வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.
மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர்.