இன்று தேவரின இளைஞர்கள் பெரும்பாலானோர் நம்முடைய அரசியல் தேவையை நன்குணர்ந்துள்ளனர் ஆனாலும் அவர்களுக்கு யாரை நம்புவது எந்த தலைமையை ஏற்பது எந்த கட்சிக்கு உழைப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
படித்த இளைஞர்கள் திராவிடத்தை வெறுக்கின்றனர் ஆனால் தலைமைகள் நம்மை நம்ப மறுத்து அதை விட மறுக்கின்றனர் அவர்கள் விட நினைத்தாலும் திராவிடம் அவர்களை சும்மா விடாது. தற்போது திராவிடத்தை எதிர்ப்பேன் என்று கூறும் கட்சி சிறு நம்பிக்கையை கொடுத்தாலும் இது தற்காலிகமே, நம் இளைஞர்கள் அனைவரும் தற்போது இதை ஆதரித்தாலும் எதிர்காலத்தில் இதில் மாற்றம் இருக்காது என்று உறுதியாக சொல்லமுடியாது. இந்த கட்சி சிறு அரசியல் எழுச்சி பெற்றாலும் அடுத்த முறை திராவிடம் சூழ்ச்சியால் அதை முடக்கும் வாய்ப்பு அதிகம்.
அப்போது நம் இளைஞர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கவேண்டிவரும். இது நமக்கு மட்டுமில்லாமல் நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் பெரும் பின்னடைவாக இருக்கும். அதன் பிறகு நாம் நம் இனத்தின் சிறு நம்பிக்கையை பெற முடியாது.
ஒரு அரசியல் கட்சிக்கு பலமான இரண்டு காரணிகள், 1) செயல்படும் தொண்டர்கள் 2) தொண்டர்களை உணர்ந்த தலைவர். இந்த இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டும் ஒருவரை இன்னொருவர் ஏமாற்ற நினைத்தால் இழப்பு இனத்திற்கு என்பதை உணர்ந்தவறாக இருவரும் இருக்கவேண்டும். இப்போது நம் இனத்தில் இந்த இருவரையும் காண்பதரிது.
இப்போதுள்ள தொண்டர்கள் தலைவரின் வருகை அன்று மட்டும் கோஷமிடுவதும் கொடிபிடித்து ஊர்வலத்தில் கலந்துகொண்டு உணர்வை வெளிப்படுத்துவது. அடுத்தநாள் தன் வேலைகளில் கவனம் செலுத்தவது (நாம் குரு பூஜைக்கு செல்வது போல). நம் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை (தேர்தல் சமயத்தில் மட்டும் பல முறை) மக்களை சந்திப்பது, முக்கிய நபர்களின் வீட்டு விழாக்களில் கலந்துகொள்வது, அதோடு தங்கள் சமுதாய அரசியலை முடித்துகொள்கின்றனர். மக்களின் தேவையை உணராமல் அவர்களின் நம்பிக்கையை இழக்கின்றனர். திராவிடம் இதை சரியாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை அடிமைபடுத்துகிறது.
முன்பு நம் சமூகஅமைப்பில் குல தெய்வ வழிபாடுகள், ஊர் திருவிழாக்கள் மக்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் உறவுகள் பலப்படும்.
ஒவ்வொரு ஊருக்கும் தலைவர் போன்று ஒருவர் அனைத்தையும் வழிநடத்துவார். ஆணிவேராய் இருந்த அருமையான இந்த முறையை சிறிது சிறிதாக சிதைந்து தற்போது உடன்பிறந்தவனையும், உயிராய் பழகியவனையும் எதிரியாக்கி உள்ளது இந்த நவீனம். இன்று தான் யார் என்ற கேள்விக்கு இங்கு பலரிடம் பதில் இல்லை. வரலாறை தெரிந்துகொள்ள சிறு அடிப்படை கட்டமைப்பு கூட நம்மிடம் இல்லை பெற்றோர்களும் அதில் ஆர்வம் செலுத்துவதில்லை. அதன் தாக்கம் கள்ளர் நாடுகளும், மறவர் சீமைகளும், அகமுடையார் கோட்டைகளும் இன்று சிதறிகிடக்கின்றது. ஆடம்பரமும் பொருளாதாரமும் நம்மை பிரித்து எதிரிக்கு வழியமைத்து கொடுத்துள்ளது.
நாம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள தேவைகள் :
1) உறுதியான அடிப்படை கட்டமைப்பு
2) அரசியலில் அதிகாரம்
3) பொருளாதார முன்னேற்றம்
4) சிறந்த உயர்கல்வி
5) அரசாங்க வேலைகள்
6) சட்ட பாதுகாப்பு
7) வரலாற்றை பாதுகாத்தல்
இதற்க்கான தீர்வை நோக்கிய ஒரு லட்சியத்தை வடிவமைத்து அரசியல் பாதை அமைப்பதே இன்றைய நம் தேவையாகும்.
ஒரு புதிய சிறந்த கட்டமைப்பை எப்படி உருவாக்கலாம்?
இன்று இணையத்தில் தோராயமாக 5000 உறவுகள் இணைந்துள்ளோம். அனைவரின் எண்ணமும் ஒன்றாகத்தான் உள்ளது. அதை செயல்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களில் அல்லது தெருக்களில் குறைந்தது 10 பேர் கொண்ட (15 முதல் 25 வயது) தலைமை இல்லா ஒருங்கிணைந்த இளைஞர்கள் (அரசியல், சினிமா, சாதி, மத சாயமற்ற) அமைப்பை உருவாக்கி (முடிந்தவரையில் ஒரே அமைப்பாக) ஊரில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் பாகுபாடு இன்றி பொது காரியங்களில் பங்கேற்ப்பது. உயர்கல்வியில் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குதல்.
வேலை வாய்ப்புகளை பற்றி செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்துதல். அரசாங்க தேர்வுகளை பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துதல் அதற்க்கான புத்தகங்களை வழங்குதல். வாய்ப்பு கிடைக்கும் போது திராவிட அரசியல் சூழ்ச்சி பற்றி (முக்கியமாக பெண்களுக்கு) அவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்குங்கள். முன்னோர்களின் வரலாறுகளை பற்றி கூறுங்கள் அதனை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றி எடுத்துகூறுங்கள். தொடக்கத்தில் பொதுமக்களிடம் இருந்து நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். மறந்தும் அதிகார தோரணையோ அல்லது வன்முறையோ பயன்படுத்தவேண்டாம்.
உங்கள் சொந்த பகைமை அல்லது சுயலாபத்திற்காக அமைப்பை பயன்படுத்த நினைத்தால் வீழ்வது உன் அடுத்த தலைமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சிறு தவறு செய்தாலும் உங்கள் செயல் மொத்தமும் கேள்விக்குறியாகும். அனைத்தையும் மீறி சிறப்பான செயல்பாட்டை நீங்கள் முன்னெடுத்தால் திராவிடம் உங்களை விலை பேசும் இல்லை என்றால் சூழ்ச்சி செய்து வீழ்த்த நினைக்கும். சில இக்கட்டான சூழ்நிலைகள் வரலாம், அப்போது உங்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை இணையத்தில் ஏற்படுத்திகொல்லுங்கள். அனைத்தையும் கடந்து குறைந்த பட்சம் இரண்டு வருடம் பயனித்தீர்களேயானால் ஒட்டுமொத்த ஊரில் அனைவரின் நம்பிக்கையை பெற முடியும்.
அந்த நம்பிக்கையை வாக்காக மாற்றவும் முடியும். ஐந்து வருடத்தில் திராவிடத்திற்கு நிகராக நம்மால் ஒரு படையை திரட்ட முடியும்.
இது போன்று அனைத்து ஊரிலும் உள்ள அமைப்புகளும் மறைமுக தொடர்பில் இருக்க வேண்டும். சில ஊர்களில் செயல்படமுடியாவிட்டாலும் நாம் மிகுதியாக உள்ள பகுதிகளில் செயல்படுத்தினாலே நாம் ஒரு நல்ல தொடர்பை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த முடியும். நமக்கு சாதகமான நேரம் வரும் பொழுது ஒரு மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதற்க்கு எந்தவித விளம்பரமோ, பத்திரிக்கை அழைப்போ இருக்ககூடாது. கைப்பேசி அழைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
நம் நோக்கம் ஐந்து லட்சம் இளைஞர்களை ஒருங்கிணைப்பதாக இருக்கவேண்டும்(குறைந்தது இரண்டு இலட்சம்). இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நமக்கான விலைபோகாத அரசியலை உருவாக்க முடியும். அதன் பிறகு எந்ததெந்த தலைவர்கள் இனத்திற்கு உண்மையாக உள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களை நாம் தலைமை ஏற்க்க அழைப்போம். அப்போதுதான் நம் மீது தலைவர்களுக்கு நம்பிக்கை இருக்கும், திராவிடத்தை எதிர்க்க துணிவு பிறக்கும்.
தலைவர்களும் அப்போதுதான் உணர்வார்கள் அவர்களுக்காக இனம் இல்லை என்பதை. தலைவர்களை நம்பி தொண்டர்கள் இல்லை என்பதை. கட்சியை நம்பி மக்கள் இல்லை என்பதை. தலைவர்கள் விலை பேசப்பட்டால் அடிப்படை கட்டமைப்பு இனத்தின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும். அடுத்த தலைவரை எளிதில் உருவாக்கும். சமுதாயம் வளமான வாழ்வு நோக்கி பயணிக்கும். அரசியலில் மற்றும் அரசு அதிகாரிகள் துணை கொண்டு நம் பயணம் தொடரும். நாளைய தலைமுறை வளமான பாதுகாப்பான வாழ்வுபெறும்.
2 Responses to தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது??..