கள்வர் கள்வன்(கள்ளர்மான்)-கள்வர் கோமான்

இந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை.  எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது அதன் பெருந்தன்மை தெரிந்தது.

இந்த கட்டுரை முத்தரையர்களை உரிமை கோறுபவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதல்ல அதை மறுக்கவும் வேண்டாம். ஆனால் வரலாற்று திரிபுடன் கலகமூட்டிகளை ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை.

 

ஆனால் இன்று முகநூல்களில் சில விஷக்கிருமிகள் வேண்டுமென்றே இனக்கத்தை கெடுக்க என்னவெல்லாம் தூண்டி நாகரீகமற்ற தடித்த வாதங்கள் அரங்கேறி கானச்சகிக்காமல் இந்த கட்டுரையிடும் நிற்பந்தகளுக்கு ஆளானோம். நீல சாயம் பூசி இராசா வேசம் போடும் நரிகள் வேஷம் களைப்பதற்க்கு.”வரிப்புலிகளை கண்டு உடம்பில் சூடு போட்டு கொள்ளும் பூனைகள் புலிகளாகாது”.

முத்தரையர்-தஞ்சைக்கோன் கள்வர் கள்வன்

முன்னுரை:

தற்காலத்திய திருச்சி ,தஞ்சை ,புதுகோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர் .இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது .திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும் .இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது .செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி ,உமையவள் ஆற்காடு ,வல்லம் ,தஞ்சை ,முதலிய பகுதிகள் முத்தரையரின் தலை நகரத்தில் அடங்கி இருந்ததாக தெரிகிறது திருகாட்டு பள்ளி நியமம் ,விஷ்ணம்பேட்டை,இளங்காடு கூடநாணல் கூழாக்கி ஆற்காடு ,விண்ணமங்கலம் ,பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன .செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது ,தஞ்சை ,வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன.

இந்த கட்டுரைக்கு துனை நின்ற நூல்களும் ஆசிரியர்கள் ஆதாரப்பூர்வமான தமிழக கெஜட்டுகளில் கானப்பட்ட அவனங்கள் மற்றும் இதை எழுதி ஆவனப்படுத்திய தமிழர் அல்லாத பெருமக்களை இவ்வேளைகளில் நாங்கள் நன்றி கூறுகின்றோம். இவை ஆங்கிலேயர் காலத்தில் சுப்பிரமணிய அய்யர் அவர்களால் தொகுக்கபட்ட அரசு கல்வெட்டுகளில் ராவ் பகதூர் வெங்கைய்யா (ஆங்கிலேயர் காலத்திய கல்வெட்டு ஆய்வாளர்கள்) இதை பிரசுரமிட்ட எபிகிராபியா இண்டிகா தாம்ஸ் மற்றும் புரொபசர் கொனொய் இவர்களுக்கு எங்களது நன்றி.

இதற்க்கு  பின் புதுக்கோட்டை மாநிலம் என்னும்  பெயரில் கே.ஆர். வெங்கடராம அய்யர் மற்றும் கமிஷனர்

தொல்லியல் துறை 2002 மற்றும் இதை மொழி மாற்றம் செய்த புதுக்கோட்டை வரலாறு[கி.பி.1600] வீ.மாணிக்கம் அவர்களது ஆதாரப்பூர்வமாக அரசு ஆதாரங்களை வெளியிடுகின்றோம்.

முத்தரையர் பெயரின் உன்மையான் விளக்கம் என்ன?

பல விளக்கங்கள் ஏற்கனவே வலைதளங்களில் நிரம்பி இருந்தாலும் அவை புனைவுகளாகவோ ஊகமாகவோ தான் உள்ளது சரியான விளக்கங்களாக இல்லை.மூன்று வேந்தர்களை வென்றவர் அதனால் முத்தரையர் என்றனர் சிலர் இல்லை முத்து+அரையர் என்றனர். இப்படி பல விளக்கங்கள் சொன்னாலும் முத்தரையர் முதிராஜ் என்னும் பெயர் வழக்கம் தென் இந்தியா முழுவதும் உள்ளதால் இந்த முத்து+அரையர் என்ற பெயரும் தமிழ் நாட்டை தவிர மூன்று அரையர் எங்கும் இல்லை ஆதனால் இந்த விளக்கமும் பொய்தான்.

முத்தரையர்(senior lineage) என்றால் மூத்தோர் மூத்த+அரையர் அரசர்களின் மூத்த வர்க்கம். இளைய வர்க்கத்தினரான இளவரையர்(junior lineage) அல்லது இளைய அரசர் என்பதற்க்கு அர்த்தம்.மூத்தரையர்,இளவரையர் என வரும் கல்வெட்டுகளில் இது உறுதியாகின்றது. இதைப்போல் அதியரையர் அல்லது அதியரைசர்(ancient king) என்றால் அது ஆதி+அரையர் என்று பொருள் படும்.

யானை(களபம்) சின்னம் கங்கர்களின் சின்னம் களப சின்னத்தை முத்தரையர் பயன்படுத்தி உள்ளனர்.முத்தரையரின் குலம் சிலர் கங்கர்கள் என்கின்றனர் சிலர் பல்லவர்கள் என்கின்றனர். பெரும்பிடுகு முத்தரையர் =பெரும்பிடுகு(பெரிய இடி) என்ற வஜ்ரத்தை தாங்கும் அரையன் என்றால் இந்திரன் என அர்த்தம். ஆகவே ஐராவதம்(களப) வாகனம் கொண்ட  இந்திர வர்மன் அல்லது இந்திர பெருமாள் என்பது. கங்கர்களின் பட்டமாகும் இவர்கள் வைத்திருக்கும் மாறசிம்மன் என்பதும் கங்கர்களின் பட்டத்தை உனர்த்திகின்றது. இதைபோல் தனஞ்சயன்,விடேல் விடுகு போன்ற பட்டங்கள் பல்லவரை குறிக்கின்றது. விஜயாலயச்சோழனின் மகனான ஆதித்த சோழனின் பட்டயத்தில் நாகை,செந்தலையில் பல்லவரை வென்று சோழநாட்டை பிடித்தாக உள்ளது. எனவே முத்தரையர் கங்கரா அல்லது பல்லவரா என வரும் கேள்விகள் வியப்பை குறிக்கின்றது.

கள்ளர்களின் கல்வெட்டுகளில் கள்ளப்பெருமான் கொங்கரையர்(கங்கராயர்) மற்றும் பல்லவராயர் என்னும் அதிகமாக பயன்படுத்தும் பட்டங்களில் முத்தரையர் கங்கரும் பல்லவரும் கலந்த கங்கர்-பல்லவர் என்னும் அரசுகள் தொண்டை மண்டலம் மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களின் நிறைய தெரிகின்றது.

எனவே முத்தரையர்கள் கங்க பல்லவர்கள். முத்தரையர் கங்க-பல்லவர்கள் என்னும் சூரிய குலத்தை சார்ந்தவர்கள். இனியும் யாரும் முத்தரையர் என்ன குலம் என குழப்ப வேண்டாம்.

 

 

வராலாற்று ஆசிரியர்கள் என்னும் சாதி சார்ந்த திரிபு வாதிகள்:

முத்தரையர் பற்றி ஒரு காலத்தில் கருத்து தெரிவித்த அரைவேக்காட்டு ஆசிரியர்களான சதாசிவ பண்டாரத்தார் மற்றும் மயிலை சீனி வெங்கடசாமி எந்த சாதியை சார்ந்தவர்கள் என அப்போது தெரியவில்லை ஆனால் இன்று தெரிகின்றது அவர்கள் யாரென நூற்றாண்டுகள் கடந்த வரலாற்று ஆசூயை இன்றும் தொடர்கின்றது.

சாதி சார்ந்த வரலாற்று ஆசிரியர் முத்தரையர் மன்னர்களுக்கு சம்பந்தமில்லாத இனக்குழுவை சார்ந்த அந்த “நடனத்தார்” மூன்று புத்தகங்களை முத்தரையர் என எழுத என்ன காரணம் என இதில் அரசியல் ஆசைகள் என்ன வரலாற்று திருட்டு கொள்ளைகளின் என்ன மதிப்பு என்ன என இன்று தெரிகின்றது.

இவர் சொன்ன கருத்துக்கள் என்ன?

முத்தரையர் மன்னர்கள் “கள்வர் கள்வன்” என  பெயர் கொண்டதற்க்கு காரணம் கள்ளர்களை வென்றது தானாம். “கள்வரை வென்றதால் கள்வர் கள்வன்” என பெயர் கொண்டனராம் மேலும் முத்தரையர்கள் சூரிய,சந்திரர்,அக்கினி குலம் என கதைவிட்ட புத்தகம் தான் முத்தரையர் வரலாறு. சரி “நடனத்தாரே” உங்க சாதி என்ன? அதற்க்கு பதில் சொல்ல முடியுமா? ஏனினில் கருத்து சொல்வதற்க்கும் சாதி தேவை படுகின்றது. சும்மா எலி கோவனத்தோட ஓடாது.

இவ்வளவு சொல்லும் “மழவர் மழவன்” “மழவர் பெருமான்”  அதியமான்,ஓரி தன் சாதி என  புத்தகம் எழுத தெரிந்தவர்க்கு இந்த காரணத்துக்காக  மொட்டதலை முழங்கால் முடிச்சு போட தெரிந்தவர்க்கு “கள்வர் கள்வன்” என்றால் “கள்வர் கள்வன்” என்றால் கள்ளர்களை வென்ற கள்வனாம். விளக்கம் தருவோம் நாமும் அதற்க்கு,

காவிரிகிழவன் கிள்ளிவளவன் புறநானூறு பாடலில், “அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன்” என பாடியுள்ளனர். அதற்க்கு ஒரு பேச்சுக்கு மறவர் போர் செய்வர் அதனால் மறவரை போரில் வென்றவன் என வைத்து கொள்வோம் அறவரான அந்தனர் போர் செய்பவர்களா அந்தனனை கொள்வது பாவம் என சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் கூற அந்தனனை வென்றவனா? மதுரை காண்டம் சிலப்பதிகாரத்தில் கன்னகி மதுரையை எரிக்கையில் “அந்தனர்,குழந்தைகள் வயதானவர்,உடல் ஊனமுற்றோரை இந்த தீ தீண்ட கூடாது” என ஒரு பென்னே அந்தனரை கொல்வது பாவம் எனில் ஒரு மன்னன் கொல்வானா?

இதற்க்கு பொருள் “அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன்” அந்தனரில் தலைசிறந்தவன் மறவரை போல போரில் சிறந்தவன் மள்ளரை போல உழவில் சிறந்தவன் என பொருள் கொள்ளலாம்.

சோழ மன்னன் தன்னை “இராஜ இராஜன்” என பெயர் கொண்டான் அதற்க்கு அவன் இராஜன்(அரசன்) அல்ல அரசர்களை எல்லாம் வென்ற அரசன் அல்லாதவன் என பொருள் கொண்டால் எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் தான் இந்த கருத்து “இராஜ இராஜன்” என்றால் அரசர்களில் தலைசிறந்தவன் என்று மட்டுமே பொருள்.

இது போல் அரிகேசரி என்னும் பெயர் உள்ளது அரி என்றால் சிங்கம் கேசரி என்றாலும் சிங்கம் அதற்க்கு சிங்கம் அல்லாத வேறோரு மிருகம் சிங்கங்களை வென்றதால் அரிகேசரி என்ற பெயரா? அல்லது.அரிகேசரி என்றால் சிங்களில் தலைசிறந்தது என அர்த்தம்.

IF KING OF KINGS IS TO CONSIDERED AS WORST MEANING  OF  HE IS NOT A KING BUT HE DEFEATED ALL KINGS IS THE WRONG MEANING. SO THE SAME KING OF KINGS IS HE IS GREATER AMONG KINGS SO THE SAME KALVAR KALVAN MEANS BEST OF KALVAR OR KING OF KALVARS IS THE RIGHT TO UNDERSTAND.

மன்னர் மன்னன் என்றால் மன்னர்களில் தலை சிறந்தவன் என்று தான் பொருள். அதேபோல் கள்வர் கள்வன் என்றால் கள்வர்களில் தலை சிறந்தவன் கள்வர் கோமான் என அர்த்தம்.

எனவே முட்டாள் தனமான சுயநலம் வரலாறு ஆகாது.ஆடுன காலுக்கு கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது அந்த நடனசிகாமனிக்கு அறிவுரை கூறுகின்றோம்.

 

இதை நாம் மட்டும் சொல்லவில்லை 90% வரலாற்று ஆய்வாளர்கள் கூறி அச்சிட்டு வெளியிட்டு விட்டனர்.

இதை 1915-16 ஆண்டிலே சுப்பிரமணி அய்யர் மற்றும் ராவ் பகதூர் வெங்கய்யா இருவரும் ஆராய்ந்து முத்தரையர் கள்வர்கள்வன் என்பது மதுரை,தஞ்சை,புதுக்கோட்டை பகுதியில் வாழும் கள்ளர் குல மக்கள் என கூறி ஆங்கிலேய அரசே வெளியிட்டு விட்டது ஆவனம் போய் புதுக்கருத்து கூறும் வக்கத்தவர்கள் நாக்கை கடித்து கொள்ளட்டும் என்று.

முத்தரையர் கள்ளர் சமூகத்தவர் என இன்னோர் ஆதாரம்.கள்ளர் என்பது யானையை குறிக்கும் முத்தரையர் சின்னமாகும்.கள்வர் கள்வர் பெரும்பிடுகுமுத்தரையர்.

 

 

 

 

 

சுப்பிரமணி அய்யர் மற்றும் ராவ் பகதூர் வெங்கைய்யாவின் விளக்கம். இது தான்.

The glorious Title of Muthariyar kings are”They be the glorius cupid.He is ferocius lion to enemy.The chief of kalva of kalvar. he is truthful to brave who thought.Kalvar are the class of  people may be the varientkallars, a tribe of Madura and pudhukottai district

kalvan_amara_kalan

முத்தரையர் கள்ளர் என்னும் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை தாங்க முடியாத பொறாமையில் புகைந்த புகையிலை தான் அந்த கூத்தரின் புத்தகங்கள். இன்றும் செந்தலை,தஞ்சை பகுதிகளில் இதே முத்தரையர்,தஞ்சரையர்,செம்பிய முத்தரையர் என்ற பட்டம் கொண்ட பெரும்பான்மையராக கள்ளர் மக்கள் தஞ்சையில் வாழ்கின்றனர்.

இதில் வேறு ஒருவருக்கு சாதிகளுக்கு சாதகமாக எழுதினால் தஞ்சை,திருச்சி பகுதிகளில் சண்டை மூட்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடையதுடிக்கும் கூட்டத்தை இந்த கட்டுரையில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

1 கல்வெட்டு இல்லை 4 கல்வெட்டுகளில் கள்வர் கள்வன் என வந்துள்ளது. இதுபோக செந்தலை முத்தரையர் கல்வெட்டு முழுவதையும் போடுகின்றோம். இதேபோல் முத்தரையர்களை கோறுபவர்களுக்கும் நாங்கள் வழிவிடுகின்றோம் இந்த கல்வெட்டுகளில் அவர்கள் சாதிபெயர் 10-1 வந்தாலும் நாங்கள் ஏற்கிறோம் கோறும் முன் தங்கள் சாதிபெயர் என்ன என முடிவு செய்து விட்டு அரசாங்கத்தில் காப்புரிமை பெற்று இந்த பெயரை எங்களை தவிர வேறு யாரும் பயன் படுத்த கூடாது என்று வாங்கி வந்தால் நன்று.

என்னிக்கை தொடங்குகிறோம்.

இடம்:செந்தலை தூன் கல்வெட்டு மேற்கு முகம்

க.என்.670-1909

1)”ஸ்ரீ மாறன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அதிகாசன்”

இடம்:செந்தலை இரண்டாம் தூன் கல்வெட்டு தென் முகம்

2)”ஸ்ரீ தஞ்சைக்கோன் ஸ்ரீ வல்லகோன்  ஸ்ரீ கள்வர கள்வன் அம்பெய்தி நிலவை பெயர்த…”

இடம்:செந்தலை மூன்றாம் தூன் கல்வெட்டு தென் முகம்

பல்லவர்களுக்காக பாண்டியனை வென்ற

3)”ஸ்ரீ தமராலயன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அபிமானாதரன்…”

இடம்:செந்தலை நாண்காம் தூன் கல்வெட்டு வடக்கு முகம்

4)”ஸ்ரீ அபிமானாதரன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் …”

முத்தரையர் பற்றி புதுக்கோட்டை மாவட்ட வரலாறு:

சேர,சோழ பாண்டியர் ஆகிய மூவரசர்களோடு முத்தரையர்கள் தொடர்புடையவர்கள் எனும் கருத்தின் அடிப்படையில் இவர்கள் கங்கரின் வழிதோன்றல்கள் என கூறப்படுகின்றது. முத்தரையர் தலைவனான சுவரன் மாறன் செந்தலை கிள்ளுக்கோட்டை(1909-236) கல்வெட்டுகளில்,ஸ்ரீ கள்வர் கள்வன் எனும் விருப்பெயரை “களவர் கோமான் புல்லி’ எனும்குறிப்போடு இனைந்து முத்தரையரின் பூர்வீகம் உறுதிபடுத்தபடுகின்றது(கிருஷ்ணன்1981).

களபத்தை கூட்டமாக கொண்ட இனக் குழுவினரே கள்ளர் என கடந்த இயல் விளக்கம் குறிப்பிடுகின்றது. மேலும் பின் நாளில் காணப்படும் கள்ளர் எனும் சமூகக் குழுவினரையும் களப இனக்குழுவினரான கங்கரின் வழியினர் எனக் கருத இடமுண்டு. எனவே சுவரன் மாறனுக்கு உரித்தாக்கபட்டுள்ள “ஸ்ரீ கள்வர கள்வன்” எனும் விருது பெயரை கள்ளர் சமூகத்தவரின் தலைவனான(கள்வர்) முத்தரையன் யானையை அரச சின்னமாகவும் பெற்ற(ஸ்ரீ கள்வர்) எனப் பொருள் கொள்ளலாம். களப்பிரர் வீழ்ச்சிக்கு பின் தஞ்சை பகுதியில் முத்தரையர் ஆதிக்கம் பெற்றிருந்த காரணத்தால் சோழர் எழுச்சி தாமதபட்டது.

இன்னும் செந்தலை முத்தரையர் கல்வெட்டுகள் கிழே கொடுக்கபடுகின்றன

 

 

 

 

 

 

அதில் எதாவது தங்களை குறிக்கின்றதா என பார்த்து கொள்ளவும்.

அரசியல் லாபம் மற்றும் ஒட்டுக்காக பலிகடா ஆக்கப்படும் முத்தரையர்கள், 

 அரசியல் லாபம் மற்றும் ஒட்டுக்காக பலிகடா ஆக்கப்படும் முத்தரையர்கள், 

முன்னாள் தமிழ்நாடு தொல்பொருள்துறை இயக்குனர் பெயருக்குதான் தொல்பொருள்துறை இயக்குனர் இப்போதுதான் தெரிகிறது ஐயா  அவர்கள் வேலை பார்த்தது சொந்தசாதிக்கென்று, பிச்சாவரம்  குடும்பம்தான் சோழர் பரம்பரை என்று நிறுவ தொல்பொருள்துறை இயக்குனர்  மெனக்கெட்ட விஷயம் காட்டிய தீவிரம் உலகறிந்தது இப்போதுதான் தெரிகிறது அவர் அதற்கு இடையூறாக உள்ள சிலசமூகங்களுக்கு வைத்துவிட்டு சென்றிருக்கும் சூனியங்கள் அதாவது அவர் எழுதிய முத்தரையர்கள் மற்றும் களப்பிரர் வரலாறு புத்தகங்கள் இதில் முழுக்க அவர் சொல்லவருவது கள்ளர்களை களப்பிரராக செய்திருக்கும் முயற்ச்சி இப்போது அவரது அடிவருடிகள் சிஷ்யர்கள் என கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் வலம்வரும் ஒருசிலர் மூலம் வெளிவந்துகொண்டுருக்கிறது,

இவர்கள் குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிராக குறிப்பாக தங்கள்  இனத்தை மதிக்காத இயல்புடைய இனங்களை குறிவைத்து காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகின்றனர், இதே நபர்கள் உடையானின் உடைவாள் என்ற  பெயரில் தேவர் இன மக்களுக்கும் பார்க்கவ குல மக்களுக்கும் இடையே இருக்கும் இணக்கமான நிலையை சீர்குலைக்கும் விதமாக எழுதினர், அதாவது உடையார் இனத்தவர் எழுதுவது போல. அது பலிக்காமல் போனது காரணம் சமூக வலைதளத்தில் செயல்படும் இரு சமூகத்தவரின் புரிந்துனர்வு. இது பல நடுநிலையாளர்களின் கண்டனத்துக்குள்ளானது, உடையார் இன எழுத்தாளர்களும் தங்கள் வலை தளங்களில் கண்டனத்தை தெரிவித்தனர். தற்ப்போது அது உடையானின் உடைவாள் பெயர் மாற்றப்பட்டு வேறு பெயரில் உலாவருகிறது.

இவர்கள் அடுத்த இலக்கு வேட்டுவர் கவுண்டர் வெள்ளாள கவுண்டர் தப்பி தவறியும் இவர்களுக்குள் இணக்கம் ஏற்பபட்டு விடக்கூடாது எப்போதும் இவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்க வேண்டும். இது தான் இவர்கள் நோக்கம் காரணம் கவுண்டர் இன மக்கள் இவர்களை மதிப்பது கிடையாது. முகநூலில் வேட்டுவர் போல வெள்ளாளரிடம் வாதம் செய்வது வெள்ளாரர் போல வேட்டுவரிடம் வாதம் செய்வது வேட்டுவர்களின் வரலாறு திருடப்படுவதாய் அவர்களிடம் வெள்ளாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை திணிப்பது. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில்  வேட்டுவர் ஆதரவு கிடைக்காத என்றுதான் எப்படியும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மதிக்கப்போவதில்லை என்றே இப்படி செயல்படுகின்றனர்.  

இதே போல் தேவர் சமூக மக்களிடையே உட்பிரிவு சண்டையை ஊக்குவிப்பது கள்ளர்களுக்கு எதிராக அகமுடையாரையும் அகமுடையாருக்கு எதிராக மறவரையும் கொம்பு சீவி விடுவது, இவர்கள் கவலை முக்குலத்தோரிடையே பெண்குடுத்து பெண்ணெடுப்பது இல்லையாம்.  இதில் இவர்களுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை ஒருவேளை புரோக்கர் கமிசன் கிடைக்காத வருத்தமோ என்ற ஐயம் வருகிறது. 

அரசியல் லாபம் மற்றும் ஒட்டுக்காக பலிகடா ஆக்கப்படும் முத்தரையர்கள், கள்ளர் இன வரலாறு இவ்வளவுதான் என்று இதுவரை யாரும் எழுதியது இல்லை ஏனெனில் கள்ளரில் ஒவ்வொரு பிரிவுக்கும் அரைய கள்ளர், அம்புநாட்டு கள்ளர், மேலூர் கள்ளர், நாட்டார் கள்ளர், பிரன்மலை கள்ளர் என தனி வரலாறு உள்ளது அது போல முத்துராஜாவில் முத்தரையர் வலையர் அம்பலகாரர் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனி வரலாறு உண்டு.

இரண்டு  சாதிக்கும்  பாண்டிய தொடார்பு, பல்லவ தொடர்பு, கங்கர் தொடர்பு, சோழ தொடர்பு, களப்பிரர் தொடர்பு, வேளிர் தொடர்பு என உள்ளது போல முத்தரையர் தொடர்பும் இரண்டு இனத்துக்கும் உண்டு இனப்பெயர்களான கள்வர் – வலையர் என இரண்டு இனக்குழுக்களும் முத்தரையர் பட்டம் கொண்டிருந்தது நிருபணமாகிறது.

மேலும் பல ஆய்வாளர்கள் வரலாற்று மேதைகள் சொன்னது கள்வர் முத்தரையர் ஒரே வகுப்பு என்று தான் ஆனால் பள்ளி இன ஆய்வாளர்கள் மட்டும் தான் கள்ளர்களை களப்பிரர் வட்டத்துக்குள் அடைத்து விடவேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளனர்.

அதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் கள்வர் கள்வன் 

கொடும்பாளூர் வேளிர்கள் கூட தங்கள் இனப்பெயரை கள்வன் மறவன் என்றே கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர் கள்வன் அமரகாலன் கள்ளன் ஆதிச்ச பிடாரி, மறவன் பூதி, மறவநீஸ்வரம் கோவில் கண்டதும் இவர்களுக்கு விளங்கவில்லையா,  பழுவேட்டைய மறவர்கள், முத்தரையர்கள், கள்வர்கள், என திருமண தொடர்பு கொண்ட வம்ச வழியினரை ஏன் இவர்கள் இவ்வளவு ஆர்வம் செலுத்தி பிரித்து காட்டுகின்றனர்.

கொடும்பாளூர் வேளிரை சுட்டும் கள்ளன், கள்வன் என்பது கள்ளர் சாதி இல்லையாம் ஆனால் களப்பிரரை சுட்டும் கள்வன் மட்டும் கள்ளர் சாதியாம்.

சுவன் மாறனை சுட்டும் கள்வன், கள்வர் கள்வன் கள்ளர் சாதி இல்லையாம் களப்பிரரை வென்ற காரணத்தினால் களப்பிரர் கள்ளராம்.

இவர்கள் சொல்லும் காரணங்கள் வேடிக்கையானது 


முத்தரையர் பல்லவருக்கு நண்பர் – களப்பிரர் எதிரியாம் சரி முத்தரையர் பாண்டியருக்கும் தான் நண்பர்கள் அதனால் பல்லவருக்கு எதிரி இல்லையா ? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற சொல் தான் நியாபகம் வருகிறது.

சிற்றரசுகள் பல நேரங்களில் பேரரசுகளை சார்ந்தே இருந்தாகவேண்டும் அது சூழ்நிலைக்கேற்ப ஆதரவு மாறுபடும். மூவேந்தரை வென்ற களப்பிரர்கள் சிற்றரசுகளாக திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மதுரை பகுதிகளில் அங்கங்கு தனிதனி குழுக்களாக அந்தந்த பகுதிகளில் உள்ள பேரரசுகளுக்கு உட்பட்டு தான் வாழ்ந்திருக்கும். அவர்கள் கங்கர் வழியினராகவும் இருக்கலாம் கள்வராகிய முத்தரயராகவும் இருக்கலாம் 

இன்றும் திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, வல்லம் என்று முத்தரையர்களாக கோலோட்சிய கள்வர் அரசு வழியினரே இன்றும் இப்பகுதிகளில் கள்ளர் முத்துராஜா இனமாக பெரும்பான்மையாக உள்ளனர், குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி, செந்தலையில் கள்ளர்களே மெஜாரிட்டி மக்களாக  உள்ளனர்.     

பின்நாளில் சாதிய பரிணாமத்தில் அடுக்குகளில் முரண்பட்டாலும் பழக்கவழக்கம் கலாசாரம் வாழ்விடம் என மிகவும் நெருக்கும் உள்ள சாதிகள் தான் கள்ளரும்  முத்தரையரும் தான் இதை யாரும் மறுப்பதிற்கில்லை. வாழ்விடத்தை நோக்கினாலே இவர்கள் தொடர்பு தெரியும் மேலும்  “விடியலை நோக்கி களப்பிரர்” வரலாறு எழுதிய ஐயா வரலாற்று பேராசிரியர் சவரிமுத்து கூட  கீழ் தஞ்சை பகுதி கள்ளர்கள் (திருக்காட்டுப்பள்ளி, செந்தலை,  துவாக்குடி வரை உள்ள கள்ளர்கள் மட்டும் ஏனைய கள்ளர்களை சொல்லவில்லை) முத்தரையர் சாதிகள் ஒரே கிளையினர் அதாவது கள்வர் குடியின் பிரிவுகளே என்று குறிப்பிடுகிறார். மேலும் கரிகாலன் தாய் வழியில்வந்த கள்ள மரபினரும்  கள்வர் வழிவந்த முத்தரைய கள்ளரும் ஒன்றாய் பல்லவன் சிம்ம விஷ்ணுவை எதிர்த்து மறைந்தது இருந்து தாக்க படைகள்  தங்கியிருந்த இடமே துவாக்குடி(இரண்டு குடி) கள்ளர் – முத்தரையர் என்கிறார். இன்றும் செம்பியமுதரையர்கள்(சோழர் + முத்தரையர்) , வங்காரமுத்தரையர் பட்டம் உடையவர்கள் கள்ளரில் உள்ளனர்.

இங்கு யாம் சொல்ல வருவது இன்று சாதிகளாக கள்வர் அரசு வேறு வேறாய் பரிணாமம் அடைந்து  விட்டது முத்தரைய கள்வர் கள்ளரிலும் உள்ளனர் முத்துராஜா இனத்தோடும் இருக்கலாம்  இது பிறப்பகுதிகளில் வாழும் கள்ளரையோ முத்துராஜா இனத்தையோ சொல்லவில்லை கள்வர் அரசு ஆட்சி செய்த  திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, வல்லம் போன்ற பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்.

இதைவைத்து பெரும்பிடுகு முத்தரையன் கள்ளர்சாதி என்று இமி அளவும் இங்கு கோரவில்லை கள்ளரிடம் போய் நமக்கும் அவங்களுக்கும் வரலாறு தொடரு இருக்குன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் அதேபோல முத்துராஜா விடம் போய் சொன்னாலும் நம்ப மாட்டாங்க ரெண்டு சாதியும் அவ்வளவு வறட்டு கவுரவம் பார்ப்பவர்கள், விட்டுகொடுத்து இறங்கிவராதவர்கள் காலமே இதற்கும் ஒருநாள் விடைகொடுக்கும். தற்ப்போது பிரச்சனை அதுவல்ல கள்வர்- கள்வனை வைத்து பின்னப்படும் பரப்பப்படும்  ஒட்டு அரசியலை கள்ளர் – முத்தரையர் சாதி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏற்க்கனவே இரு சாதிகளும் பெரிய அளவில் இணக்கமாக இல்லை இந்நிலையில் இதுபோல சமூக வளைய தளத்தில் பரப்பப்படும் செய்திகளை நம்பி உணசிவசப்பட்டு நம் இரு சமூகத்தவரும் வீண் வாதங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. 

இணையத்தில் செயல்படுபவர்கள் நன்கு சிந்தியுங்கள் !!  இந்த பிரச்சனையை யார் கிளப்புவது ? இதனால் அவர்களுக்கு எ ன்ன லாபம்? 

இதை கள்ளரும் ஆரம்பிக்கவில்லை முத்துராஜா இனத்தவரும் ஆரம்பிக்கவில்லை.

வடக்கு மாவட்டங்களில் உள்ள வன்னிய முத்தரையர் என்னும் பிரிவு முத்துராஜா மக்களை நீங்களும் நாமும் ஒன்னு என்று சொல்லி இணைத்து ஒட்டு அரசியலுக்கு இணையதளத்தில் செயல்படும் (வன்னிய சாதி) கும்பலே தற்ப்போது டெல்டா மாவட்டங்களை குறிவைத்து செயல்படுகிறது. இவர்கள் ஏற்க்கனவே திண்டுக்கல் பகுதி மற்றும் சில தென்மாவட்ட பகுதி முத்துராஜா மக்களை தங்கள் சாதி என பரப்புரை செய்துகின்றனர், வன்னியர் – முத்தரையர் சாதிகள் இணைந்து செயல்படுவதில் யாருக்கும் இங்கு எந்த வருத்தமும் இல்லை ஆனால் அரசியலுக்குகாக 1000 வருட வரலாறு என்று கல்வெட்டுகளை கிளறி உணர்வை தூண்டிவிட்டுதான் அரசியல் செய்ய வேண்டுமா?   

கள்ளர்கள் ஏற்கனவே ஏழு கட்சி வைத்து அரசியல் களத்தில் உள்ளனர் தேவரினமாக கொண்டால் அதில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட கட்சி உள்ளது ஏற்க்கனவே யார்பின்னால் செல்வது என்ற குழப்பம் உட்பிரிவு பிரச்னை  இதில் முத்தரைய மக்களை இணைத்து அரசியல் செய்ய வாய்ப்பே இல்லை, இதனால் இப்பிரச்சனையில் கள்ளர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை. ஆனால் முத்தரையர்கள் இன்னும் அமைப்பு ரீதியாகவே உள்ளனர் இதுவே அவர்களை வைத்து அரசியல் செய்ய இதுபோன்ற சக்திகள் துடிக்கின்றனர் வெளிப்படையாகவே தஞ்சை பகுதி இன்னும் சிலபகுதிகளில் பா.மா.கா செயலாளர்கள் முத்தரையர்கள் தான் என பரப்புரை செய்கின்றனர். 


                       இதில் பலிகிடா ஆக்கப்படுவது முத்தரையர்.


இக்கட்டுரைக்கு மாற்று கருத்து இருக்கலாம் வரலாற்றுககும் மாற்று கருத்து இருக்கலாம் ஆனால் கல்வெட்டில் பதிந்து மாறாது   

மீண்டும் சொல்கிறோம் இங்கு வரலாற்றை பேசி உறவு கொண்டாடி அரசியல் செய்யும் நோக்கம் நமக்கில்லை ஆனால் பின்புலத்தில் செயல்படும் சக்திகளை இணையத்தில் செயல்படும் இரு சமூகத்தவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே, ஏனென்றால் இரு சமூகமும் ஒருவரைஒருவர் நன்கு அறிவர் இருசமூகமும் உணர்ச்சிவசப்படும் சமூகம்.    

இப்போது தான் சமீபகாலமாக திருச்சி பகுதிகளில் நட்பாய் உள்ள இரு சமூக மக்களும் தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லி முத்துராஜா இனத்தவரும் பெரும்பிடுகு முத்தரையர் விழாவுக்கு வாழ்த்து சொல்லி தேவர் சமூக மக்களும் விளம்பர தட்டி வைக்கும் அளவு வந்துள்ளனர், நட்பு போதும் அதை ஒழுங்காய் பாதுகாப்போம் வருங்கால சந்ததியினர் இதுபோல பிரச்சனைகளில் சிக்கி மனிதநேயத்தை இழக்காமல் இருக்க பொறுப்புணர்ந்து செயல்படுவோம்.

இதை எமது கள்ளர் முத்தரைய நண்பர்களிடமும் கலந்து ஆலோசித்தே பின்பு இங்கு பதிகிறோம்.  

இப்பிரச்சணைக்கு காரணம் முத்தரயர்களின் அரசியல் களத்தில் உள்ள வெற்றிடமே.  

அமைப்பு ரீதியாக மட்டுமே உள்ள முத்தரைய மக்கள் விரைவில் அரசியல் களம் காண விரைந்து செயல்படுங்கள் இல்லையேல் இது போல் பிறசாதிகளுக்கு கொடிபிடிக்க நேரிடும்,

முத்துராஜா முத்தரைய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற முக்குலத்து தேவரினம் சார்பாகவும் தென்பாண்டி சிங்கங்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்…

உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள் :

தயவு செய்து நாகரீகத்தை கடைபிடியுங்கள்  இந்த தளத்தில் வெளியிடும்  காரணம் இந்த  படங்களை

எடுத்து மற்ற இனத்தை சண்டைக்கு இழுப்பதற்கு அல்ல  நம்  இனத்தின் ஆவணங்களை சேகரிப்பது மட்டுமே

வேறுஎண்ணங்களுக்கு  இந்த படத்தை உபயோக படுத்துவதை நான்  கண்டிக்கிறேன் அவர்கள்

இந்த ஆதாரத்தை பயன்படுத்தாதீர்

தயவு செய்து முகநூலிலும் வலைதளங்களிலும் நாகரீகத்தை கடைபிடியுங்கள் என கேட்டுகொள்கிறேன்.

 தஞ்சை  கள ஆய்வுகள் உதவி:

சிறப்பு நன்றி:

காலிங்கராய தேவர் அவர்கள்

 நன்றி ஆய்வுகளுக்கு துனை நின்ற ஆவணங்கள்:

EPIGRAPHIA INDICA

AND RECORD OF ARCHEOLOGICAL SURVEY OF INDIA

EDITED BY

PROFFESSOR KNOW.P.HD

AND

THOMAS M.A.HOX.PHD

VOL X111 1915-16

NO.10 SENDHALAI PILLAR INSCRIPTIONS

BY K.V. SUBRAMANIYA IYYER B.A.MR.AS(OOTACAMUND)

1897 RECORDS OF RAO BAHADUR VENKKAIYAH

This entry was posted in கள்ளர், தேவர், வரலாறு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *