வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”

தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

Continue reading

Posted in மதுரகவி பாஸ்கரதாஸ் | Tagged | Leave a comment

தென்னாடு

சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார்.

இவருக்குப் பின்னால் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமல் போகவே இவருடைய இரண்டாவது மனைவியின் மகன், ரெகுநாத தேவனை மறவர்குள மக்கள் கி.பி.1674ம் ஆண்டு பட்டம் சூட்டி வைத்தார்கள். கிழவன் சேதுபதி என்ற பெயரில், இவர் சேதுநாட்டை ஆண்டு பெரும் பேரும் புகழோடு 39 ஆண்டுகள் ஆட்சி ஆண்டு சேது நாட்டின் பெயரை உயர்த்திய வீரமன்னனாகும்.

.

.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

மன்னர் முத்துவடுகநாதத் தேவர்

சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர்.

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged , | Leave a comment

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுத்த பசும்பொன் தேவர்

.தேவர் திருமகனார் பர்மாவுக்கு சென்றபோது, புத்த துறவிகள் அவருக்கு கறுப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். அதாவது, பெண்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கூந்தலை கம்பளமாய் விரிக்க, அதன் மீது நடந்து வருமாறு, தேவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதைக்கண்டு பதறிப்போன திருமகனார், “பெண்களை கடவுள் போன்று கும்பிடுகிற தமிழகத்தில் இருந்து வந்தவன் நான்” என்று சொல்லி மறுத்து விட்டார்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

ஆப்கானில் தேவர் அரச வம்சம்

ஆச்சரியமான செய்தி.

சோழ  மன்னர் ஆப்கானிய இந்து அரச வம்சம் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.
இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்கள்
Posted in சோழன் | Tagged | Leave a comment

வல்லம்பர்

300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த சேரரினமே வல்லம்பர்கள். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர்.பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப் பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர். இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், போன்ற பகுதிகளில் பெருமளவில் வசித்துவருகின்றனர்

அம்பலம் என்று வல்லம்பர்களையும் அழைப்பார்கள் . தேவர் சமூகத்தை போன்ற அல்லது அவர்களில் இருந்து பிரிந்து வந்த வல்லம்பர்களை அம்பலம் என்றும் அழைப்பார்கள் . .

Posted in வல்லம்பர் | Tagged | 1 Comment

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடக் வடுவம். குறிப்பாக தமிழ்நாட்டு தேவர், கம்பளநாயக்கர் சமூகங்களில் இது சடங்கு முக்கியத்துவம் பெற்ற ஆட்டம்.[1] தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.
Posted in தேவர்கள் | Tagged | 1 Comment

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.

பொற்கை பெற்ற வரலாறு :

மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் “வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்” எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

முதலாம் இராஜராஜ சோழன்

இராசராச சோழன்
சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
Posted in சோழன் | Tagged , | 1 Comment