ஷத்திரியர் யார்..?

ஷத்திரியர்-இதற்கு அர்த்தம் அரச குலத்தோன். ஆரிய இனத்தவரே ஷத்திரியர்.ஆரியர் அல்லாதவர் ஷத்திரியரே அல்ல. ஏன் சேர,சோழ,பாண்டியர் தம்மை ஷத்திரியர் என்று கல்வெட்டு கூறினாலும் வட இந்திய ஆரியர்களை பொறுத்தவரை மூவேந்தரையே ஷத்திரியராக ஏற்றுகொண்டதில்லை.
மூவேந்தருக்கு பின்பு 72 பாளயபட்டுகளை ஆண்ட நாயக்கர்கள் தங்களை ஷத்திர்யர் என கோரவில்லை. கன்னட நாட்டில் கௌடா மற்றும் உடையார்கள் கோரவில்லை. ஆந்திரத்தில் காப்பு இனத்தவர் கோரவில்லை.தமிழ் நாட்டில் 34 பாளயம் 3 சமஸ்தானங்கள் ஆண்ட முக்க்குலத்தோர் கோரவில்லை. கேரளத்தை ஆண்ட நாயர் கோரவில்லை.
ஆட்சி அதிகாரத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத நபர்கள் இன்று ஷத்திரியர் என்று கோறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் யாரை ஷத்திர்யராக அங்கிகரித்தார்கள் என்று பார்ப்போம்.

19-ஆம் நூற்றாண்டு ஜாதியினரிடையே நிலைவிய ஷத்திரிய போட்டிகள்

1875 இல் வெளிவந்த `சாதி நூல் என்ற நூல் முக்கியமான ஒன்றாகும். இதன் ஆசிரியர் இந்நூல் குறித்து கூறுகையில் `திருவாரூரி லெழுந்தருளியிருந்த ஞானப்பிரகாச சுவாமிகள் ஆரிய பாஷையில் உள்ள ஆகம புராண இதிகாச நூலாரின் ஆதாரங்களைக் கொண்டு இயற்றியது என நூலின் மேல் அட்டையில் குறிப்பிடுகிறார். சென்னை மயிலாப்பூரில் இருந்து இந்நூல் வெளியிடப்பட்டது.

Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | 3 Comments

ஊற்றுமலை வம்சாவளி

வம்சாவளி:

1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர்.

நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. இதற்கு அடுத்து பெரும்பான்மையான் மறவர் பாளயபட்டுகள் அனைத்தும் திருவிளையாடற்புரானம் மற்றும் பெரியபுரான நிகழ்வுகளில் தம் வம்சாவளியில் இனைத்து எழுதின.

Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Tagged , | Leave a comment

பல்லவர் யாவர்?

மா.இராசமாணிக்கனார்
pallavarபல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் – அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்து – அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.
பலதிறப்பட்ட கூற்றுகள் :-

இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர்’ என்றும், இரண்டாம் பதிப்பில் ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்’ என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்’ என்றும் முடிவு கூறியுள்ளார்.
ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிவு செய்தனர். பேராசிரியர் துப்ராய் என்பவர், ‘கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹ்லவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திர பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்’ என்று வரைந்துள்ளார்.

Continue reading

Posted in பல்லவர் | Tagged , | Leave a comment

பசும்பொன் தேவர் அய்யா :

பசும்பொன் தேவர் அய்யா :
தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது. அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா “அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த மடத்தில் பெளத்த மத தத்துவ விளக்கமளித்தார் . இதை கேட்ட பர்மிய குடியரசுத்தலைவரும்,பெளத்த தலைமை குருவுமாகிய “பாமோ” கிறுகிறுத்தார் . தேவர் அய்யாவை பாராட்டி பேசிவிட்டு “இந்துசமயப் புத்த மேதை ” என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார் “பாமோ” .
லிம்கார்னேக் மன்னர் தேவர் அய்யாவிற்கு அரச விருந்தளித்தார். அதில் அங்குள்ள முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள் கலந்துக்கொண்டு தேவர் அய்யாவை வாழ்த்தினார்கள்

தேவர் அய்யா இமயமலைக்கு சென்று சிவானந்தர் தவமாளிகையில் தங்கினார். தேவர் அய்யா “இறையருள் திறம் ” பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்தினார். தவவேந்தர் சிவானந்தர் வியந்து ‘வித்யாபாஸ்கரர், பிரவசனகேசரி ” என்ற விருதுகளை தேவர் அய்யாவிற்கு வழங்கினார். மதுரை ஆதினம் தேவர் அய்யாவின் தெய்வ பணியை போற்றி ” சன்மார்க்க சண்டமாருதம் “என்ற சிறப்பு பட்டம் சூட்டி பெருமைப்படுத்தியது. தருமைக்குருமணிகள் தேவர் அய்யாவின் திருப்பணியை போற்றி பொன்னாடை போத்தி மகிழ்ந்தது. வீரசவர்க்கார் “தென்னாட்டு திலகர் ” என்று தேவருக்கு மகுடம் சூட்டினார் . நேதாஜி அய்யா “தென்னாட்டு போஸ் ” என்று தேவர் அய்யாவிற்கு பட்டம் சூட்டினார் .

காசி இந்து பல்கலைக்கழகத்தில் அதன் துணை வேந்தர் உலகப்புகழ்வாய்ந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் தலைமையில் ” இந்து சமயப்பண்புகள் ” பற்றி அரியதோர் ஆங்கில உரையாற்றினார் தேவர் அய்யா . அதை கேட்டு வியந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் “உலகில் பெரும்பகுதியை ஆங்கிலம் ஆள்கிறது .ஆனால் அந்த ஆங்கில மொழியை எங்கள் தமிழ்நாட்டு பசும்பொன் சிங்கம் மூன்று மணிநேரம் அடக்கி ஆண்டுவிட்டது என்று உணர்ச்சிப்பொங்க புகழுரைத்தார்.
தேவர் அய்யா இளமையில் இருந்தே மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசையை துறந்தார் .தன் உடல்,பொருள்,ஆவியை இந்த நாட்டிற்காக அளித்தார் .அதற்காக அவர் சிந்திய ரத்தம் ,செய்த தியாகம் ஆயிரமாயிரம். அவர் இந்த மண்ணில் வாழ்ந்த நாட்கள் ,நாட்டிற்காக சிறையில் இருந்த நாட்கள் . தெய்வத்திருமகன் நம் தேவர் அய்யா தமிழருக்காக ,நம் பண்பாட்டிற்காக ,நம் இந்திய திருநாட்டிற்காக, நம் நாட்டு மக்களின் நலனிற்காக மட்டுமே வாழ்ந்தார் . பிறந்தநாள் அன்று இறைவனடி சென்று, இன்று நமக்கெல்லாம் தெய்வமாக வாழும் தேவர் அய்யாவின் புகழ் “கங்கையும் ,யமுனையும் பாயும்வரை ,இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும்வரை அழியாது ”

புலவர் திரு. சங்கரலிங்கனார் அவர்களின் புத்தகத்திலிருந்து உங்கள்
தேவர் இனத்தின் போராளி

Posted in முத்துராமலிங்க தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள் | Leave a comment

அம்மையடி மறத்தி

வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில்
சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.

அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு
கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் பெண்ணே நம்பி ற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க
சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும்
என்றார்

Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

வன்னியடி மறவன் கதை

மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக
நொந்தாள்.

நான் மலடி என எல்லோரும் ஒதுக்குகின்றனரே! நமக்கு கொள்ளி வைக்க
மகன் வேண்டாமோ? இல்லை என்றால் உலகோர் பழிப்பார்களே, 12 வயதிலே எனக்கு மாலையிட்டீர். இப்போது வயது 32 கிறதே, என் அரசே என் வார்த்தைகளைக் கேளும். நான் குழந்தைகளுக்காக தவம் செய்யப் போகிறேன்
என்றாள்.

Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

தூக்குத்துரை -சிங்கம்பட்டி ஜமீன்

வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’பெரியசாமித் தேவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி மதுரை சிறையில் அடைத்திருந்தார்கள். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது.

தர்மசங்கடமான நிலையில் நண்பரான சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதியிருந்தார்.நம்பி எழுதியிருக்கிற நண்பரைக் கைவிட முடியுமா? நேரே மதுரைக்குப் போனார் ஜமீன்.
ஜெயிலுக்குள் எப்படி நுழைவது? மதுரை ஜெயிலரைப் பழக்கம் பிடித்தார். அவர் மூலம் ஜெயிலுக்குள் போனார். கைதிகளுக்கு உதவினார். அங்கே சந்தடி சாக்கில் தனது நண்பர் ராமசாமித் தேவரையும் பார்த்தார். நம்பிக்கையூட்டினார்.ஜெயிலரைப் பலவழிகளில் வசப்படுத்தி எப்படியாவது ராமசாமித் தேவரை வெளியே கொண்டு போய்விட முயற்சி பண்ணினார்.

Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged , | 1 Comment

பொன்னமராவதி வாழ் மறவர்கள்

பொன்னமராவதி இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கு இடைபட்ட பகுதியாகும்.

இந்த பகுதியில் பல சரித்திர பின்னனிகளும் பல கல்வெட்டுகளும் கான கிடைக்கின்ற பகுதியாகும். இப்பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் மறவர்கள்.இவர்களின் பின்னனியே அதிகமாக கிடைக்கிறது.இப்படி வாழ்கின்ற மறவர்களை பற்றி சரித்திரத்தில் அதிகம் இருக்கிறபோதும் அது வெளியாகவில்லை. மறவர் சரித்திரங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகதியினரையே அதிகமாக வெளியாகின்றன.எனவே பொன்னமராவதி வாழ் மறவர்களை பற்றி வரும் குறிப்புகளை இக்ககட்டுரையில் கான்போம்.

பூர்வீகம்:

இவர்களது பூர்வீகம் பெரும்பாலும் சேரர்களை பற்றியே கான கிடைக்கிறது. இவர்கள் உப்புக்கோட்டை மறவர்(அ)உப்பு கட்டு மறவர் ஆகும்.ஆதாவது குமரியை ஆண்ட சேர்ப்பர்களே உப்புக்கோட்டை மறவர் ஆகும் .

பொருள்: சேர்ப்பன்-சேரன்,பாண்டியன் முதலிய பல அரசர்களுக்கு இந்த பட்டம் உண்டு. இதில் சேர அரசர்களின் வரலாற்றோடு இந்த மறவர்களை பொருத்திப்பார்போம். 1059-கு முன் சேர மன்னர்களின் ஆளுகையில் குமரி நிலப்பரப்பு இருந்த்து பின்பு அந்த நிலப்பரப்பும் ஆழி சூழ்ந்து அழிந்தது.அவ்வழியினர்கள் இடம் பெயர்ந்து வந்து இப்பகுதியில் குடியெறிய பொறையர்கள் பின்பு பாண்டிய மறவர் மக்களுடன் ஒன்றாக இனந்துவிட்டனர். பொறையர்-சேரரின் பட்டமாகும். பொறையர் ஏன்பது புரையார் (அ) புரியர் என்று திரிந்துள்ளது. எனவே விரயச்சிலை உப்புக்கோட்டை மறவர்(சேர்ப்பன்) தான் இப்பொறையராகும்.

உப்புக்கோட்டை மறவர் பட்டங்கள்:

புரையார்(பொறையர்) ஐநூற்றிபுரையார் ஆயிரத்துபுரையார்
கானாட்டுபுரையார் கோனாட்டுபுரையார் தொண்டைமான்புரையார்
காங்கேயபுரையார் மாளுவிராயபுரையார் பல்லவராயபுரையார்
யானைகுற்றினான் யானைவெட்டினான் வெற்றிமாலையிட்டான் பூழிநாட்டர்
பூழிதேவர் வானாதிவிராயர்
வீரகேரளன் திருகொன்றமுடையான்
மனிகட்டிபல்லவராயர் குட்டுவன் நல்லகுட்டி(குட்டுவன்) படைவெட்டி
காரனர் சாவேறு வில்லியன் ரண்டன் சேர்ப்பன் கொம்பன்
வேனாடன் கொங்கனவர் சீத்தல் பழுவேட்டரயர் கண்டன்மறவன்
மாறன் கரையாளன் பெருமாள் வெற்பன்.

விரயாச்சிலை மறவரின் சிறப்பு:

இவர்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் கானாடு,கோனாடு என்ற இரு நாட்டின் பிரிவுகளாக வாழ்கின்றனர்.

இவர்களுக்கு பொதுவாக “தேவர்” என்ற பட்டத்துடன் அதிகமாக கானப்பட்டாலும்.இவர்களது தலைவர்கள் “அம்பலம்” என்று அம்பலக்கல்லில் உட்கார்ந்து நாட்டாமைத்தனம் செய்யும் தலைவரை கானலாம். “அம்பலம்” என்ற பட்டம் நாட்டார் கள்ளர் மக்கள் அதிகமாக புனைந்தாலும் மறவர் மக்களில் “ஊர் அம்பலம்” என ஒருவர் மட்டுமே இருப்பார்கள்.அப்படி அம்பல பட்டம் சூடுபவரின் பெயர் இப்படி இருக்கும் “ஊர் அம்பலம் ராமசாமி தேவர்”.ஆதாவது மறவர் கிராமங்களில் ஒருவர் மட்டுமே அம்பலம் பட்டம் சூடுவர்.ஆனால் கள்ளர் குலத்தில் அனைவரும் அம்பல பட்டம் சூடுவர்.கள்ளர் மக்களை போல் முழுவதுமாக அம்பல பட்டம் சூடும் மறவர் பிரிவினர்களும் புதுக்கோட்டைமாவட்டங்களில் உள்ளனர்.

அவர்கள் புலிகுத்தி மறவர்,இளம் மறவர் போன்ற பிரிவினர் உள்ளனர் இவர்கள் கொட்டம்பட்டி, சிங்கபுனேரியில் அதிகமாக உள்ளனர். உப்புகட்டு மறவர் சொந்ததத்துகுள்ளே பென் கொள்கிறார்கள்.மறவரில் உள்ள கிளை பிரிவு இவர்களில் கரை எனற பிரிவு கானப்படுகிறது.இவர்கள் மூதாதயராக கொம்மாயத்தேவன்-பிச்சத்தேவன் என இருவரை கூறுகிறார்கள்.இவர்கள் விராயச்சிலை என்ற ஊரில் உள்ள “மதுவீடு செவ்வாய் அடைக்கலம் காத்த அம்மன்” கோயில் கும்பிடுகிறார்கள்.அக்கோயில் 11 வம்ச மறவர்களுக்கு பாத்தியபட்டது ஆகும். அந்த 11 வம்சத்தினர்

1.யானையை குற்றிய ஐந்நூற்றி புரையார்

2.வானாதிவிராயர்

3.யானையை வெட்டிய கானாட்டு புரையார்

4.மேல வனங்கிய தேவர்

5.கிழ வனங்கிய தேவர்

6.வெற்றிமாலையிட்ட கோநாட்டு புரையார்

7.நஞ்சுண்டா தேவர்

8.தொண்டைமான் புரையார்.

9.மனி கட்டி பல்லவராயர்

10.ரண்டன் கொம்பன் தேவர்

11.பிற்பாடு கொடாத தேவர்.

இப்பட்ட பெயர்கள் “வம்சம்” என்ற திரைப்படத்திலும் வருகிறது.இவர்களின் தெய்வங்கள் பெரும்பாலும் பென் தெய்வ வழிபாடே பின்பற்றுகின்றனர்.கொன்னையூர் மாரியம்மன்,கானாட்டு நாயகி,கோநாட்டு அம்மன், அடைக்கலம் காத்த அம்மன் முதலிய தெய்வங்களை வன்ங்குகின்றனர்.

உப்புகோட்டை மறவர்கள்(குமரி சேர்ப்பர்கள்):

இந்த பகுதியே முன்பு “கேரள சிங்க வள நாடு” என்று அழைக்கபட்டுள்ளது. இதை இரண்டாம் ராசதிராசன் என்ற சோழன் காலத்தில் “பொன்னமராவதி கேரளன் திருக்கொடுங்ககுன்றமுடைய நாயன நாத ராஜன்” என்ற பொன்னமராவதி பகுதியை ஆண்ட மறவர் தலைவனை பற்றி குறிப்பு வருகிறது.
பொன்னமராவதியின் பெயரில் வரும் பொன்னன் மற்றும் அமரன் இருவரும் மறவர் தலைவர்கள் ஆவார்கள்.
இதில் உப்புகட்டு மறவரில் வரும் ஒரு பட்டம் “யானையை குற்றிய ஐந்நூற்றி புரையார்”. இதில் வரும் ஐந்நூற்றுவர் என்பவர் வனிகர் குழுவினரை குறிப்பதாக ஊள்ளது. அவர்களுக்கு கடல் பயனங்களிலிலும்,வனிக தளங்களில்லும் காவல் புரிந்ததை காட்டுவதாக இருந்தாலும் புரையார் என்பது சேர பட்டமான பொறயர் என்பதாகும். “யானை குற்றினான்” என்பது சேர மன்னனின் பெயரான “பல் யானை செல் குட்டுவன் இளஞ்சேரல்” என்பதை குறிப்பதாகும்.

இப்படி யானை குற்றினான்,

யானை வெட்டினான்,

பொறையர்,

வெற்றிமாலையிட்டான்,

கொம்பன் என்பது சேரரின் பட்டமாகும்.

டைச்சங்க காலச் சேரர்கள் :

உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129 பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105 செங்குட்டுவன்< கி.பி. 129-184 அந்துவஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165 இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180

விரயாச்சிலை ஒரு படைக்களமாகும்:

விராயச்சிலை என்பது உப்புக்கோட்டை மறவர் மிகுதியாக வாழ்கின்ற பகுதியாகும். பிற் காலத்தில் இது சோழ மற்றும் பாண்டிய நாட்டு படைகள் தங்கி பயிற்சி பெறும் களமாக இருந்துள்ளது. எனவே இப்பகுதியை பற்றிய பல மறவர் கல்வெட்டுகள் இப்பகுதியில் கான கிடைக்கின்றன.
அதில் பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,
“விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை” என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது.
பாண்டிய மன்னன் சீவல்லவ தேவர் விராயச்சிலை கல்வெட்டுகலில் “முன்னள் குல சேகர தேவருக்கு இவ்வூர் மறவர் நம்பியான் ஞாற்றுவ பெரியான் “ என்று க்ல்வெட்டு கூறுகிறது.
இராஜராஜ சோழனின் கல்வெட்டும் மட மயிலாபூரில் உள்ள மறவரை பற்றி கூறுகறது.
குலோத்துங்கனின் குடுமியான் மலை கல்வெட்டு திருவேங்கை வாசல் சிவன் கோயில் க்ல்வெட்டும் அவ்வூரில் உள்ள மறவரை பற்றி குறிக்கிறது.
இவ்வாறு பொன்னமராவதியில் உள்ள விராயச்சிலை 1000-ம் வருடங்களுக்கு மேலாக போர்பாசறையாக உள்ளது.

மறவனீஸ்வரம் கண்ட சேர மறவன் பழுவேட்டரயர்

கி பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. குமரன் கண்டன்

2. குமரன் மறவன்

3. கண்டன் அமுதன்

4. மறவன் கண்டன்

5. கண்டன் சத்ருபயங்கரன்

6. கண்டன் சுந்தரசோழன்

7. கண்டன் மறவன்
இதுதான்
கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும்.

ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

“முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது.

முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்.” என்று பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி ‘பெரிய பழுவேட்டரையரையும்’, ‘சின்னப் பழுவேட்டரையரையும்’ எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம்.

பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.
மீண்டும் அடுத்த பயணத்தின்போது சந்திப்போம். .
1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொப்ப

2 ரகேசரி பம்மக்கு ய

3 ¡ண்டு கூ ஆவது அ

4 அடிகள் பழுவேட்டரைய

5 ர் மறவன் கண்டனா

6 ர் கன்மி அடிகள் அ

7 ருளிச் செய்ய சிறு ப

8 ழுவூர் திருவாலந்து

¨ 9 ற திருக்கற்றளி மேனாய

10 கமாக நின்று செய்வித்த

11 மங்கல நாட்டு மங்கலத்து

12 கவிசியன் நக்கன் மாறபி

13 ரானான நம்பியாரூரன் திருவா

14 லந்துறை மகாதேவர்க்கு

15 மூன்று சந்திக்கும் வைத்த

16 தயிரமுது நாராய நாழி

17 யால் நாடுரி நாடுரிக்கு

18 ம் வைத்த சாவா மூவாப்

19 பேராடு இருபது இது
என்று முடியும் இன்னும் புதுக்கோட்டை மறவரை பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும் என நம்புகின்னேன்.

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக புனைந்து தேவர் இனமாக அடையாளபடுத்துகின்றனர். மூவேந்தர்களுக்கும் முதற்படைவீரராய் திகழ்ந்து மறவர்கள் பெற்ற பட்டங்களும் விருதுகளும்.

Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)

இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
சேர மறவர்
—————
பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?
சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு
சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு
புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்
பழுவேட்டரையர்கள் எந்த சாதி?
——————————————————–
  பழுவேட்டரையர்கள் சேர மன்னர்களின் பரம்பரையாகும் அதுபோல் பல சோழ மன்னர்களின் தாயர்கள் பழுவேட்டரையர் வம்சத்தில் வந்த அரசியர்களாகும். பழுவேட்டரையர்கள் முத்தரையர்,இருக்குவேளிர்,சோழருடன்
மன உறவு கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் மறவர் குலத்தில் தோன்றியதால் மறவனீஸ்வரம்,மறவனேரி,க்ஷத்திரிய
மறவன் என பெயர் கொண்டிருப்பதை கண்ட பல கோமாளி சாதிகள் தாங்கள் தான் பழுவேட்டரையர் எனஊளையிட்டு எழுதிகொள்கின்றனர். பள்ளி,கொங்கவேட்டுவர் மற்றும் பல சாதிகள் சொல்லி கொள்கின்றனர்.
மறவன் என்பது பன்பு பெயர் தான் என சொல்கின்றனர். நாம் பழுவேட்டரையர்,வன்னாடுடையார்,இருக்குவேளிர்,
மலையமான்,வாணர் அல்லாத பல நூறு சோழ,பாண்டிய,பல்லவ கல்வெட்டுகளை மறவர் என்ற சாதி பெயர் கொண்டிருப்பதை காட்டி விட்டோம் இருப்பினும். பழுவேட்டரையர் மறவர் சாதி தான் என நிருபிப்போம்.
பழுவேட்டரையர் பெயர் விளக்கம்:
பழுவூர் என்ற பெயரில் கீழ பழுவூர் மேல பழுவூர் என்ற பழுவூரை ஆண்ட அரையர்களே பழுவேட்டரையர்கள்.
மற்றபடு வேட்ட எனற பெயரை வைத்து வேட்டவன் கோமாளிதனமாக கூவினால் அது பழுவேட்டரையர்களுக்கு
பொருந்தாது பழுவேட்டரையர் போர் கொண்ட மாவீரர்கள் எலி அடிக்கும் கன்னட வேடா(பேடா) இல்லை.
பழுவேட்டரையர் காலம் எது:
  மேலும் சில கோமாளிகள் போட்டோ ஷாப்உதவியில் இன்று பழுவேட்டரையர் வம்சம் இருப்பது  போல் சில போலிகளை உருவாக்கியுள்ளனர். உண்மையில் பழுவேட்டரையர் காலம் எது.பழுவேட்டரையர்கள் சோழ மன்னன் விஜயால சோழன் காலத்தில் தொடங்கி இராஜேந்திர சோழன் காலத்தில் முடிந்து விட்டது. பிற்காலத்தில் பழுவேட்டரையன் என்ற பெயரில் எந்த ஒரு அரையரும் குலோதுங்க சோழன்
காலத்திலோ அல்லது பாண்டியர் காலத்திலோ அல்லது நாயக்கர் கால எந்த ஒரு  கல்வெட்டுடிலும் பழுவேட்டரையன் என்ற பெயரே இல்லாதபோது பழுவேட்டரையர் பரம்பரை என சில மூடர்கள் கூவுவது கோமாளித்தனமே.
 
பழுவேட்டரையர்கள் சோழர் காலத்தில் தோன்றி ராஜேந்திர சோழர் காலத்திலே மறைந்து போன மறவர் அரசே பழுவேட்டரையர்கள்.
பழுவேட்டரையர்கள் மறவர்கள் என ஆதாரமுள்ள கல்வெட்டு இதோ:
————————————————————————————————————————-
அவனிகந்தப்ப ஈஸ்வரம் கோவில் கல்வெட்டில்:
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு……எட்டாவது அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார்
படை இளைய இரணமுக கைக்கோளன் பலதேவனும் வைய்ரியை கூற்றத்து மல்லூர் இருக்கும்
வெள்ளாளன் கிழவன் நம்பனும்.…..அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் சிறு பழுவூர்
திருவாளந்துரை தேவர்க்கு……..
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவன் தன் கைக்கோள பரிவாரத்தில் இருக்கும் கைக்கோளன் பலதேவனுக்கும் வெள்ளாளன் கிழவன் நம்பனுக்கும் சேர்த்து இறையிலி வழங்கி செய்தி.
ஒரே கல்வெட்டில் மறவர்,கைக்கோளர்,வெள்ளாளர் என்ற மூன்று ஜாதி பெயரில் பழுவேட்டரையர்மறவர் என உணர்த்தியுள்ளது. இப்போது தெரிகிறதா பழுவேட்டரையர் மறவர் என்று.
க்ஷத்திரிய மறவன் பழுவேட்டரையர் கல்வெட்டு:
…ஸரிபம்மற்கு யாண்டு இருபத்திரண்டாவது அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்து மஹாதேவர்க்கு..
மஹரிஷி வம்சத்து க்ஷத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரஷாத……
செய்தி:
சேரரின் நேரடி குடியிலும் சோழரின் கிளைக்குடியாய் கொண்ட பழுவேட்டரையர்கள் மஹரிஷி வம்ஸத்தில் தோன்றிய க்ஷத்திரியர்களான மறவர் இனத்தவராகம்.மறவர்களும் அகத்திய,காசிப போன்ற குரு மகரிஷி வழி வந்த க்ஷத்திரியர்கள் ஆவர்.


1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்

இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!

கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

“முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்.” என்று பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.

மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி ‘பெரிய பழுவேட்டரையரையும்’, ‘சின்னப் பழுவேட்டரையரையும்’ எங்கிருந்து எடுத்தார் என்று?

இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம்,

 

 

 

 

 

 

 

 

 

 


அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம்.
 பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment