பொன்னியின் செல்வன்-23

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் 23

அமுதனின் அன்னை

வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே “பூமாரி பொழிகிறதடா!” என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டு வண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள் கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்!

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -22

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் 22

வேளக்காரப் படை

முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான்.

சிவிகையின் அருகில் ஓடி வந்து, “இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்…” என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து பார்த்தான்.

மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது.

“இல்லை, இல்லை! தாங்கள்.. பழுவூர் இழவரசி!.. பளுவூர் இரவளசி… உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!…” என்று உளறிக் கொட்டினான்.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-21

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் 21

திரை சலசலத்தது!

ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.

சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை ‘வளநாடு’ என்றும் சோழ மன்னனை ‘வளவன்’ என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது? இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்குச் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் நினைவுக்கு வந்தன.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :

1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார்.

2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.

3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் ‘தெஞ்சியேந்தல் ‘ எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.
மடங்கள் பெற்ற கொடை:

சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும், நிலங்களும் எக்கச்சக்கம்.
1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், ‘மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து, முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு ‘தச்ச மல்லி ‘ எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

தேவர்கள்:

தேவர்கள்:

இவ்வினத்தில்மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர்,அகமுடையார். இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய சென்றுவிட்டார்.
அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி வந்தபோது ஒரு குழந்தை கதவுக்கு பின்னால் கள்ளத்தனமாக ஒளிந்து இருந்ததால்
கள்ளன் என்றும் மற்றொருவன் மரக்கிளையின் மீது அமர்ந்து இருந்ததால் மறவன் என்றும், மற்றொருவன் தைரியமாக வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்ததால் அகமுடையான் (அகந்தை) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு எட்கர் தார்ஸ்டன் செவிவழிச் செய்தியைக் கேட்டு தன்னுடைய புத்தகத்தில்
எழுதியிருந்தாலும் வரலாற்றில் இப்படி இல்லை …இதை எட்கர்
தார்ஸ்டன் ஏற்கவும் இல்லை .மேலும் மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர்
சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது நம்மை இழிவுப்படுத்துவதற்காகவே திரிக்கப்பட்டது …

Continue reading

Posted in தேவர்கள் | Tagged , , | 1 Comment

பொன்னியின் செல்வன்-20

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் 20

“முதற் பகைவன்!”

தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

“அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது! வெட்டுடா அதை!” என்றான் ஒருவன்.

“வேண்டாம்! உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரப்படுத்தி வையுங்கள். நம் பகைவர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள்! ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள்! மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன!” என்றான் ரவிதாஸன் என்பவன்.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-19

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம்-19

ரணகள அரண்யம்

பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்.

குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில் மண்ணியாற்றுக்கு வடகரையில் திருப்புறம்பயம் என்னும் கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்தது. இது அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாடர்லூர்ச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை அத்தகைய முக்கியம் வாய்ந்தது. நமது கதை நடந்த காலத்துக்குச் சுமார் நூறு ஆண்டு காலத்துக்கு முன்னால் அச்சண்டை நடந்தது. அதன் வரலாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -18

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் -18

இடும்பன்காரி

கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம்.

வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -17

பொன்னியின் செல்வன்பாகம் -1

அத்தியாயம் -17

குதிரை பாய்ந்தது!

ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிதேவனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும் புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி பயங்கொள்ளியாயிருக்கலாமா? அவளுடைய பயந்த சுபாவத்தை மாற்றி அவளைத் தீரமுள்ள வீர மங்கையாக்க வேண்டுமென்று குந்தவை விரும்பினாள். அதற்காகவே இந்தப் பொம்மை முதலை விளையாட்டை ஏற்படுத்தியிருந்தாள். ஆனால் அந்தச் சோதனையில் கொடும்பாளூர்க் குமாரி வெற்றியுடன் தேறிவிட்டாள்.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | 1 Comment

வாட்டாக்குடி இரணியன் தேவர்

“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் ..

தமிழகத்தில் முதன் முதலாய்
விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் குடி இரணியன்-சாம்பவான் ஓடைச் சிவராமன்’ [ இறப்பு ;மே மாதம் மூன்றாம் தேதி]

1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின்
ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண் ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

Continue reading

Posted in வாட்டாக்குடி இரணியன் தேவர் | Tagged , , | 1 Comment