மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : –
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.



