இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள் மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது பாண்டியர் வம்சத்திலிருந்து இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்” குறிப்பிடுகிறது.
இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட மித்தசேனன் என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான். தாதுசேனன் என்ற இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் இராசராட்டிரம் மீது படையெடுத்தான்.
அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும் தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.