தென் இந்திய கல்வெட்டு.எண்.50-1916
செய்தி:
சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ஊரை சார்ந்த மறவர்கள் “ஒரு சொல் வாசக பேரையூரன் குடிகாடு” எண்ற பெயரில் விளங்கிய நிலத்தை வேலங்குடி மறவர்கள் இறையிலி திருநாமத்துக்கு காணியாகக் கோயிலுக்கு விற்றுதந்தனர். இந்நில உரிமையை பற்றிய கல்வெட்டு தரவுகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடதக்கன.
காலம்:15-ஆம் நூற்றாண்டு.
சுபமஸ்து சகாத்தம் 1423ந் மேல் செல்லா நின்ற துன்மதி6 வருசம் புரட்டாதி 20
புறமலை நாட்டுத் திருக்கோளக்குடி உடையார் திருக்கோளக்குடி ஆண்ட நாயனார் ஆதிசண்டேஸ்வர தேவர்
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் தெற்றுவரா கண்டன் சங்கரன் உட்பட்டாரும் விசையாதேவன் , அரியவன் உள்ளிட்டமோம்
திருநாமத்துக்காணி விலைப் பிறமானம் பன்னிக் குடுத்த ப்ரிசாவது கன்னாடக வாணமும்
இறை தரமும் மிகுத இறுக்கும்படிக்கு ஒரு பேர்க்கும் இல்லாதப்டியாலே எங்க்ள் ஊரார் கைய்யில் தாங்கள் முன்னால் கொண்டுடைய
‘ஒரு வாசகப் பேரையூரன் குடிக்காடு விற்க கொள்வாருளீரோ என்று பலகாலும் நாங்கள் கூறுகையில் இன்நாயனார் ஆதிசண்டேஸ்வர தேவர் வேலங்குடி ஊரார் கையில் முன்னாள் திரு நாமத்துக்காணியாக கொண்டது என்று இக்குடிகாட்டுக்கு எல்லையும் புர்வும் ஒக்க ஒரு சொல் வாசக்
பேரையூரன் குடிகாடு கல்வெட்டு காட்டுகையில் நாங்கள் நெடுநாள் துடங்கி இன்று வரைக்கு தரு காசும் இறுத்துப் பற்றி அனுபவித்து வருகையில் இக்குடிக்காடுக்கு எங்கள் கைய்யிலே சாதன்
இருந்து காடுகையினாலும் பற்றாளனை தள்ள ஒண்ணாதென்று இந்நாயனார் திருக்கோளக்குடி ஆண்ட நாயனார் ஆதிசண்டேஸ்வர தேவருக்கு மீளவும் எம்மலிசந்து விலக்குற விற்று பொருளறப் பற்றிக்கொண்டு
ஒழுகிலும் புரவிலும் இறங்க மேற்றி இக்குடிகாடுக்கு உண்டான இறை தரம் ஊழியம் எப்பேறபட்டதானவும்
நாங்களே யிறுத்து போக இப்படியாக இன்னாயாற்கு இறையிலி திருநாமத்துக்கானியாக சந்திராதித்தவற் சொல்ல கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தோம்
திருக்கோளக்குடி உடைய நாயனார் ஆதிசண்டேஸ்வர தவருக்கு தெற்று வரா கண்டன் சங்கரன் உள்ளிட்டோரும் விசையர்தேவன் அரியவன்
உள்ளிட்டோர்களோம் இப்படிக்கு நயினான் அரசுக்கு வாய்த்தான் எழுத்து இப்படிக்கு விசையர்தேவன் அரியவன் உள்ளிட்டோர் எழுத்து இப்படிக்கு தெற்று வரா கண்டன் சங்கரன் உள்ளிட்டோர்
எழுத்து
இப்படிக்கு சங்கர வீரபாண்டிய தேவன் உள்ளிட்டார் எழுத்து இப்படிக்கு சீவல்லவ தேவன் உள்ளிட்டார் எழுத்து
இப்படிக்கு இப்பிறமாணம் எழுத்தின்மைக்கு வேலங்குடி கணக்கு நிலைமை அழகிய வேளார் எழுத்து.
பின் குறிப்பு:
வேலங்குடி ஊரில் அமைந்துள்ள ஆதிசண்டேஸ்வரர் கோயிலுக்கு “ஒரு சொல் வாசக பேரையூரன் குடிகாடு” என்ற நிலங்களை வழங்கிய மறவர்களான கண்டன் சங்கரன்,விசையர் தேவன்[விஜயதேவர்],அரியவன் முதலியவர்களுக்கு
ஊர் பெரியதனத்து மறவர் தலைவர்களான சங்கரபாண்டிய தேவனும் சீவல்லவதேவனும்
சாட்ச்சி பிறமாண கையொப்பம் இட்டுள்ளனர்.இது கல்லிலும்,செம்பிலும் கல்வெட்டாக
வடிவமைத்தது வேலங்குடி நிலைமை கனக்கரான அழகிய வேளார் அவர்கள்
செய்தி விபரம்:
திருக்கோளக்குடிக் கல்வெட்டுகள்.,…….அர.அகிலா,மு.நளினி
இப்பகுதிக்குகான கள ஆய்வுகள் திருமதி தமிழரசி வேலுசாமிசெட்டியார்,திருமதி.சிவ அரசி முத்துகாளத்தி ஆகியோர் அமைத்திருக்கும் “திரு.கன்னம்மாள் இராசமானிக்கனார் அரக்கட்டளை”.