தமிழ்ச் சங்கங்களின் வரலாறு

நான்கு தமிழ்ச் சங்கங்கள்:

பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன போதிலும் நான்காம் தமிழ்ச் சங்கம் இன்றும் இயங்கி கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே. தமிழ்ச் சங்கங்களைப் பற்றியும், சங்க வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் அறிய பல இலக்கியச் சான்றுகள் உதவுகின்றன.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

உத்தமசோழபுரம் வரலாறு

வரலாறு :
ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் “நில்’ என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.
திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி  என்றும் கூறப்படும்

இத்தலத்தின் சிறப்புகள் பற்றி உத்தமசோழபுரம் கரபுரநாதர் புராணம் என்னும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு

இரா.கிருஷ்ணமூர்த்தி

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார்.அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி செய்ய வேறு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி
வந்தனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் சில குகைத் தளக் கல்வெட்டுகளில் சங்க கால மன்னர்களின் பெயர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 3 Comments

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

பூலித்தேவன்பூலித்தேவன்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

சிவகங்கை அரண்மணை

காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்திய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மணை.
மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே கோவில், பெரிய மண்டபம், அந்தப்புர மாடம், சின்ன நீச்சல்குளம் எல்லாம் காலத்தின் சிதைவுடனிருக்கின்றன. சுற்றியுள்ள 18 அடி உயரச் சுற்றுச்சுவரும் விரிசலடைந்து உருமாறியிருக்கிறது.

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged | Leave a comment

காளையார் கோயில் வரலாறு

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன்.

(காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)

காளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஏறு. சங்ககாலத்தில் இவ்வூர் ஏறை என்னும் பெயருடன் விளங்கியது. இதன் அரசன் ஏறைக்கோன். குறமகள் இளவெயினி என்னும் புலவர் இந்த அரசனின் பெருமையைப் போற்றியுள்ளார்.

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், வரலாறு | Tagged | 2 Comments

ஊற்றுமலை ஜமீன் வரலாறு

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர்.

வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை பல படையுடன் சேற்றூராருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன்தார் அப்பகைவர் கையில் அகப்பட்டார்: அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.

Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Tagged | Leave a comment

ஜமீன் சிங்கம்பட்டி-2

திருநெல்வேலிப் பகுதியில் தவறு செய்தவர்களைப் பார்த்து “முதுகுத் தோலை உரிச்சிப் போடுவேன் படுவா’ என்பார்கள். முதுகுத் தோலை உரிக்க முடியுமா என்ன? இன்றைக்கு “சும்மாக்காச்சும்’ இப்படி வெத்து மிரட்டல் விட்டாலும் தவறு செய்தவரின் முதுகுத் தோலை நிஜமாகவே உரிக்கும் தண்டனையும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீனில்தான் இக்கொடிய தண்டனை முறை இருந்திருக்கிறது.

முருகதாஸ் தீர்த்தபதி

ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி (72). என்ன தலைசுற்றுகிறதா? இதுதான் அவரது முழுப் பெயர். சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் சற்று வித்தியாசமானவர்.

Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged | 3 Comments

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு

அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.

Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

கொல்லியும் – அறப்பள்ளியும் வரலாறு

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈச்வரம் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து

4500 அடி

உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45

கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.
Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment