்கு நாம் பார்ப்போம்.இந்த பட்டங்கள் எங்குஇருந்து வந்தது இதன் விளக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.

நாயக்கர்:(NAIK or NAYAK)
நாயக்கர் இந்த பட்டத்தின் விளக்கம் படையின் நாயகன்(படை தலைவன்) என்று அர்த்தம். இந்த பட்டம் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு முறையில உச்சரிக்க படுகிறது.இதை வேட்டுவர்,வெள்ளாளர் மற்றும் இடையர், கம்மாளர், செட்டியார்,குறும்பர்,வனவாசிகள் போன்ற பல மக்கள்
பூண்டுள்ளனர்.

Continue reading

Posted in இணையம் | Tagged , , , | Leave a comment

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்

பா.நீலகண்டன்
பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும்
ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத் திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் “ஏவல் மரபினர்” (தொல் அகத்திணையியல்.26) என்றும் குறிக்கப்~ படுகின்றனர்.

அதாவது “பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்” என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனாகிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖ான மரபும் தொழிலும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை’
(தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு “நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்” என இளம்பூரணர் உரை எழுதுகிறார்.

Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள்

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

 

(A rebel of kollamkondaan against british)

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். பூர்வீகம்: இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும்.

இவர்கள் மூதாதையர்கள் பல்லவ நாட்டில் இருந்தவர்கள். என்று கூறுகின்றனர். இவர்கள் பண்டாற மறவர் என்ற “வணங்காமுடி பண்டார மறவர்” என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள். பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனர். ஆதாவது வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள் என்று தம்மை கூறி கொள்வதாக கொல்லம்கொண்டான் வம்சாவளி நமக்கு கூறுகிறது.

வந்தியதேவர்கள் என்ற வார்த்தையே “வாண்டாயாத்தேவர்கள்” என மறுவியதாக கூறுகின்றனர். இவர்கள் சோழர்களுடன் ஆதரவாக பாண்டியரை வென்று பின்பு சேரநாட்டில் உள்ள கொல்லத்தை வென்று சோழர்கள் இவர்களை இப்பகுதிக்கு குறுநிலை மன்னராக முடிசூட்டி சோழ நாட்டிற்கு சென்று விடுகின்றன்ர்.கொல்லம் கொண்டான் தோன்றிய ஆண்டு 11-ஆம் நூற்றாண்டு என கால்டுவெல்லும் கூறுகிறார்.சோழ ஆளுகை இப்பகதியில் இருந்தததற்கு “சோழபுரம்” என்ற ஊர் அருகில் உள்ளது. இதன் பின்பு பாண்டிய மன்னர்கலுக்கு உட்பட்ட குறுநில மன்னர்களாக இருந்தனர்.

Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | Leave a comment

கடம்பூர் ஜமீன்-பூலோக பாண்டியன்

பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.இங்குள்ள  இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.
இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர்
1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன.

 

Continue reading

Posted in கடம்பூர் ஜமீன் | Tagged , , | Leave a comment